சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம்... இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள்...

இந்தியாவில் விற்பனையாகும் அதிக ரேஞ்ச் உள்ள எலெக்ட்ரிக் கார்களின் டாப் 5 கார்களின் பட்டியல் இதோ உங்களுக்காக

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள் தான் உலகின் ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையைக் கட்டி ஆளப்போகிறது. இந்தியாவிலும் பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கிவிட்டனர். ஏற்கனவே பெட்ரோல் டீசல் இன்ஜின் கார்களை தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் கார்களை தங்கள் தயாரிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு பெரும் சவாலாக இருப்பது, பொது இடங்களில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் போட போதுமான வசதியில்லாதது, பெட்ரோல் டீசல் இன்ஜின் கார்களை விட விலை அதிகமாக இருப்பது, முக்கியமாக முழு சார்ஜில் இந்த கார்கள் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்ற ரேஞ்ச் ஆகியன முக்கிய விஷயமாக இருக்கிறது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்கள் பல அம்சங்களுடன் நீண்டதூரம் பயணிக்கும் அளவிற்கு அதிகமான ரேஞ்ச்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த செய்தியில் நாம் இந்தியாவில் ARAI-ன் தகவலின்படி இந்தியாவில் அதிக ரேஞ்ச் கொண்ட டாப் 5 எலெக்ட்ரிக் கார்களை பற்றிக் காணலாம்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

எம்ஜி ZS EV

ARAI-ன் தகவலின்படி 2022 எம்ஜி ZS EV காரில் 50.3kWh பேட்டரி உள்ளது. இது முழு சார்ஜில் 461 கி.மீ வரை பயணிக்கும் கூறப்படுகிறது. இந்த பேட்டரியை அந்நிறுவனம் 8 பாதுகாப்பு சோதனைகளைச் சேர்ந்துள்ளது, நெருப்பு ஏற்பட்டால் பேட்டரி வெடிக்கிறதா? கார் விபத்தில் சிக்கினால் பேட்டரி வெடிக்கிறதா? புகை, தூசி ஆகியவற்றால் பேட்டரிக்கு ஆபத்து ஏற்படுகிறதா? எனச் சோதனை செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த காரில் PMSM (Permanent Magnet Synchronous Motor) வழங்கப்பட்டுள்ளது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

இது 176 பிஎச்பி பவர் மற்றும் 280என் எம் டார்க் திறனை வழங்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 8.5 நொடிகளில் கடக்கும் என்றும், இந்த காருக்கு வழங்கப்படும் 7.4kW ஏசி வால் பாக்ஸ் சார்ஜரில் சார்ஜ் போட்டால் 0-100 சதவீத சார்ஜ் ஏற 8.5-9 மணிநேரம் ஆகும் என்றும், 50kW டிசி சார்ஜர் மூலம் 0-80 சதவீதம் சார்ஜ் ஏற 60 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

ஹூண்டாய் கோனா

2019ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் கோனா எனும் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் பிரிமியம் மற்றும் பிரிமியம் டூயல் டோன் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகிறது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

இந்த காரில் PMSM (Permanent Magnet Synchronous Motor) பொருத்தப்பட்டுள்ளது. இது 136 பிஎச்பி பவர் மறுஅறம் 395 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த காரின் பேட்டரியை பொருத்தவரை 39.3kWh லித்தியம் அயான் பேட்டி பொருத்தப்பட்டுள்ளது. ARAI-ன் தகவலின் படி இந்த கார் முழு சார்ஜில் 452 கி.மீ பயணிக்கும் இது 50kW டிசி சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் ஏற 57 நிமிடமும், ஏசி பவர் சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற 6 மணி நேரம் 10 நிமிடம் ஆகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

ஹூண்டாய் நிறுவனம் கோனா காரின் பேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த 2020ம் ஆண்டு சர்வதேசச் சந்தையில் வெளியிட்டது இந்த கார் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை மார்கெட்டில் ரூ23.71 லட்சம் முதல் ரூ23.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் இவி மேக்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் முழு சார்ஜில் 437 கி.மீ வரை செல்லும் என ARAI சான்றிதழித்துள்ளது. நெக்ஸான் இவி மேக்ஸை பொறுத்தவரை 40.5 kWh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 143 பிஎச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

இந்த காரில் 2 சார்ஜிங் மோட்கள் உள்ளது. சாதாரணமாக இந்த காருடன் 3.3kWh சார்ஜர் வரும். அல்லது 7.2kWh சார்ஜை ரூ50 ஆயிரம் அதிகம் பணம் கொடுத்து வாங்க வேண்டும். சாதாரண 3.3kWh சார்ஜரில் முழு சார்ஜ் ஏற 15-16 நேரம் ஆகும். அதுவே 7.2kWh சார்ஜரில் அதற்கு 6.5 மண நேரம் மட்டும் எடுத்துக்கொள்ளும். இது போக 50kWh டிசி சார்ஜர் 0-80 சதவீத சார்ஜை வெறும் 56 நிமிடத்தில் ஏற்றிவிடும்.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

வால்வோ எக்ஸ் சி 40 ரீசார்ஜ்

வால்வோ நிறுவனத்தின் முதல் ஏலெக்ட்ரிக் கார் இது. இது இந்தியாவில் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட கார் (completely built unit (CBU) ) ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் எக்ஸ் சி 40 காரை போலவே காம்பேக்ட் மாடுலர் ஆக்கிடெக்ஸர் டிசைனில் உருவானது. இந்த எலெக்ட்ரிக் காரில் பெரும்பாலான டிசைன் அதே மாதரியாக உள்ளது இது எலெக்ட்ரிக் கார் என்பதற்கான சில மார்க்கிங் மட்டும் உள்ளது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

இந்த காரில் 150 kW டூயல் மோட்டார் பவர் டெரைன் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 402 பிஎச்பி பவர் மற்றும் 660 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜில் 418 கி.மீ பயணிக்கிறது. மேலும் இது 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் அடைகிறது.

சார்ஜ் பற்றி கவலையே வேண்டாம் . . . இந்தியாவில் முழு சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் கார்கள் . . .

மெர்சிடீஸ் பென்ஸ் இக்யூசி

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கடந்தாண்டு இந்திய மார்கெட்டில் இக்யூசி என்ற லக்ஸரி எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இரண்டு asynchronous motors மற்றும் 85kWh லித்தியம் அயான் பேட்டரி மற்றும் 408 பிஎச்பி பவர் மற்றும் 765 என்எம் டார்க் திறனுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் முழுமையாக சார்ஜ் ஏற 7.5kWh சார்ஜில் 10 மணி நேரம் ஆகிறது. இதுவே 50kWh டிசி சார்ஜரில் வெறும் 90 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. இந்த கார் முழு சார்ஜில் 414 கி.மீ வரை பணிக்கும் மேலும் 0-100 கி.மீ. வேகத்தை வெறும் 5.1 நொடியில் பிக்கப் செய்யும்.

Most Read Articles
English summary
Top 5 electric vehicles with longest range in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X