முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த 10 கார்களில் 8 கார்கள், மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். இதன் மூலம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில், மாருதி சுஸுகி மீண்டும் ஒரு முறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி வேகன் ஆர் முதல் இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 16,814 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்துள்ளது. வேகன் ஆர் ஹேட்ச்பேக் காரின் 2022 மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு புதிய மாடலும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

அதே நேரத்தில் இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 14,614 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் விற்பனை செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

இந்த எலெக்ட்ரிக் காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷன் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மேக்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 14,133 ஸ்விஃப்ட் கார்களை நடப்பாண்டு ஜூன் மாதத்தில் விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் ஸ்விஃப்ட் காரின் புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

நடப்பாண்டு ஜூன் மாதம் 13,970 பலேனோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் 2022 மாடலையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

நடப்பாண்டு ஜூன் மாதம் 12,933 ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எர்டிகா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் 12,226 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எர்டிகா காரின் அப்டேட் செய்யப்பட்ட மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் 11,603 எர்டிகா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு ஹூண்டாய் தயாரிப்பு க்ரெட்டா. ஹூண்டாய் நிறுவனம் நடப்பாண்டு ஜூன் மாதம் 10,973 க்ரெட்டா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

இதன் மூலம் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது. எஞ்சிய 2 இடங்களையும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே பிடித்துள்ளன. அவை மாருதி சுஸுகி ஈக்கோ மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஆகும். இந்த கார்களின் நடப்பாண்டு ஜூன் மாத விற்பனை எண்ணிக்கை முறையே 10,221 மற்றும் 10,130 ஆகும்.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

இதில், பிரெஸ்ஸா காரின் 2022 மாடல் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு புதிய வசதிகளுடன், 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அனைவரையும் கவரும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு இந்தியாவில் தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை வாரி குவித்து விட்டது. எனவே வரும் மாதங்களில் 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் இந்த பட்டியலில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Top 10 cars sold in india in june 2022 maruti suzuki wagon r leads chart
Story first published: Monday, July 4, 2022, 20:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X