இந்த கார்களை வாங்குனா பெட்ரோல் பத்தி கவலையே வேண்டாம் செம மைலேஜ் தரும்....

இந்தியாவில் நல்ல மைலேஜ் தரும் டாப் 10 பெட்ரோல் இன்ஜின் மிட் சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டிலை இங்கே வழங்கியுள்ளோம். மிடில் கிளாஸ் மக்களுக்கு ஏற்ற தரமான கார்கள் இது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

பெட்ரோல் விலை கடந்த சில மாதங்களாக உச்சத்திற்கு சென்று பின்னர் தற்போது கலால் வரி குறைப்பு காரணமாக தற்போது இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இது யாருக்குப் பாதிப்போ இல்லையோ மிடில் கிளாஸ் மக்களுக்குப் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மிடில் கிளாஸ் மக்கள் எல்லோரும் நல்ல மைலேஜ் தரும் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் காரில் நல்ல இட வசதியும் வேண்டும் என்பதால் மிடில் கிளாஸ் மக்கள் மிட் சைஸ் எஸ்யூவி கார்களை அதிகம் விரும்புகின்றனர்.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

அந்த வகையில் இந்த பதிவில் நாம் இந்தியாவில் அதிகம் நல்ல மைலேஜ் தரும் மிட் சைஸ் எஸ்யூவி பெட்ரோல் இன்ஜின் கார்கள் குறித்துக் காணலாம். இந்த பதிவில் உள்ள கார்களின் பட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் என்பது ARAI சான்றின்படி உள்ள மைலேஜ் இந்த காரை பயன்படுத்தும் போது கார் ஓட்டும் விதம் மட்டும் இடம் பொருத்து மைலேஜ் மாறுபடும்.அதை கவனத்தில் கொள்ளுங்கள்

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

நிஸான் கிக்ஸ் 1.5 - 13.9 கி.மீ

நிஸான் நிறுவனம் விற்பனை செய்யும் ஒரே மிட் சைஸ் எஸ்யூவி இது தான். 1.5 லிட்டர் இன்ஜின் உடன் இந்த பட்டியலிலேயே குறைவான மைலேஜ் தரும் கார் இது தான். இதில் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 106 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் லிட்டருக்கு 13.9 கிமீ வரை மைலேஜ் தரும் திறன் கொண்டது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

நிஸான் கிக்ஸ் 1.3T - 15.8 கி.மீ

நிஸான் கிக்ஸ் 1.5 காரில் இன்ஜினை மட்டும் மாற்றி வெளியிடும் கார்தான் இந்த நிஸான் கிக்ஸ் 1.3T கார் இதில் 1.3 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த இன்ஜின் 156 பிஎச்பி வரை வெளிப்படுத்துகிறது. இந்த கார் அதிகபட்சமாக லிட்டருக்கு 15.8 கி.மீ வரை மைலேஜ் தரும்

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

கியா செல்டாஸ் 1.4T - 16.3 கி.மீ

கியா நிறுவனம் டர்போ இன்ஜின் உடன் வெளியிடும் கார் இது. இது 1.4 லிட்டர் இன்ஜினை 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ்களுடன் இணைத்து வெளியாகிறது. இது 140 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் லிட்டருக்கு 16.3 கி.மீ வரை மைலேஜ் தரும்.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

கியா செல்டாஸ் 1.5 - 16.65 கி.மீ

கியா நிறுவனம் செல்டாஸ் காரில் நேச்சுனரல் அஸ்பயர்டு இன்ஜினுடன் வெளியிடும் கார் இதில் 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ்களுடன் வரும். இது 115 எச்பி திறனை வெளிப்படுத்தும். இது லிட்டருக்கு 16.65 கி.மீ மைலேஜ் தரும் இது டர்போ இன்ஜிவை சற்று கூடுதல் திறன் கொண்டது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

ஹூண்டாய் க்ரெட்டா 1.4T - 16.8kpl

இந்த கார் அதிக மக்களால் விரும்பி வாங்கப்படும் கார் இந்த கார் 1.4 லிட்டர் இன்ஜின் உடன் வருகிறது. இது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டும் தான் வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 16.8 கி.மீ மைலேஜ் தரும் என ARAI சான்று அளிக்கப்பட்டுள்ளது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

ஸ்கோடா குஷாக் 1.0 TSI - 16.83kpl

ஸ்கோடா நிறுவனத்தின் முதல் மிட் சைஸ் எஸ்யூவி கார் இது. இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 16.83 கி.மீ மைலேஜை தருகிறது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

ஹூண்டாய் க்ரெட்டா 1.5 - 16.85kpl

ஹூண்டாய் க்ரெட்டா காரின் அடுத்த வேரியன்ட் இது. இது 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உன் வருகிறது. இது 115 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் 6 ஸ்படு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இது லிட்டருக்கு 16.85 கி.மீ மைலேஜை தரும் என் சான்றளிக்கப்பட்டுள்ளது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

ஸ்கோடா குஷாக் 1.5 TSI - 17.83kpl

ஏற்கனவே நாம் பார்த்த ஸ்கோடா குஷாக் காரின் அடுத் வேரியன்ட் இது. இந்த காரில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 17.83 கி.மீ வரை மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

ஃபோக்ஸ்வாகன் டைகுன் 1.5 TSI - 18.18kpl

ஸ்கோடா குஷாக்கிற்கு போட்டியாக ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கார் தான் இந்த டைகுன் இது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ்களுடன் விற்பனையாகி வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 18.18 கி.மீ RAI சான்றளித்துள்ளது. ஸ்கோடா குஷாக்கை காட்டிலும் இதன் மைலேஜ் அதிகம் என்பது இந்த காருக்கான பிளஸ்

மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு எல்லாம் இந்த கார்கள் தான் சார் கரெக்டு உடனே காரை வாங்குற வழிய பாருங்க . . . .

ஃபோக்ஸ்வாகன் டைகுன் 1.0 TSI - 18.23kpl

இந்த கார் டைகுன் காரின் என்டரி வேரியன்ட் கார்ன இந்த கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 115 எச்பி பவரை வெளிப்படுத்தம். இநத் கார் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த கார் லிட்டருக்கு 18.23 கி.மீவரை மைலேஜ் தரும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் உங்களுக்குப் பிடித்த கார் எது நீங்கள் எந்த காரை வாங்குவீர்கள் என கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Top 10 good mileage mid size suv petrol engine cars list
Story first published: Tuesday, May 24, 2022, 8:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X