Just In
- 58 min ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 2 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
- 3 hrs ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
Don't Miss!
- Technology Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் டாப்-5 பாதுகாப்புமிக்க கார்கள்!! டாடாவின் ஆதிக்கமே அதிகமா இருக்கு!
முன்னர் காலத்தில் புதியதாக காரை வாங்குபவர்கள் அதன் விலைகளையும், அது வழங்கும் மைலேஜையும் தான் மிக முக்கியமாக ஆராய்ந்து பார்ப்பர். ஆனால் தற்போது இந்திய வாடிக்கையாளர்களும் காரில் சவுகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளனவா என எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அதுமட்டுமின்றி மத்திய அரசாங்கமும் சில பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்கி வருவதால், மலிவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரில் கூட குறிப்பிடத்தக்க அளவில் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாம் இந்த செய்தியில் ரூ.10 லட்சம் அல்லது அதற்குள்ளாக கிடைக்கும் பாதுகாப்பான கார்களை பற்றி பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.
டாடா பஞ்ச்
உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் மிகவும் பாதுகாப்பான இந்திய காராக டாடா மோட்டார்ஸின் சமீபத்திய அறிமுகமான பஞ்ச் எஸ்யூவி மாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதல் சோதனைகளின் முடிவில் பஞ்ச் பெற்ற மொத்த மதிப்பெண்கள் 16.45 புள்ளிகளாகும். தற்போதைக்கு 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் ரெவோட்ரான் பெட்ரோல் என்ற ஒற்றை என்ஜின் தேர்வில் மட்டுமே இந்த டாடா கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் & 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏகப்பட்ட வசதிகளுடன் 4 ட்ரிம் நிலைகளில் சந்தைப்படுத்தப்பட்டு வரும் டாடா பஞ்ச்சின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.49 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி300
டாடா பஞ்சிற்கு அடுத்து மஹிந்திரா எக்ஸ்யூவி300 16.42 புள்ளி மதிப்பெண்களுடன் இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மஹிந்திராவின் இந்த பாதுகாப்பான காம்பெக்ட் எஸ்யூவி கார் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மொத்தம் இரு விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் டீசல் என்ஜின் தேர்வுடன் ஆட்டோமேட்டிக் & மேனுவல் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும், பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டும் வழங்கப்படுகிறது. 4 ட்ரிம் நிலைகள் மற்றும் 5 விதமான நிறத்தேர்வுகளில் வழங்கப்படும் எக்ஸ்யூவி300-இல் பின் இருக்கை வரிசை நன்கு அகலமானதாக வழங்கப்படுகிறது. இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.7.95 லட்சமாகும்.
டாடா அல்ட்ராஸ்
மேற்கூறப்பட்ட இரண்டும் எஸ்யூவி மாடல்களாகும், அல்ட்ராஸ் ஆனது பிரீமியம் ஹேட்ச்பேக் காராகும். இதனால் இந்தியாவிலேயே மலிவான & பாதுகாப்பான ஹேட்ச்பேக் காராக அல்ட்ராஸ் விளங்குகிறது. 18 வயது மேற்பட்டோர்க்கான பாதுகாப்பில் முழு ஐந்து நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும் அல்ட்ராஸ் பெற்றுள்ளது.
உலகளாவிய என்சிஏபி சோதனைகள் முடிவில் டாடா அல்ட்ராஸ் பெற்ற மதிப்பெண்கள் 16.13 புள்ளிகள் ஆகும். மொத்தம் 3 விதமான என்ஜின் தேர்வுகளில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரில் உள்ள ஒரே குறை என்னவென்றால், 5-ஸ்பீடு மேனுவல் என ஒரே ஒரு டிரான்ஸ்மிஷன் தேர்வு மட்டும் வழங்கப்படுவதாகும். அல்ட்ராஸின் விலைகள் ரூ.5.90 லட்சத்தில் இருந்து தற்சமயம் துவங்குகின்றன.
டாடா நெக்ஸான்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார் முதல்முறையாக உலகளாவிய-என்சிஏபி அமைப்பில் இருந்து முழு 5 நட்சத்திரங்களை பெற்றது என்கிற பெருமைக்கு உள்ளானது டாடா நெக்ஸான் ஆகும். இதனாலேயே இதன் விற்பனை தற்போதுவரையில் சிறப்பானதாக இருந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களாக நெக்ஸானின் விற்பனை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.
இந்த சப்-காம்பெக்ட் எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல்/ 6-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.30 லட்சங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன.
ஃபோக்ஸ்வேகன் போலோ
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் ஹேட்ச்பேக் காரான போலோ முதன்முதலாக கடந்த 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இப்போதும் தரமான கார்களின் வரிசையில் போட்டி மாடல்கள் பலவற்றிற்கு சிம்ம சொப்பனமாக போலோ விளங்கி வருகிறது. பயணிகள் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களை பெற்றிருந்த இந்த ஃபோக்ஸ்வேகன் கார் உலகளாவிய என்சிஏபி சோதனைகளில் 12.54 புள்ளிகளை பெற்றுள்ளது.
போலோவில் தற்சமயம் 1.0 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என இரு விதமான பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் இந்தியாவில் வழங்கப்படுகின்றன. இந்த ஃபோக்ஸ்வேகன் ஹேட்ச்பேக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.16 லட்சங்களில் இருந்தே ஆரம்பிக்கின்றன.
-
7 பேர் வரை ஒன்னா போகலாம்! 26 கி.மீ மைலேஜூம் தரும் ஆனா இந்த எர்டிகா கார் பத்தி இது யாருக்கும் தெரியாது!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!