நிறைய பேருக்கு இது தெரிவதே இல்லைங்க... மேனுவல் காரை எப்படி நிறுத்துவது மற்றும் ஸ்டார்ட் செய்வது?

மேனுவல் காரை ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் செய்யும் போது நாம் செய்ய வேண்டியவற்றை பற்றியே இந்த பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பயனுள்ள பதிவிற்குள் போகலாம்.

ஆட்டோமேட்டிக் கார்களை இயக்குவதுபோல் அவ்வளவு சுலபமானது அல்ல மேனுவல் கார்களை இயக்குவது. இதற்கு தனித் திறன் வேண்டும். தந்திரமாக செயல்பட்டால் மட்டுமே மேனுவல் கார் இயக்கத்தை சுலபமானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்ற முடியும்.

கார்

ஆனால், நம்மில் பெரும்பாலோனருக்கு மேனுவல் காரை எப்படி ஸ்டார்ட் செய்ய வேண்டும், எப்படி நிறுத்த வேண்டும் என்பதுகூட தெரியாத நிலை நிலவுகின்றது. குறிப்பாக, முதல் முறையாக காரை ஓட்ட ஆரம்பிப்பவர்கள் இந்த விஷயத்தில் கோட்டையை விட்டுவிடுகின்றனர். இவர்களுக்கு உதவும் விதமாகவே மேனுவல் காரை ஸ்டார்ட் மற்றும் நிறுத்தம் செய்யும்போது அவற்றை எப்படி மேற்கொள்வது என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எஞ்ஜினை ஸ்டார்ட் செய்யும்போது கையாள வேண்டிய விஷயங்கள்:

முதலில் மேனுவல் காரின் அம்சங்களை புரிந்துக் கொள்ளுதல் அவசியம்:

ஆட்டோமேட்டிக் கார்களில் இரண்டு பெடல்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கம். ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்தவும், மற்றொன்று வேகத்தை குறைக்க மற்றம் வாகனத்தை நிறுத்த உதவும். ஆனால், மேனுவல் கார்களில் மூன்று பெடல்கள் இருக்கும். ஒன்று வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். இதனை ஆக்கசலரேட்டர் அல்லது கேஸ் பெடல் என அழைப்பர். மற்றொன்று பிரேக்காக செயல்படும். வாகனத்தின் அதீத வேகத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் குறைத்து, அவ்வாகனத்தை நிறுத்த உதவும்.

மூன்றாவது ஒன்று கிளட்சாக செயல்படும். கியர்களின் இயக்கத்தை ஸ்மூத்தானதாக மாற்றுவதில் கிளட்ச் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும். இந்த மூன்று பெடல்கள் இல்லாமல் மேனுவல் காரை ஸ்மூத்தாக இயக்குவது இயலாத ஒன்று. இந்த செட்-அப்பை பயன்படுத்துவதே சிக்கலானது ஆகும். குறிப்பாக, கியரை ஷிஃப்ட் செய்வதே சவாலான ஒன்று. கார்களின் வகையைப் பொருத்து 1 முதல் 5 ஸ்பீடு வரையிலான கியர் ஷிஃப்டுகள் கார்களில் வழங்கப்படுகின்றன. இதுதவிர ரிவர்ஸுக்கு என தனி ஷிஃப்டும் வழங்கப்பட்டிருக்கும்.

கார்

இந்த 1 முதல் 5 வரையிலான கியர் ஷிஃப்ட் ஒவ்வொரு லெவலுக்கும் உயர்த்த அல்லது குறைக்க செய்யும்போது கிளட்ச்சை மிதிப்பது அவசியம். இதை மிதிக்காமல் கியரை ஷிஃப்ட் செய்தால் கியர் பாக்ஸின் பற்களில் சேதம் ஏற்படும். மேலும், கிளட்சை மிதித்துக் கொண்டிருக்கும் ஆக்சலரேஷனை அழுத்தினால் அது வேலை செய்யாது. அதே நேரத்தில் இது ஆபத்தானது. ஆக்சலேரனை அதிக அழுத்தத்துடன் அழுத்திக் கொண்டே சடாரென கிளட்சை விட்டால் வாகனம் சீற செய்யும்.

ஆகையால் கிளட்சில் இருந்து காலை எடுக்கும்போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆட்டோமேட்டிக் கார்களில் இதுபோன்று எதையும் செய்ய வேண்டியிருக்காது. அனைத்தையும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸே பார்ததுக் கொள்ளும். நாம் சாதாரணமாக கியரை டிரைவிற்கு மாற்றினாலே போதும். மற்றதை அதுவே பார்த்துக் கொள்ளும். மேலும், பிரேக்கிங் மற்றும் ஆக்சலரேஷன் நமக்கு ஏற்றவாறு கன்ட்ரோல் செய்ய வேண்டியிருக்கும். மேனுவல் காரை ஆன்-செய்யும்முன் நாம் கவனிக்க வேண்டியது, அந்த கியர் லிவர் எந்த பொசிஷனில் இருக்கின்றது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கியர் பொசிசன் நியூட்ரலில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை எனில் அது நியூட்ரலுக்குக் கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் காரை ஸ்டார்ட் செய்வது கடினம். மேலும் நியூட்ரல் இல்லாத நிலையில் கியரை மாற்ற முயற்சித்தால் அது நகர்ந்து சென்று விபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகையால், கியர்பாக்ஸ் நியூட்ரலில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிக நல்லது. குறிப்பாக சாவியை போட்டு காரை ஆன் செய்யும் முன் கிளட்ச் பெடலில் காலை வைத்து அழுத்திக் கொள்வது சிறந்தது.

இதன் வாயிலாக உங்கள் காரில் கியர் போட்டவாறு இருந்தாலும், அந்த நகர்வதில் இருந்து தடுக்கப்படும். அதேசமயம், காரை நகர்த்தத் தொடங்கும் முன் பார்க்கிங் பிரேக் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால் நம்முடைய மேனுவலை காரை மிக சிறப்பாக ஸ்டார்ட் செய்து இயக்க முடியும்.

காரை நிறுத்தும் முன் செய்ய வேண்டியவை:

சரியான பார்க்கிங் பிளேசுக்கு வந்த உடன் உங்கள் காரை அணைப்பதற்கான பணியில் களமிறங்கலாம். அதற்கு முன்னதாக, குறிப்பாக, காரை ஆஃப் செய்யும் முன் உங்கள் கியர்பாக்ஸ் நியூட்ரலில் இருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அது நியூட்ரலில் இருந்தால் மட்டுமே உங்களது காரை கிளட்சில் இருந்து வெளியே எடுத்து அதற்கு பின்னர் காரை ஆஃப் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, கார் மேலும் நகர்ந்து செல்லாமல் இருக்க பார்க்கிங் பிரேக்கைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தையும் செய்து முடித்த பின்னர் காரை முழுமையாக அணைத்து விட்டு சாவியை எடுத்துக் கொண்டு நீங்கள் வெளியேறலாம். இதற்கு முன்னதாக காரின் அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tip for start stop manual car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X