ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்! டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம், ஃபார்ச்சூனர் (Fortuner) எஸ்யூவி கார் மாடலில் புதிய தேர்வு ஒன்றை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதிய தேர்வு ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் (Fortuner GR Sport) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 48.43 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இது தற்போது விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனர் லெஜண்டர் 4X4 தேர்வைக் காட்டிலும் 3.8 லட்சம் ரூபாய் அதிக விலையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இக்கார் அனைத்து ஃபார்ச்சூனர் தேர்வுகளைக் காட்டிலும் உயர்நிலை தேர்வாக காட்சியளிக்கின்றது. அதேவேலையில், சிறப்பு வசதிகளிலும் இது மிக உயர்நிலை தேர்வாகவே காட்சியளிக்கின்றது.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அதாவது, வழக்கமான வேரியண்ட் ஃபார்ச்சூனரைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்கள், கணிசமான மெக்கானிக்கல் மாற்றம் மற்றும் காஸ்மெட்டிக் அப்டேட்டுகள் ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் தேர்வில் டொயோட்டா நிறுவனம் கொடுத்திருக்கின்றது. நிறுவனம் புதிய ஜிஆர் ஸ்போர்ட் ஃபார்ச்சூனரை, லெஜண்டர் ஃபார்ச்சூனரை தழுவி உருவாக்கியிருக்கின்றது.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இருப்பினும், கூடுதல் சிறப்பு வசதிகள் சேர்ப்பால் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் கூடுதல் கவர்ச்சியான கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. புதிய டிசைன் கொண்ட பம்பர் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட ஏர் டேம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஜிஆர் பேட்ஜ் மற்றும் புதிய பனி மின் லேம்ப் க்ளஸ்டர் ஆகிய ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

தொடர்ந்து காருக்கு கூடுதல் கவர்ச்சியை அளிக்கும் வகையில் ட்யூவல் டோன் அலாய் வீல்கள் அடர் நிறங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காரின் பின் பக்கத்திலும் சில சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. காரின் நிறத்திலான ஸ்ட்ரிப் டெயில்லேம்பில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, சிவப்பு நிற கேலிபர்கள் ஜிஆர் லோகோவுடன் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இவை அனைத்தும் இக்காரை முற்றிலும் கவர்ச்சியான மற்றும் அதிக ஸ்போர்ட்டியான காராக மாற்றியிருக்கின்றன. காரின் உட்பகுதியும் இதேபோல் அதிக கவர்ச்சியானதாக மாற்றப்பட்டிருக்கின்றது. சிவப்பு நிற தையல்களால் இருக்கைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமில்லாமல் லெதர், ஜிஆர் லோகோ மற்றும் ஹெட்ரெஸ்ட் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

சென்டர் கன்சோல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஆகிய அம்சங்களும் புதிய ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, 8.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்மார்ட் போன் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

கூடுதலாக, ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், ட்யூவல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், கார் இணைப்பு தொழில்நுட்பம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு மற்றும் பிரீமியம் அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் வசதிகள் மிக அதிகம்... டொயோட்டா ஃபார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

எஞ்ஜினை பொருத்தவரை இந்த தேர்வில் 2.8 லிட்டர் டீசல் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸுடன் இணைந்து 201 பிஎச்பியையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். பிரத்யேகமாக 4வீல் டிரைவ் சிஸ்டமும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Toyota fortuner gr sport launched in india here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X