ஈ மொய்க்கற மாதிரி கூட்டம் மொய்க்குது! விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா!

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) கடந்த செப்டம்பர் 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை மிகவும் குறைவு என்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையை வெறும் 8.49 லட்ச ரூபாயாக மட்டுமே டாடா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.79 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், அறிமுக சலுகை விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என டாடா அறிவித்திருந்தது.

ஈ மொய்க்கற மாதிரி கூட்டம் மொய்க்குது! விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு இவ்ளோ பேர் ஆர்டர் குடுத்துட்டாங்களா!

இந்த சூழலில், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் கடந்த அக்டோபர் 10ம் தேதியில் இருந்து தொடங்கின. முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் ஒன்றுக்கு ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்தியாவின் புரட்சிகரமான தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பால் உற்சாகம் அடைந்த டாடா நிறுவனம், அறிமுக சலுகை விலையை மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு நீட்டித்தது. அதாவது ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள விலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் கிடைக்கும். இந்த 20 ஆயிரம் பேரும், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மாதத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் கிடைத்துள்ளன. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 19.2 kWh மற்றும் 24 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும். இதில் முதலாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இரண்டாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவான விலையில், பல்வேறு வசதிகளுடன் கிடைக்க கூடிய ஒரு முறையான எலெக்ட்ரிக் காருக்கு இது மிகவும் சிறப்பான 'ரேஞ்ச்' ஆக கருதப்படுகிறது. இந்த பேட்டரிகளை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையின் மூலமாக சார்ஜ் செய்ய முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதன்படி DC ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனை பயன்படுத்தினால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 57 நிமிடங்களில் வெறும் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்கும் பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் சிறிய காலம் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

டெலிவரி பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விற்பனை விபரங்கள் வெளியாகும். 20 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் குவிந்துள்ள காரணத்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

Most Read Articles

English summary
Tata tiago ev receives over 20000 bookings
Story first published: Thursday, November 24, 2022, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X