மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க! அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள்

செப்டம்பர் மாத கார் விற்பனை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகமாக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களைப் பற்றிக் காணலாம்.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

தற்போது செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம், துவங்கிவிட்டது. கிட்டத்தட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் செப்டம்பர் மாத விற்பனை குறித்த விபரங்களை வெளியிட்டு விட்டன. இந்நிலையில் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளன. இந்த பட்டியல் குறித்த விபரங்களைத் தான் இந்த பதிவில் முழுமையாகக் காணப்போகிறோம்.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

எம்ஜி

பட்டியலில் 10வது இடத்தில் எம்ஜி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் ரீடெயிலில் கடந்த செப் மாதம் மொத்தம் 3808 கார்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 3823 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு செப் மாதம் 3241 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒரு ஆண்டில் 17.49 சதவீத வளர்ச்சியையும், கடந்த மாத விற்பனையில் 0.39 சதவீத வீழ்ச்சியையும் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

ஃபோக்ஸ்வேகன்

அடுத்ததாக 9வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த செப் மாதம் 4103 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாதம் வெறும் 2563 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் கூட வெறும் 2052 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த ஓராண்டில் இந்நிறுவனம் 60.09 சதவீத வளர்ச்சியையும், கடந்த ஒரு மாதத்தில் 99.95 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

ரெனால்ட்

8வது இடத்தில் ரெனால்ட் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த மாதம் மட்டும் மொத்தம் 7623 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு இதே செப் மாதம் மொத்தம் 7326 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 7012 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிறுவனம் ஒரே ஆண்டில் 4.05 சதவீதமும் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை ஒப்பீட்டில் 8.71 சதவீதமும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

ஹோண்டா

பட்டியலில் 7 இடத்தில் ஹோண்டா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 8714 கார்களை விற்பனை செய்துள்ளது. இதே நிறுவனம் கடந்தாண்டு செப் மாதம் வெறும் 6765 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 7769 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்நிலையில் கடந்த செப் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 28.81 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையுடன் ஒப்பிடும் போது 12.16 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

டொயோட்டா

7வது இடத்தை டொயோட்டா நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 15,378 கார்களை கடந்த செப்டம்பர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 9284 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 14959 கார்களை விற்பனையாகியிருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு செப்டம்பர் மாதம் 65.64 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 2.80 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

கியா

இந்த பட்டியலில் 5வது இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த செப்டம் மாதம் மொத்தம் 25,857 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 14,441 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 22,322 கார்களை விற்பனை செய்துள்ளது. ஓராண்டு வளர்ச்சியாக 79.05 சதவீதமும், ஒரு மாத வளர்ச்சியாக 15.84 சதவீதமும் வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

மஹிந்திரா

பட்டியலில் 4வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இ்நிறுவனம் கடந்த செப்., மாதம் 34508 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் வெறும் 29,852 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் வெறும் 12,863 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. ஓராண்டு விற்பனையில் இந்நிறுவனம் 168.27 சதவீத வளர்ச்சியும், ஒரு மாத விற்பனையில் 15.60 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

டாடா

பட்டியலில் 3வது இடத்தில் மக்கள் பலருக்கு அபிமான டாடா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த செப் மாதம் 47,654 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு செப் மாதம் வெறும் 25,730 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 47,166 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு செப்., மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது டாடா நிறுவனம் 85.21 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 1.03 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

ஹூண்டாய்

இந்தியாவில் இரண்டாவதாக அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனம் ஹூண்டாய் தான். இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 49,700 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஆகஸ்ட் மாதம் 49,510 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு செப்., மாதம் மொத்தம் 33,087 கார்களை விற்பனை செய்திருந்தது. ஒரு ஆண்டு வளர்ச்சியில் இந்நிறுவனம் 50.21 சதவீத வளர்ச்சியையும்,ஒரு மாத வளர்ச்சியில் இந்நிறுவனம் 0.38 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

மாருதி

இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நிறுவனம் மாருதி தான். இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 1,48,380 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு செப் மாதம் வெறும் 63,111 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 1,34,166 கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடும் போது தற்போது இந்நிறுவனம் 135.11% சதவீத வளர்ச்சியையும், ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டால் 10.59 சதவீத வளர்ச்சியையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

மாருதியை கழுவி ஊத்தினாலும் எல்லோரும் அதை தான் வாங்குறாங்க . . . அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்கள் . . .

இந்த பட்டியல் அதிகமாக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் டாப் 10 பட்டியல் தான். இந்த பட்டியலில் ஸ்கோடா, நிஸான், சிட்ரோன், ஜீப் ஆகிய நிறுவனங்கள் இடம் பெறவில்லை. அவை பட்டியலில் 10வது உள்ள எம்ஜி நிறுவனத்தை விடக் குறைவான கார்களை விற்பனை செய்துள்ளதால் பட்டியலில் இல்லை. மற்றபடி அந்நிறுவனங்களும் பெரும்பாலும் வளர்ச்சியையே சந்தித்துள்ளன.

Most Read Articles
English summary
Top 10 car brands in sales in Septembe 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X