இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

மிகவும் விலை குறைவான டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் சூப்பரான வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் தற்போது முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. டிகோர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் (Tata Nexon EV) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்கள்தான் இதற்கு காரணம்.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

தற்போதைய நிலையில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களையும்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இதுதவிர நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

இந்த வரிசையில் மேலும் ஒரு எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அது இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும் (Tata Tiago EV). டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் 28ம் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

அதற்கு முன்னதாக டியாகோ எலெக்ட்ரிக் காரின் டீசர் புகைப்படத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமூக வலை தள பக்கங்களில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள ஒரு சில வசதிகள் குறித்த தகவல்கள் நமக்கு தெரியவந்துள்ளன.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

இதன்படி டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) மற்றும் மல்டி-மோடு ரீஜென் ஃபங்ஷன் (Multi-mode Regen Function) ஆகிய வசதிகள் இடம்பெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கும், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

அதாவது டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் உள்ள அதே பேட்டரி தொகுப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது 26kWh பேட்டரி தொகுப்பு ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 74 பிஹெச்பி மற்றும் 170 என்எம் டார்க் ஆக இருக்கலாம். இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மல்டி-மோடு ரீஜென் ஃபங்ஷன் ஆகிய வசதிகள் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் இல்லை.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் (India's Most Affordable Electric Car) ஆகும். 12.49 லட்ச ரூபாய் முதல் 13.64 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

ஆனால் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை இதைக்காட்டிலும் மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டிகோர் எலெக்ட்ரிக் கார் பெறவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

எனவே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை (Tata Altroz EV) டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

இந்தியாவிலேயே விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! டாடாவின் புதிய தயாரிப்பில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்கா!

இதுதவிர பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Tata Punch EV) விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே தற்போதைய நிலைமையை போலவே எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கையே ஓங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Most Read Articles

English summary
Tata tiago ev features
Story first published: Monday, September 19, 2022, 9:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X