மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

மாருதி சுஸுகி காரை வைத்து கொண்டு டொயோட்டா நிறுவனம் கெத்து காட்டி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

அப்டேட் செய்யப்பட்ட க்ளான்சா காரின் 2022 மாடலை டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் டிசைன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பவர்ட்ரெயினும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்பை காட்டிலும் டொயோட்டா க்ளான்சா தற்போது மதிப்புமிக்க காராக மாறியுள்ளது.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் 2,646 டொயோட்டா க்ளான்சா கார்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2,182 டொயோட்டா க்ளான்சா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் டொயோட்டா க்ளான்சா விற்பனையில் 21.26 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாத விற்பனையை, அதற்கு முந்தைய மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால், க்ளான்சா வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் 2,987 க்ளான்சா கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 2,646 ஆக சுருங்கி விட்டது. இது 11.42 சதவீத வீழ்ச்சியாகும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

இந்திய சந்தையில் டொயோட்டா க்ளான்சா காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி என 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

உண்மையில் மாருதி சுஸுகி பலேனோவின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா. சுஸுகி நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள கூட்டணியின் அடிப்படையில் மாருதி சுஸுகி கார்களில் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து விட்டு, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்து வருகிறது.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

இதன்படி மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 கார்கள் டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒன்று மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா. மற்றொன்று மாருதி சுஸுகி பலேனோ. இதில், விட்டாரா பிரெஸ்ஸா கார் டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரிலும், பலேனோ காரானது டொயோட்டா பிராண்டில் க்ளான்சா என்ற பெயரிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

எதிர்காலத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மேலும் பல்வேறு கார்களை தன்னுடைய பிராண்டில் விற்பனை செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டொயோட்டா நிறுவனம் கூடிய விரைவில் க்ளான்சா காரில், சிஎன்ஜி பவர்ட்ரெயின் தேர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே சிஎன்ஜி கார்களுக்கான வரவேற்பு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் டொயோட்டா நிறுவனம் க்ளான்சா காரில் சிஎன்ஜி தேர்வை வழங்குவது சாமர்த்தியான முடிவாக இருக்கும். க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு வருவது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

விற்பனைக்கு வரும் தேதிதான் இன்னும் வெளியாகவில்லை. எனினும் வெகு விரைவிலேயே டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி மாடலின் அறிமுகத்தை நாம் பார்க்கலாம். அதற்கு முன்னதாக மாருதி சுஸுகி பலேனோவின் சிஎன்ஜி மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் அறிமுக தேதி குறித்த தகவல்களும் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பெறப்படும் க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூஸர் தவிர, இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய கார்கள் மூலமும் டொயோட்டா நிறுவனம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெற்று வருகிறது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹைலக்ஸ் பிக்-அப் டிரக்கிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாருதி காரை வைத்து கொண்டு மார்க்கெட்டில் கெத்து காட்டும் டொயோட்டா... இத்தனை பேர் வாங்கறாங்களா?

இது விலை உயர்ந்த வாகனம் என்றாலும், டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் டிரக் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பிக்-அப் டிரக்கின் விற்பனை வரும் மாதங்களில் படிப்படியாக உயரும் என டொயோட்டா நிறுவனம் எதிர்பார்க்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளை போல், இந்தியாவில் பிக்-அப் டிரக்குகள் அவ்வளவாக பிரபலமடையாத சூழலில், ஹைலக்ஸ் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota glanza premium hatchback april 2022 sales report
Story first published: Wednesday, May 18, 2022, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X