டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இந்தியாவின் மிக பெரும் கமர்ஷியல் வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் சந்தையில் யோதா 2.0, இந்த்ரா வி50 மற்றும் இந்த்ரா வி20 பை-ஃப்யுல் என்ற 3 புதிய பிக்-அப் ட்ரக் வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய டாடா பிக்-அப் ட்ரக்குகளை பற்றிய முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

யோதா 2.0

டாடா நிறுவனத்தின் யோதா பிக்-அப் ட்ரக் ஆனது யோதா 2.0 என்ற பெயரில் புதிய தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஹெட்லைட்களை இணைத்தவாறான பெரிய க்ரோம் பார் உடன் புதிய க்ரில் என தோற்றத்தில் சில மாற்றங்களை யோதா 2.0 பெற்று வந்துள்ளது. அதேபோல் முன்பக்கத்தின் கீழ்பகுதியில் ஏர்டேம் அமைப்பின் வடிவமும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இதன் மூலமாக இரு பக்கங்களிலும் செவ்வக வடிவில் குழிகளை ஃபாக் விளக்குகளுக்காக இந்த பிக்-அப் ட்ரக் வாகனம் பெற்றுள்ளது. புதிய யோதா 2.0 வாகனத்தில் புதிய பம்பர் மற்றும் ஃபெண்டர்கள் என இரண்டும் உலோகத்தால் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்த புதிய யோதா வாகனத்தை சிங்கிள் கேப் மற்றும் குழு கேப் தேர்வுகளில் வாங்கலாம். யோதா 2.0 பிக்-அப் ட்ரக்கில் 2.2 லிட்டர் டீசல் என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொருத்தியுள்ளது.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த வாகனத்தினை 4x4 மற்றும் 4x2 ட்ரைவ் தேர்வுகளில் வாங்க முடியும். பிரிவிலேயே சிறந்ததாக க்ரேட்-அபிளிட்டியை 30% ஆக கொண்டுள்ளதால், புதிய யோதா 2.0 வாகனத்தை எந்தவொரு கடினமான சாலைகளிலும் எளிதாக ஓட்டி செல்ல முடியும்.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

அதிகப்பட்சமாக 2000 கிலோ வரையிலான பொருட்களை சுமந்து செல்லக்கூடியதாக யோதா 2.0 உள்ளது. அதேநேரம் இந்த பிக்-அப் ட்ரக்கை 1200 (அ) 1500 (அ) 1700 கிலோ சுமக்கும் திறனிலும் வாங்கலாம். யோதா 2.0 பிக்-அப் ட்ரக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.9.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இந்த்ரா வி50 & வி20 பை-ஃப்யுல் ட்ரக்குகள்

டாடா தற்போது அறிமுகப்படுத்தியுள்ள 2வது பிக்-அப் ட்ரக் வாகனமான இந்த்ரா வி50-இல் 1500 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை தாராளமாக ஏற்றி செல்ல முடியும். யோதா 2.0 உடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவு என்றாலும், பின்பக்க லோடு பாடி ஆனது இந்த்ரா வி50 வாகனத்தில் கிட்டத்தட்ட 2,960மிமீ ஆகும்.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இந்த்ரா வி50 பிக்-அப் ட்ரக்கில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த டீசல் என்ஜினில் இருந்து அதிகப்பட்சமாக 220 என்எம் டார்க் திறன் வரையில் பெற முடியும். டாடா இந்த்ரா வி50 பிக்-அப் ட்ரக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.8.67 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை காட்டிலும் மூன்றாவதாக நாம் பார்க்கவுள்ள பிக்-அப் ட்ரக் தான் இவற்றில் ஹைலைட் ஆனது ஆகும்.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

ஏனெனில் இந்த்ரா வி20 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த பிக்-அப் ட்ர்க் ஆனது இந்தியாவின் முதல் பை-ஃப்யுல் பிக்-அப் ட்ரக் வாகனமாகும். அதாவது இந்த்ரா வி20 -ஐ பெட்ரோலிலும், இயற்கை எரிவாயுவிலும் மாற்றி மாற்றி உபயோகப்படுத்தலாம். இந்த ட்ரக்கின் பேலோடு திறன் ஆனது 1000 கிலோ ஆகும். அதாவது, அதிகப்பட்சமாக ஆயிரம் கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை இந்த வாகனத்தில் ஏற்றி செல்ல முடியும்.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இந்த்ரா வி20 வாகனத்தில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் பை-ஃப்யுல் என்ஜின் அதிகப்பட்சமாக 106 என்எம் வரையிலான டார்க் திறனை வாகனத்திற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இந்த வாகனத்தின் அதிகப்பட்ச ரேஞ்ச் 700கிமீ-கள் ஆகும். யோதா பிக்-அப் ட்ரக்கை போன்று, இந்த்ரா பிக்-அப் ட்ரக்குகளின் தோற்றத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மெருக்கேற்றியுள்ளது.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

இதன்படி இந்த்ரா பிக்-அப் ட்ரக்குகளில் புதிய க்ரில் அமைப்பு மற்றும் சில்வர் ஃபினிஷிங் உடன் புதிய தாழ்வான ஏர் டேம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து மற்ற முக்கியமான அப்டேட்கள் என்று பார்த்தால், இந்த பிக்-அப் ட்ரக்குகளின் உட்புற கேபினில் கூடுதல் இடவசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுனர் & பயணிகளால் உட்புற கேபினிலேயே நடக்கவும் முடியும். இவற்றுடன் ஏசி மற்றும் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை உள்ளிட்டவையும் இந்த வாகனங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

டாடாவின் தரமான 3 புதிய பிக்-அப் ட்ரக்குகள்!! மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தில் அறிமுகம்...

பயணிகள் கார்கள் சந்தையை போல், கமர்ஷியல் வாகனங்கள் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸில் இருந்து தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிக்-அப் ட்ரக்குகள் அட்டகாசமான & புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. இதனால் வரும் மாதங்களில் இவற்றினால் டாடாவின் கமர்ஷியல் வாகன விற்பனை பெருகும் என்பது மட்டும் உறுதி.

Most Read Articles
English summary
Tata yodha intra v50 intra v20 pick up trucks launched in india details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X