Just In
- 1 hr ago
காலி பால்பாக்கெட்டிற்கு தள்ளுபடி விலையில் பெட்ரோல் / டீசல்... அசத்தும் தொழிலதிபர்...
- 2 hrs ago
விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!
- 12 hrs ago
விமான பணிப்பெண்களுக்கு இவ்ளோ சம்பளம் தர்றாங்களா! இத்தன சலுகைகள் வேற இருக்கா! இதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்!
- 16 hrs ago
தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!
Don't Miss!
- Technology
5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!
- News
'எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல'.. தேஜஸ்விக்கு பாஜக செய்த ரகசிய கால் - போட்டு உடைத்த நிதீஷ் கட்சி
- Finance
தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. இது வாங்க சரியான நேரம் தான்!
- Movies
முதல் ரவுண்டில் ப்ளாக் பஸ்டர் கொடுத்த டாப் ஹீரோஸ்: இரண்டாவது ரவுண்ட்ல சக்சஸ் பண்ண முடிஞ்சுதா?
- Sports
காமன்வெல்த்-ல் அனல்பறந்த குத்தாட்டம்.. அரங்கையே ஆட வைத்த தமிழர்கள்.. சர்வதேச அளவில் பெருமை - வீடியோ!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய ஒப்பந்தம் எதையும் செய்திடாமல் இருப்பது நல்லது...
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
அடேங்கப்பா இந்தியாவிலிருந்து இவ்வளவு கார்கள் ஏற்றுமதியாகிறதா? எந்த கார் அதிகம் தெரியுமா?
இந்தியாவில் கார்கள் ஏற்றுமதி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே மாதம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெரிய பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதுமட்டுமல்ல. இந்தியாவில் உற்பத்தி செய்தி வெளிநாடுகளுக்கும் கார்களை விற்பனை செய்கின்றனர். இப்படிச் செய்வதால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதால் அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கடந்த மே மாதத்தைப் பொருத்தவரை பயணிகள் வாகன பிரிவில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி இரண்டுமே கணிசமான வகையில் உயர்ந்துள்ளது. தற்போது ஆட்டோமொபைல் உற்பத்தியில் செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்படலும் சமாளிக்கும் நிலைமையே நிலவி வருகிறது. உற்பத்தி மந்தமாக இருப்பதால் சில கார்களின் காத்திருப்பு காலம் அதிகமாகியுள்ளது.

கடந்த மே மாதம் இந்தியாவிலிருந்து மொத்தம் 56,888 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது கடந்த 2021 மே மாத ஏற்றுமதியான 31,810 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 78.84 சதவீத வளர்ச்சியாகும். ஒரே ஆண்டில் 25,078 கார்கள் அதிகமாக ஏற்றுமதியாகியுள்ளது. 2021 மே மாதம் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இருந்ததால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் தான். இந்நிறுவனம் கடந்த மே மாதம் மட்டும் மொத்தம் 6,347 வானகங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்தாண்டு மே மாதம் வெறும் 1,116 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது ஏற்றுமதியில் 468.73 சதவீத வளர்ச்சியையும் மார்கெட்டில் 11.16 சதவீத பங்கையும் வகித்துள்ளது.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் நிஸான் சன்னி கார் இருக்கிறது. மொத்தம் 5,062 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் வெறும் 6 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. ஒரே ஆண்டில் 84266.67 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மார்கெட்டில் 8.90 சதவீத பங்கை வகித்துள்ளது.

அடுத்தாக மீண்டும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இது மொத்தம் 4,473 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்தாண்டு மே மாதம் வெறும் 489 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. ஒரே ஆண்டில் 814.72 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன.மார்கெட்டில் 7.86 சதவீத பங்கை இந்த கார் வகிக்கிறது.

அடுத்த இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ கார் இரக்கிறது. மொத்தம் 4,214 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு மே மாதம் 2,531 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. ஒரே ஆண்டில் 66.5 சதவீத வளர்ச்சி மற்றும் மார்கெட்டில் இந்த கார் 7.41 சதவீத பங்கை வகித்துள்ளது.

அடுத்ததாக அதே மாருதி சுஸூகி நிறுவனத்தின் எஸ்பிரெஸ்ஸோ கார் இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் 3692 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்தாண்டு மே மாதம் 2048 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தது ஒரே ஆண்டில் 80.27 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மார்கெட்டில் 6.49 சதவீத பங்கை இந்நிறுவனம் வகிக்கிறது.

அடுத்தாக மீண்டும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. மொத்தம் 3,672 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்தாண்டு மே மாதம் வெறும் 1737 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. ஒரே ஆண்டில் 111.40 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மார்கெட்டில் 6.45 சதவீத பங்கை வகிக்கிறது.

அடுத்தாக கியா சோனட் கார் மொத்தம் 3,326 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது கடந்தாண்டு 2,460 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தது. ஒரே ஆண்டில் 35.20 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

அடுத்தாக ஹூண்டாய் வெர்னா கார் மொத்தம் 2,838 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. அதில் கடந்தாண்டு மே மாதம் 1401 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தன. ஒரே ஆண்டில் 102.57 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மார்கெட்டில் 4.99 சதவீத பங்கை வகிக்கிறது.

அடுத்ததாக ஃபோக்ஸ்வேகன் வென்டோ கார் இருக்கிறது. கடந்த மே மாதம் மொத்தம் 2456 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஆனால் கடந்தாண்டு மே மாதம் மொத்தம் 2787 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஏற்றுமதியில் 11.88 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது. மார்கெட்டில் 4.32 சதவீத பங்கை வகிக்கிறது.

10வது இடத்தில் ஹோண்டா சிட்டி கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 1995 கார்கள்
ஏற்றுமதியாகியுள்ளன. கடந்தாண்டு வெறும் 180 கார்கள் மட்டும் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. ஒரே ஆண்டில் 1008.33 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மார்கெட்டில் 3.51 சதவீத பங்கை வகிக்கிறது.

அடுத்தாக பட்டியலில் ரெனால்ட் கைகர் கார் 1763 கார்களையும், ஹூண்டாய் சான்ட்ரோ 1573 கார்களையும், கிராண்ட் ஐ10 1551 கார்களையும், ஹூண்டாய் க்ரெட்டா 1517 கார்களையும், கியா செல்டாஸ் 1471 கார்களையும், மாருி சுஸூகி செலிரியோ 1364 கார்களையும், சுஸூகி ஜிம்னி 1253 கார்களையும், ரெனாலட் க்விட் 1,010 கார்களையும், ஏற்றுமதி செய்துள்ளது.

இதுபோக ரெனால்ட் டிரைபர் 992 கார்களையும், மாருதி சுஸூகி எர்டிகா 756 கார்களையும், மாருதி சுஸூகி ஆல்டோ 635 கார்களையும், ரெனல்ட் மேக்னைட் 631கார்களையும், கியா கேரன்ஸ் 579 கார்களையும், ஹூண்டாய் வென்யூ553 கார்களையும், ஏற்றுமதி செய்துள்ளது.

டாப் 10 பட்டியலில் வென்டோ கார் தவிர மற்ற கார்கள் எல்லாம் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. வென்டோ கார் 11.88 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் கடந்த மே மாதம் ஒட்டு மொத்தமாக ஏற்றுமதி அதிகமாகியுள்ளது.