மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

மாருதி சுஸுகி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா முதலிடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 1,874 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 15,445 ஆக உயர்ந்துள்ளது. இது 724 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அப்டேட் செய்யப்பட்ட பிரெஸ்ஸா காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய மாடலை காட்டிலும், புதிய மாடல் பல்வேறு விதங்களிலும் மேம்பட்டுள்ளது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாகவே மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

இதுவும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 9,211 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 14,518 ஆக உயர்ந்துள்ளது. இது 57.6 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா கார் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை 8,193 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 12,866 ஆக உயர்ந்துள்ளது. இது 57 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. அனேகமாக நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

அதன்பின் ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா பன்ச் கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் 12,251 பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனையில் இல்லை. அதாவது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்த கார் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிட இயலாது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ கார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7,924 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 11,033 ஆக உயர்ந்துள்ளது. இது 39.2 சதவீத வளர்ச்சியாகும்.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில்தான் வெனியூ காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அத்துடன் வெனியூ காரின் என் லைன் மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்திருப்பதற்கு இது மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

மாருதி நிறுவனம் செய்த தரமான சம்பவத்திற்கு கை மேல் பலன்... அண்ணாந்து பார்க்கும் டாடா, ஹூண்டாய்!

இந்த பட்டியலில் மொத்தம் 3 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் இடம்பிடித்துள்ளன (மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வெனியூ). இதன் மூலம் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

Most Read Articles
English summary
Top 5 suvs in september 2022 maruti suzuki brezza leads chart
Story first published: Wednesday, October 5, 2022, 22:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X