கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாடா நெக்ஸான் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 6,835 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

ஆனால் இந்த எண்ணிக்கை 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,899 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாடா நெக்ஸான் 88.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருப்பதுடன், முதலிடத்தையும் பிடித்து அசத்தியுள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா நெக்ஸான் கார் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இந்த சாதனையை படைத்த முதல் இந்திய கார் என்ற பெருமை டாடா நெக்ஸானிடம் இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் டாடா நெக்ஸானின் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒன்றான ஹூண்டாய் வெனியூ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 12,313 ஆக இருந்த ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கை 2021ம் ஆண்டு டிசம்பரில் 10,360 ஆக குறைந்துள்ளது. இது 15.8 சதவீத வீழ்ச்சியாகும்.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்களின் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒன்றான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவை மூன்றுமே சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள்தான். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 12,251 ஆக இருந்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனை எண்ணிக்கை 2021ம் ஆண்டு டிசம்பரில் 9,531 ஆக குறைந்துள்ளது. இது 22.2 சதவீத வீழ்ச்சியாகும்.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில்தான் தனது மிகவும் பிரபலமான செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இந்த பட்டியலில் டாடா பன்ச் கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 8,008 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனையை 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட இயலாது. டாடா நெக்ஸானை போலவே, டாடா பன்ச் காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை ஸ்கோர் செய்துள்ளது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஆகும். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 10,592 ஆக இருந்த ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை 2021ம் ஆண்டு டிசம்பரில் 7,609 ஆக குறைந்துள்ளது. இது 28 சதவீத வீழ்ச்சியாகும். உலகளாவிய அளவில் நிலவி வரும் செமிகண்டக்டர் சிப்களுக்கான பற்றாக்குறையால் ஹூண்டாய் நிறுவனம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

இதன் காரணமாகவே ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதுவும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 3,974 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை 2021ம் ஆண்டு டிசம்பரில் 4,260 ஆக உயர்ந்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டாவின் மிக முக்கியமான போட்டியாளரான கியா செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்யூவி ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 5,608 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை 2021ம் ஆண்டு டிசம்பரில் 4,012 ஆக குறைந்துள்ளது. இது 28.4 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா பன்ச் காரை போலவே, மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரும் கடந்த 2021ம் ஆண்டுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

அத்துடன் இந்த காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. மஹிந்திரா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3,960 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த பட்டியலில் கியா சொனெட் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

கிடுகிடுவென உயரும் டாடா நெக்ஸான் காரின் விற்பனை... போட்டி போட முடியாமல் திணறும் மற்ற கார்கள்!

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் 5,959 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை 2021 டிசம்பரில் 3,578 ஆக குறைந்துள்ளது. இது 40 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை ஃபோக்ஸ்வேகன் டைகுன் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2,828 டைகுன் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இந்த காரும் 2021ம் ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், இதன் விற்பனை எண்ணிக்கை 2020ம் ஆண்டு டிசம்பருடன் ஒப்பிட இயலாது.

Most Read Articles
English summary
Top 10 suv s in december 2021 tata nexon leads chart
Story first published: Wednesday, January 5, 2022, 12:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X