அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்.. புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்கை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வாகனத்தின் அறிமுகம் குறித்த கூடுதல் விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இந்தியர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் தூண்டி வந்த டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் தற்போது நாட்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்குகளில் ஒன்றாக இது காட்சியளிக்கின்றது. சர்வதேச சந்தைகளில் இக்காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இந்த வாகனம் உலக சந்தையில் 1968ம் ஆண்டில் இருந்தே விற்பனைக்குக் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டிலேயே பிக்-அப் ட்ரக் முதல் முறையாக இந்த உலகில் அறிமுகமாகியது. ஆனால், இந்தியாவில் இப்போதே வெளியீட்டைப் பெற்றிருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி டொயோட்டா ஹைலக்ஸ் 180-க்கும் அதிகமான நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இது ஓர் கவர்ச்சியான பிக்-அப் ட்ரக் வாகனமாகும். சரக்கு ஏற்றி செல்வது மற்றும் பயணிகள் வாகனமாக இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். பெரிய ஹெக்ஸகோனல் க்ரில், எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய மின் விளக்குகள், பிளாஸ்டிக் கிளாடிங்குகள், ஃபூட் போர்டுகள், பின் பக்கத்தில் பெரியளவிலான பம்பர் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இவை அனைத்தும் சேர்ந்து டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கிற்கு கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. டொயோட்டா நிறுவனம் அதன் தயாரிப்புகளை அதிக தரம், நீண்ட ஆயுள் மற்றும் நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி வருகின்றது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இதற்கு இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்து வரும் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் சான்றாக இருக்கின்றன. இவற்றைப் போலவே புதிய ஹைலக்ஸ் காரும் உருவாக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாகனத்தில் 500 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய டர்போ எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

2.8 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் வரை வெளியற்றும். இத்துடன், ஈகோ மற்றும் பவர் என இரு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில், பவர் மோடானது ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்ததாக காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

மேலும், ஆஃப்-ரோடு பயணத்தை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் வகையில் டிராக்சன் கன்ட்ரோல், டயர் கன்ட்ரோல் மானிட்டர், எலெக்ட்ரானிக் லாக் மற்றும் 4X4 சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, டொயோட்டா ஹைலக்ஸ் காருக்கு 700 மிமீ ஆழமுள்ள நீர் நிறைந்த சாலையைக் கூட அசால்டாக கடக்கும் திறன் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இந்த காரில் பயணிப்பதை கூடுதல் சிறப்பானதாக மாற்றும் வகையில் சிறப்பு வசதிகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகிய வசதிகளைக் கொண்டது. இத்துடன், இரட்டை ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், முன் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் ஆகிய அம்சங்களும் ஹைலக்ஸில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இத்தகைய சிறப்பு வசதிகளைக் கொண்ட வாகனமாகவே டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் அறிமுகத்தை தொடர்ந்து தற்போது இக்காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. ஆனால், இக்காரின் விலை பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

வரும் மார்ச் மாதம் இதன் விலை பற்றிய தகவலை அறிவிக்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அன்றைய தினமே இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கான அறிமுகத்தைப் பெற இருக்கின்றது. மேலும், அந்த மாதத்தில் இருந்தே வாகனத்தின் டெலிவரி பணிகளும் தொடங்கப்பட உள்ளது. அட்வென்சர் வசதிகள் கொண்ட வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது.

இந்தியாவில் அறிமுகமானது உலகின் மிகவும் பிரபலமான பிக்-அப் ட்ரக்... புக்கிங்கூட தொடங்கியாச்சு... ஆனா, விலை இன்னும் அறிவிக்கல!

இதை பூர்த்தி செய்யும் வகையிலேயே இவ்வாகனம் இந்தியா கொண்டு வரப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தை தனது பிடாடி உற்பத்தி ஆலையில் வைத்து தயாரிக்க இருக்கின்றது, டொயோட்டா. இந்த வாகனத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றார், ஏசியன் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருப்பதாகும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota hilux pick up unveiled in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X