டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது

டாடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் காரை இயக்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்ற விபரம் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே (எக்ஸ் ஷோரூம்). இதன் மூலம் இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

ஆனால் இது அறிமுக சலுகை விலை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்த விலையில் விற்பனை செய்யப்படும். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் முன்பதிவு பணிகள் வரும் அக்டோபர் 10ம் தேதியில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

அதே நேரத்தில் டெலிவரி பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 24 kWh மற்றும் 19.2 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும். இதில், 24 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என கூறப்பட்டுள்ளது.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

மறுபக்கம் 19.2 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ரேஞ்ச் என்பது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்க கூடிய தொலைவு ஆகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் என கருதப்படுகிறது. விலை குறைவான ஒன்றாக இருந்தாலும், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

இதில், 45 கனெக்டட் கார் வசதிகள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி உடன் கூடிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் ஓஆர்விஎம்கள் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

மேலும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற வசதிகளையும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எலெக்ட்ரிக் கார் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

இந்த வரிசையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் குறித்த தகவல் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை இயக்குவதற்கு எவ்வளவு செலவு ஆகும்? என்பது குறித்த தகவல்தான் அது. இந்த புதிய தகவல் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் ஆழ்த்தலாம்.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு மின்சாரத்திற்காக வெறும் 60 பைசாவை மட்டும் செலவிட்டால் போதும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. உதாரணத்திற்கு ஒரு பெட்ரோல் கார் லிட்டருக்கு 15 கிமீ மைலேஜ் வழங்குகிறது என வைத்து கொள்வோம்.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய் என வைத்து கொள்ளலாம். அப்படியானால் அந்த காரை ஒரு கிமீ இயக்குவதற்கு பெட்ரோலுக்காக சுமார் 7 ரூபாயை செலவிட வேண்டும். இங்கே நாம் உதாரணமாக எடுத்து கொண்டுள்ள பெட்ரோல் காரில் 100 கிமீ பயணம் செய்தால், எரிபொருளுக்காக 700 ரூபாயை செலவிட வேண்டியிருக்கும்.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

ஆனால் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணம் செய்தால் மின்சாரத்திற்காக வெறும் 60 ரூபாயை செலவிட்டால் போதுமானது. இந்த வித்தியாசம் உண்மையிலேயே மிகப்பெரியது. இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் புது எலெக்ட்ரிக் காரில் 100 கிமீ பயணிக்க இவ்ளோதான் செலவாகுமா! பெட்ரோல், டீசல் கார்களின் கதை முடிந்தது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார், பன்ச் எலெக்ட்ரிக் கார் போன்ற புதிய மாடல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த புதிய எலெக்ட்ரிக் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து விற்பனைக்கு வரும்.

Most Read Articles
English summary
Tata tiago ev running cost
Story first published: Wednesday, October 5, 2022, 7:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X