Just In
- 11 hrs ago
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- 13 hrs ago
அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் புதிய ஸ்கார்பியோ காரின் அறிமுகம் எப்போது? அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!
- 14 hrs ago
ரயில் இன்ஜின் ஹாரனிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் இருக்கிறதா? எத்தனை விதமான சத்தங்கள் இருக்கிறது தெரியுமா?
- 16 hrs ago
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
Don't Miss!
- News
லடாக்கில் பாலம்..ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி...சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்கமாட்டோம் - அரிந்தம் பக்சி
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நிலை பலவீனமாக இருக்கும்..
- Finance
ரூ.2,396 கோடி நட்டம்.. சில்லறை முதலீட்டாளர்களைப் பயமுறுத்திய பேடிஎம் காலாண்டு முடிவுகள்!
- Sports
அஸ்வின் கொடுத்த அதிர்ச்சி.. ஆடிப்போய் நின்ற தோனி.. ராஜஸ்தானிடம் சிஎஸ்கே தோற்றது எப்படி?
- Movies
கேன்ஸ் திரைப்பட விழா : மோடியை பாராட்டிய மாதவன்… எதுக்குனு தெரியுமா ?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த நாட்டுக்கு கூட டெஸ்லா வந்திருச்சு... இந்தியாவுக்கு இன்னும் வராமல் இருப்பதற்கு உண்மையான காரணம் தெரியுமா?
மேலும் ஒரு நாட்டில் டெஸ்லா அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று டெஸ்லா (Tesla). உலக பெரும் பணக்காரரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். டெஸ்லா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக தனது கால்தடத்தை பதித்து வருகிறது.

இந்த வரிசையில் தற்போது துருக்கி சந்தையில் டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. துருக்கியில் கடந்த 2021ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக சுமார் 4 ஆயிரம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அங்கு வரும் காலங்களில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை பயன்படுத்தி கொண்டு தனது காலடி தடத்தை வலுவாக ஊன்றும் நோக்கில் டெஸ்லா நிறுவனம் அங்கு அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. துருக்கியில் தற்போது சூப்பர்சார்ஜர் நெட்வொர்க்கை அதிகரிக்கும் பணிகளில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. துருக்கியின் முக்கியமான பகுதிகளில் டெஸ்லா நிறுவனத்தின் சூப்பர்சார்ஜர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி அங்காரா, இஸ்தான்புல், அன்டாலயா, அய்டின், பர்சா, எட்ரின் மற்றும் கோன்யா உள்ளிட்ட பகுதிகளில் டெஸ்லா நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் அமைக்கப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வந்தாலும் டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக நுழையவில்லை.

டெஸ்லா இந்திய சந்தைக்கு எப்போது வரும்? என்பது இந்திய வாடிக்கையாளர்கள் மிக நீண்ட காலமாக எழுப்பி வரும் கேள்விகளில் ஒன்று. சமீபத்தில் கூட சமூக வலை தள பயனர் ஒருவர் எலான் மஸ்க்கிடம் இது தொடர்பான கேள்வியை எழுப்பியிருந்தார். அப்போது இந்தியாவில் கார் விற்பனையை தொடங்குவது தொடர்பாக அரசுடன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக எலான் மஸ்க் பதில் அளித்திருந்தார்.

டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் வரி சலுகைகளை கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுக்கு தற்போது அதிகப்படியான இறக்குமதி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விதிப்பில் சலுகைகள் வேண்டும் என்பது டெஸ்லா நிறுவனத்தின் கோரிக்கை.

ஏனெனில் டெஸ்லா கார்கள் ஏற்கனவே விலை உயர்ந்தவை. அத்துடன் வரிகளும் அதிகமாக விதிக்கப்பட்டால், இந்திய சந்தையில் அதன் கார்களின் விலை இன்னும் அதிகமாகி விடும். எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காது என்பதால் வரி சலுகைகள் வேண்டும் என டெஸ்லா நிறுவனம் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் மத்திய அரசோ, இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கி எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என டெஸ்லா நிறுவனத்திடம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. அப்போதுதான் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இதுபோன்று பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்குமாறு டெஸ்லாவிடம் மத்திய அரசு வலியுறுத்தி கொண்டுள்ளது.

ஆனால் டெஸ்லா நிறுவனமோ இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு முதலில் வரி சலுகைகளை வழங்குங்கள். அதன் பிறகு தொழிற்சாலை அமைப்பது குறித்து யோசிக்கலாம் என்ற முடிவில் உள்ளது. அதாவது இந்திய சந்தையில் கார் விற்பனை எப்படி உள்ளது? என்பதை பார்த்து விட்டு, அதன்பிறகு தொழிற்சாலை அமைக்கும் முடிவில் டெஸ்லா இருக்கிறது.

மத்திய அரசு மற்றும் டெஸ்லா நிறுவனத்திற்கு இடையே இன்னும் சமரசம் ஏற்படாத காரணத்தால் இந்தியாவில் இன்னும் டெஸ்லா நிறுவனத்தின் கார் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலையை தொடங்குவதாக முடிவு செய்தால் மட்டுமே மத்திய அரசு இறங்கி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

அப்போது மட்டுமே முதலீடுகளை ஈர்ப்பதுடன், இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்பது சந்தேகம்தான். ஆனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.
-
கரடு முரடான சாலைகளை அசால்டாக கடக்கும்... இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்கள்!
-
இப்படி ஒரு தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கல... ராங் சைடில் போனால் இவ்வளவு பஞ்சாயத்து இருக்குதா?
-
ஸ்கோடா நிறுவனத்தை தூக்கி நிறுத்தும் ஸ்லாவியா... ஏப்ரல் மாசம் எவ்ளோ கார்கள் சேல்ஸ் ஆயிருக்கு தெரியுமா?