நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

வருட இறுதி காலத்தை நெருங்கிவிட்டோம். அப்படியென்றால் கனமழை வெளுத்து வாங்கவுள்ளது என்று அர்த்தமாகும். மழை பெய்தால் நம்மூர் சாலைகள் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்றே நினைக்கிறேன். அத்தகைய சாலைகளில் இயக்குவதற்கு ஏற்ற கார்களில் சிலவற்றை இனி பார்க்கலாம்.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

1. மஹிந்திரா ஸ்கார்பியோ என்

மஹிந்திரா பிராண்டில் இருந்து மிக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய கார். இதனாலேயே இதனை முதலாவதாக பார்க்கிறோம். சரி ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக இந்த காரில் என்ன உள்ளது என்று பார்த்தால், மிக முக்கிய அம்சமாக 4x4 ட்ரைவ் அமைப்பு வழங்கப்படுகிறது. இதன் விலையில் 4x4 ட்ரைவ் அமைப்பை கொண்ட ஒரே மாடல் ஸ்கார்பியோ என் ஆகும்.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

அதுமட்டுமின்றி 50 செ.மீ ஆழமுள்ள நீரில் இந்த காரில் எளிதாக செல்லலாம். சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கார்பியோ என் காரின் டெலிவிரிகள் வருகிற செப்.26ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளன. முதல் 10 நாட்களில் குறைந்தது 7 ஆயிரம் ஸ்கார்பியோ என் கார்களையாவது முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

2. டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்தியர்கள் மத்தியில் மிக பிரபலமான மிகவும் சில டொயோட்டா கார்களுள் ஃபார்ச்சூனரும் ஒன்றாகும். இதன் பிரபலத்திற்கு முக்கிய காரணம், ஃபார்ச்சூனரின் ஆஃப்-ரோடு திறனாகும். இந்த காரில் 70 செ.மீ ஆழமுள்ள நீரிலும் பயணிக்க முடியும். ஃபார்ச்சூனரின் ஒரே குறை என்னவென்றால், அதன் அதிகப்படியான விலையே.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

ஆனால் அதற்கேற்ப பல்வேறு லக்சரி அம்சங்களை ஃபார்ச்சூனரில் டொயோட்டா வழங்குகிறது. தற்சமயம் ஃபார்ச்சூனரில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 2,581 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

3. மஹிந்திரா தார்

மழைநீர் தேங்கிய குண்டும் குழியுமான சாலையில் பயணிப்பதற்கு ஏற்ற வாகனமாக தாரை தான் முதலாவதாக பார்த்திருக்க வேண்டும். ஆனால் ஒரு சின்ன விஷயத்தினால் 3வது இடத்தில் பார்க்கிறோம். அந்த சின்ன விஷயம் வேறொன்றும் இல்லை, தாரின் இருக்கைகள் எண்ணிக்கையே. இந்த மஹிந்திரா வாகனமானது காம்பெக்ட்டான ஆஃப்-ரோடு எஸ்யூவியாக விளங்குகிறது.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

அதிகப்பட்சம் 65 செ.மீ ஆழமுள்ள நீரில் தாரில் இயங்கலாம். சமீபத்தில் தார் டீசல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.28,000 வரையில் அதிகரிக்கப்பட்டு இருந்தன. டீசல் மட்டுமின்றி பெட்ரோல் என்ஜின் உடனும் விற்பனை செய்யப்படும் தாரில் இரு என்ஜின் தேர்விலும் 4x4 ட்ரைவ் சிஸ்டம் நிலையான வசதியாக வழங்கப்படுகிறது.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

4. ஃபோர்ஸ் குர்கா

மேலே பார்த்த மஹிந்திரா தாருக்கு நேரெதிர் போட்டி மாடலாக ஃபோர்ஸ் மோட்டார்ஸின் குர்கா விளங்குகிறது. மிகவும் புத்துணர்ச்சியான தோற்றத்துடன் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற 4x4 ட்ரைவ் அமைப்பை பெறுகின்ற குர்கா எஸ்யூவி வாகனத்தில் அதிகப்பட்சமாக 55 செ.மீ ஆழமுள்ள நீரிலும் இயங்கலாம்.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படும் ஃபோர்ஸ் குர்காவின் புதிய தலைமுறை மாடல் கடந்த 2021 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகையில் பார்த்தோமேயானால் குர்கா அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடம் நிறைவடைந்துவிட்டது. இந்த ஆஃப்-ரோடு வாகனத்தில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

5. டொயோட்டா ஹிலுக்ஸ்

ஃபார்ச்சூனரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த பிக்-அப் ட்ரக் வாகனமாகும். எந்த அளவிற்கு என்றால், ஃபார்ச்சூனரில் வழங்கப்படும் என்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் 4x4 ட்ரைவ் சிஸ்டத்தை தான் ஹிலுக்ஸ் பெறுகிறது. இன்னும் சொல்லப்போனால், ஃபார்ச்சூனரின் முன்பக்க பாதி கேபின் தான் இந்த பிக்-அப் ட்ரக்கில் வழங்கப்படுகிறது.

நம்மூர் சாலைகளுக்கு இந்த 5 கார்கள் தான் கரெக்ட்டா இருக்கும்!! இதை தெரிஞ்சிக்கிட்டு ஷோரூம் போங்க...

இதனால் அதிகப்பட்சமாக நீரில் மூழ்கும் அளவும் ஃபார்ச்சூனருடன் ஹிலுக்ஸிற்கு ஒத்து போகிறது. ஆனால் ஃபார்ச்சூனரை காட்டிலும் அதிகமாக, 5 பயணிகளுடன் ஒரு டன் சுமையை சுமக்கும் திறனை ஹிலுக்ஸ் கொண்டது. இதனால் விலை அதிகமாக இருக்கும் என எண்ணிவிட வேண்டும். ஃபார்ச்சூனரை காட்டிலும் ஏறக்குறைய 10 லட்ச ரூபாய் விலை குறைந்தது.

Most Read Articles
English summary
Toyota fortuner to force gurkha cars with best water wading capacity in india
Story first published: Saturday, September 24, 2022, 18:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X