பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா... இனிமேல் சைலென்ட்டா இருக்கணும்

டாடா நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்திய டியாகோ இவி கார் உலகிலேயே குறைந்த விலை இவி காராக அறிமுகமாகியுள்ளது. இது எப்படி உலகின் குறைவான விலையாகக் கருத முடியும்? முழு தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

இந்தியா முழுவதும் பலராலும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ இவி கார் சமீபத்தில் அறிமுகமாகிவிட்டது. அதுவும் யாரும் எதிர்பாராத விலையான ரூ8.49 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த இவி கார் வெளியானது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. சொல்லப்போனால் இந்தியாவில் ரூ10 லட்சத்திற்குள் உள்ள தனி நபர்கள் வாங்கக்கூடிய அளவில் அறிமுகமாகியுள்ள இவி கார் இதுதான். இதனாலேயே இந்த குறித்து அதிகம் பேசப்படுகிறது.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

இந்த கார் இந்தியாவிலேயே குறைந்த விலை இவி கார் என்று நாம் எல்லோருக்கும் இதன் விலை அறிவிக்கும் போதே தெரிந்துவிட்டது. ஆனால் இந்த இந்த கார் தான் உலகிலேயே குறைந்தவிலை இவி கார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. இருங்க உடனே கூகுளை திறந்து உலகின் குறைந்த விலை இவி கார் எது எனத் தேடப் போக வேண்டாம். இந்த செய்தியை முழுமையாகப் படித்தால் உங்களுக்கு உண்மை என்னவென்று புரியும்.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

சீனாதான் குறைந்த விலை இவி கார்களின் தலை நகரம் என நாம் எல்லோருக்கும் தெரியும். அதிகாரப்பூர்வமாகச் சீனாவைச் சேர்ந்த சாங்க்லி என்ற நிறுவனம் தயாரித்த சாங்க்லி மினி என்ற கார் தான் உலகிலேயே குறைந்த விலை இவி காராக இருக்கிறது. இந்த காரின் விலை வெறும் 900 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் வெறும் ரூ75,000 தான். இப்படி இருக்கும் போது எப்படி டாடா டியாகோ இவி கார் உலகின் மிகக் குறைந்த விலை இவி கார் என சொல்கிறோம் எனக் குழப்பமாக இருக்கிறதா? பொறுமையாக இருங்கள் விளக்குகிறோம்.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

சீனாவின் சாங்க்லி மினி இவி கார் லிட் ஆசிட் பேட்டரியில் இயங்கும் திறன் கொண்டது. அதனால் அதன் ரேஞ்ச் குறைவு தான். மேலும் இந்த காரின் வடிவமைப்பு ஒரு கோல்ஃப் கார்ட் காரின் வடிவமைப்பைப் போன்றது. இந்த காரில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் உள்ளிட்ட பல விஷயங்கள் மிகவும் விலை மலிவானது. சாங்க்லி நிறுவனம் இந்த காரை ஒரு மைக்ரோ மொபிலிட்டி காராகவே அறிமுகப்படுத்தியது. அதாவது ஒரு சிறிய தெருக்களுக்குள் பயணிப்பதற்கு, அல்லது மிகச் சில கி.மீ மட்டுமே பயணிக்க இந்த காரை அறிமுகப்படுத்தியது.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

அதனால் இந்த காரை ஒரு முழு வடிவ காராக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னதான் இது காராக இருந்தாலும் ஒரு முழு பயணிகள் வாகனத்தின் பலனை இந்த கார் பூர்த்தி செய்யவில்லை. ஆனால் டாடாவின் டியாகோ இவி கார் அப்படியல்ல இது ஒருமுழுமையான கார். காருக்கான அத்தனை அம்சங்களும் இந்த காரில் கச்சிதமாக இருக்கிறது. இதை ஒரு கார் என எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லாம். இதன் விலை ரூ8.49 லட்சம் என் விலையில் ஆரம்பமாகிறது.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

சீனாவின் கார் தயாரிப்பாளர்களைப் புறம் தள்ளிவிட்டுப் பார்த்தால் அடுத்த குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்றால் அது ஸ்கோடா CITIGOe iV எனச் சொல்லிவிடலாம். இந்த கார் 15 ஆயிரம் பவுண்டுகள் என்ற விலையில் விற்பனையாகிறது. ஸ்கோடா நிறுவனத்தின் 4 சீட்டரில் வந்த முதல் எலெக்ட்ரிக் கார் இது தான். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ13 லட்சமாகும். அடுத்தாக சியட் இ-மீ எலெக்ட்ரிக் என்ற கார் 16,000 பவுண்ட் என்ற விலையில் விற்பனையாகிறது. இந்த கார் இந்த கார் கிட்டத்தட்ட ஸ்கோடா CITIGOe iV காரின் ரீபேட்ஜ் வெர்ஷன் தான்.

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

அடுத்தாக போக்ஸ்வேகன் நிறுவனம் ஃபியட் 500e என்ற காரை விற்பனை செய்கிறது. இந்த காரின் விலை 20 ஆயிரம் பவுண்ட்கள் இந்திய மதிப்பில் ரூ17.31 லட்சமாகும். இவை எல்லாமே டாடா டியாகோ காரை விட விலை அதிகம் தான். அதனால் டாடா டியாகோ காரை உலகின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். டாடா டியாகோ காரின் பேஸ் வேரியன்டின் விலை தான் ரூ8.49 லட்சம் ஆனால் இதன் டாப் வேரியன்டின் விலை வேறு

பொம்மை காரை எல்லாம் வெச்சு சீன் காட்டக் கூடாது... சீனாவின் மூக்கை உடைத்த டாடா . . . இனிமேல் சைலென்ட்டா இருக்கணும் . . .

டாடா டியாகோ காரின் டாப் வேரியட்டாக XZ+Tech LUX என்ற வேரியன்ட் 24 கி.வாட்ஹவர் பேட்டரி பேக் உடன் ரூ11.79 லட்சம் என்ற விலையில் தான் விற்பனைக்கு வருகிறது. இந்த விலையை ஒப்பிட்டாலும் சர்வதேச கார் விலையை ஒப்பிடும் போது கடும் போட்டியைத் தரக்கூடிய விலை தான். இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே, இது போக காருக்கான வரி, சலுகை உள்ளிட்ட விஷயங்கள் கூடுதலாகச் சேரும் என்பது நாம் இங்கே குறிப்பிட வேண்டியது.

Most Read Articles
English summary
Tata Tiago ev became the world s cheapest electric car know how
Story first published: Thursday, September 29, 2022, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X