செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

2021ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் செடான் கார்களின் விற்பனையை பொருத்தவரையில், மாருதி சுஸுகியின் டிசைர் வழக்கம்போல் முதலிடத்தை தொடர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 10,633 டிசைர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

முதலிடத்தை பிடித்திருப்பினும், 2020 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிசைர் கார்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் கிட்டத்தட்ட 23.3% குறைவான யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த மாதத்தில் 13,868 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் பெரும்பாலான மாதங்களில் 10 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்ற ஒரே ஒரு செடான் மாடலாக டிசைர் விளங்குகிறது.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

அதாவது கீழுள்ள மற்ற செடான் கார்கள் அனைத்தும் மாருதி சுஸுகி டிசைரை காட்டிலும் பெரிய அளவில் குறைவான யூனிட்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் இரண்டாவது இடத்தை ஹோண்டா சிட்டி செடான் மாடல் பிடித்துள்ளது. கடந்த டிசம்பரில் 3,743 ஹோண்டா சிட்டி செடான் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

இந்த எண்ணிக்கை 2020 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட சிட்டி கார்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 37.7% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 2,717 ஹோண்டா சிட்டி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால் ஹோண்டாவின் மற்றொரு செடான் மாடலான அமேஸின் விற்பனை 2020 டிசம்பரை காட்டிலும் கடந்த மாதத்தில் 16.5 சதவீதம் குறைந்துள்ளது.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

இந்த டாப்-10 லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை தனதாக்கியுள்ள ஹோண்டா அமேஸ் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் மொத்தம் 3,658 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பரில் 4,385 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, அந்த சமயத்தில் இந்த டாப்-10 லிஸ்ட்டில் சிட்டி மாடலை முந்தி அமேஸ் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

நான்காவது இடத்தில் டாடா மோட்டார்ஸின் செடான் மாடலான டிகோர் வருடம்-வருடம் ஒப்பிடுகையில் 9.4% விற்பனை வளர்ச்சியுடன் உள்ளது. 2020 டிசம்பரில் 1,822 டிகோர் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 1,994 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து ஹூண்டாயின் அவ்ரா செடான் மாடல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

அவ்ராவின் விற்பனை சமீப காலங்களில் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதைதான் இந்த 2021 டிசம்பர் மாத விற்பனை நிலவரமும் காட்டுகிறது. கடந்த மாதத்தில் 1,715 அவ்ரா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 டிசம்பரில் இந்த எண்ணிக்கையை காட்டிலும் 44.5% அதிகமாக 3,113 அவ்ரா செடான் கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

ஆறாவது இடத்தில் மாருதி சுஸுகி சியாஸ் 1,204 யூனிட்களின் விற்பனையுடன் உள்ளது. இந்திய சந்தையில் விற்பனையில் போராடும் மிகவும் சில மாருதி சுஸுகி கார்களுள் சியாஸும் ஒன்றாகும். ஏனெனில் 2020 டிசம்பரிலும் கிட்டத்தட்ட தற்போதைய விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக 1,270 சியாஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

இதனை தொடர்ந்து, ஹூண்டாயின் பிரீமியம் தர செடான் மாடலான வெர்னா ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 982 யூனிட் வெர்னா கார்கள் விற்கப்பட்டுள்ளன. இது 2020 டிசம்பரை காட்டிலும் 5.2% குறைவாகும். இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள மற்ற செடான் கார்கள் அனைத்தும் 200க்கும் குறைவான யூனிட்களிலேயே கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

செடான் கார்களின் ஆதிக்கம் முடிந்ததா? கடந்த டிசம்பரில் அதிகம் விற்கப்பட்ட செடான் கார் எது தெரியுமா?

இதன்படி, 8வது மற்றும் 9வது இடங்களில் ஸ்கோடாவின் செடான் மாடல்களான ஆக்டேவியா மற்றும் ராபிட் முறையே 164 மற்றும் 158 யூனிட்களின் விற்பனையுடன் உள்ளன. இதில் ஆக்டேவியாவின் விற்பனை முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் 645% அதிகரித்துள்ள நிலையில், ராபிட்டின் விற்பனை சுமார் 84.4% குறைந்துள்ளது. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி பத்தாவது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ உள்ளது.

Most Read Articles
மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 sedans in 2021 dec maruti suzuki dzire at top of the sales charts
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X