இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்தியாவில் நடப்பாண்டு ஜூன் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனம் 6 இடங்களையும், ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் தலா 2 இடங்களையும் பிடித்துள்ளன.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR) கார் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 19,447 ஆக இருந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூன் மாதம் 19,190 ஆக குறைந்துள்ளது. இது 1 சதவீத வீழ்ச்சியாகும். விற்பனையில் வீழ்ச்சி என்றாலும், முதல் இடத்தை வேகன் ஆர் தன்வசப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) 2வது இடத்தை பெற்றுள்ளது. நடப்பாண்டு ஜூன் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 16,213 ஸ்விஃப்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 17,727 ஆக இருந்தது. இது 9 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 14,701 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 16,103 ஆக உயர்ந்துள்ளது. இது 10 சதவீத வளர்ச்சியாகும். இதேபோல் இந்த பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ள மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரும், 10 சதவீத வளர்ச்சியைதான் சந்தித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 12,513 ஆக இருந்த ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை, நடப்பாண்டு ஜூன் மாதம் 13,790 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 8,787 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 8,992 ஆக உயர்ந்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலிலேயே மிக பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்திருப்பது செலிரியோதான். எவ்வளவு தெரியுமா? 1,055 சதவீதம்! கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 752 செலிரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 8,683 ஆக உயர்ந்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடலை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது மிகவும் சிறப்பாக மைலேஜ் வழங்கும் கார்களில் ஒன்றாகும். இதை தொடர்ந்து செலிரியோ காரின் புதிய சிஎன்ஜி மாடலையும் மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இதன் காரணமாகவே மாருதி சுஸுகி செலிரியோ விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 6,333 ஐ20 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 7,921 ஆக உயர்ந்துள்ளது. இது 25 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 6,350 ஆக இருந்த டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜனவரி மாதம் 5,366 ஆக குறைந்துள்ளது. இது 15 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா டியாகோ (Tata Tiago) 9வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 4,881 ஆக இருந்த டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 5,310 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 3,583 ஆக இருந்த இக்னிஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூன் மாதம் 4,960 ஆக உயர்ந்துள்ளது. இது 38 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles
English summary
Top 10 hatchbacks june 2022 maruti suzuki wagonr leads chart
Story first published: Wednesday, July 6, 2022, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X