சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டாடா டியாகோ எலெக்ட்ரிக் (Tata Tiago EV). இது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்பதால்தான், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டியது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

எதிர்பார்த்ததை போலவே, மிகவும் குறைவான விலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நம்பவே முடியாத மிகவும் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 24 kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 315 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொன்று 19.2 kWh பேட்டரி ஆப்ஷன் ஆகும்.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புத்தம் புதிய டியாகோ எலெக்ட்ரிக் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 4 சார்ஜிங் ஆப்ஷன்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இதன்படி 15 A சாக்கெட், 3.3 kW AC சார்ஜர், 7.2 kW AC ஹோம் சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் ஆகிய 4 ஆப்ஷன்களின் மூலம் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்ய முடியும். இதில், DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, வெறும் 57 நிமிடங்களிலேயே, 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்றாலும் கூட, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் பேட்டரி, ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தூரம்) மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள் சிறப்பாக உள்ளன. அதேபோல் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் வசதிகளுக்கும் கூட சற்றும் பஞ்சமில்லை.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இதன்படி டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் கனெக்டட் கார் தொழில்நுட்பமும், மிகவும் விலை குறைவான டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் இடம்பெற்றுள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இதுதவிர ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகளும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது மல்டி-மோடு ரீஜென் பிரேக்கிங் (Multi-mode Regen Braking) வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

பொதுவாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பில் தலைசிறந்து விளங்கும். டியாகோ எலெக்ட்ரிக் காரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பிற்காக ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (India's Most Affordable Electric Car) என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் சொந்தமாக்கியுள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.79 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான ஒரு எலெக்ட்ரிக் காராக கருதப்படுகிறது. ஆனால் இது அறிமுக சலுகை விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும்.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

அதன்பின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்குகின்றன. அதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கு விற்பனையாகி கொண்டுள்ள 100 எலெக்ட்ரிக் கார்களில், தோராயமாக 85 எலெக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள்தான். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் டியாகோ எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

சாமானிய மக்களுக்கும் எலெக்ட்ரிக் கார்... கற்பனைக்கு எட்டாத குறைவான விலையில் அறிமுகமானது டாடா தயாரிப்பு!

இந்த எலெக்ட்ரிக் கார் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.

Most Read Articles
English summary
Tata tiago electric car launched in india price range features
Story first published: Wednesday, September 28, 2022, 13:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X