டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டொயோட்டா ஹிலுக்ஸ் பிக்அப் ட்ரக்கிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

நீண்ட மாத கால காத்திருப்பிற்கு பிறகு டொயோட்டா நிறுவனம் ஒரு வழியாக அதன் ஹிலுக்ஸ் பிக்அப் ட்ரக்கினை இந்திய சந்தையில் இந்த 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்தது. இந்த பிக்அப் ட்ரக் வாகனத்திற்கான முன்பதிவுகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க, ஹிலுக்ஸின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

எஸ்டிடி மற்றும் ஹை என்கிற இரு விதமான ட்ரிம் நிலைகளில் டொயோட்டா ஹிலுக்ஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் ஹிலுக்ஸ் வாகனத்தின் 7 ஆக்ஸஸரீகளை டொயோட்டா அறிவித்துள்ளது. இதில்,

பின்பக்கத்தில் கூடாரம்

அடிக்கடி சுற்றுலா செல்வோர்க்கு இந்த ஆக்ஸஸரீ உதவிகரமானதாக இருக்கும். கீழுள்ள படத்தை வைத்து பார்க்கும்போது, கூடாரம் வாகனத்தின் மேற்கூரையில் பொருத்தப்படாது. மாறாக வாகனத்தின் பின்னால் மேற்கூரையுடன் இணைத்தவாறு வழங்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

ரோல் பார் & ஃபெண்டர் பாதுகாப்பான்

ஹிலுக்ஸின் பின்பக்கத்தில் பொருட்களை வைத்து செல்ல விரும்புவோர், ரோல் பார் & ஃபெண்டர் பாதுகாப்பானை தேர்வு செய்யலாம். இவை வாகனத்திற்கு மெருக்கேற்றப்பட்ட தோற்றத்தை வழங்குவது மட்டுமின்றி, மோதல்களின் போது பாதுகாப்பையும் வழங்கும். இவை மோதலின் போது ஹிலுக்ஸ் ஒரு பக்கமாக சாய்வதை தடுப்பது மட்டுமில்லாமல், வாகனத்தின் பேனல்கள் சேதமடைவதையும் தடுக்கும்.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

பொருட்களை வைக்கும் இடத்திற்கான மூடி

இது அத்தியாவாசியமான ஆக்ஸஸரீகளில் ஒன்றாகும். ஏனெனில் வாகனத்தின் பின்பக்கத்தில் பொருட்களை வைத்துவிட்டு அதனை திறந்தவெளியில் கொண்டு செல்ல எவர் ஒருவரும் விரும்ப மாட்டீர்கள். அதுமட்டுமின்றி இது வாகனம் ஒரிடத்தில் நீண்ட நாட்களுக்கு நிற்பதினால் பின்பக்கத்தில் ஏற்படும் குப்பைகளையும் தவிர்க்கும்.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

டெயில்கேட் உதவி

இந்த ஆக்ஸஸரீயை வாங்குவதன் மூலம் உங்களது ஹிலுக்ஸ் வாகனத்தின் பின் கதவானது ஹைட்ராலிக் மூலமாக செயல்படும். இதனால் தேவையில்லாமல் ஏற்படும் இரைச்சல்களை தவிர்க்கலாம்.

முன்பக்க அடித்தட்டு

பொதுவாக இதனை சறுக்கு தட்டு என்பர். அதாவது வாகனம் முன்பக்கமாக சென்று ஏதேனும் பொருளின் மீது மோதினால் அந்த பகுதி சேதமடையாமல் இருக்க வழங்கப்படுவது.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

ஆனால் ஹிலுக்ஸில் இந்த பெயரில் அழைக்கப்படாததற்கு காரணம், இந்த பிக்அப் ட்ரக்கில் வெறுமனே அழகிற்காக மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கானது இல்லையாம்.

வயர் இல்லா சார்ஜர்

வாகன உட்புறத்தில் மைய கன்சோல் பகுதியில் இந்த சார்ஜிங் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் வாகனத்தில் இந்த வசதி கூடுதல் ஆக்ஸஸரீயாகவே வழங்கப்படுவது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

ஏனெனில் தற்சமயம் வெறும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் காம்பெக்ட் எஸ்யூவி கார்களில் கூட வயர் இல்லா சார்ஜிங் வழங்கப்படுகிறது.

டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு

வயர் இல்லா சார்ஜரை போல், அடிப்படை அம்சமாக மாறிவரும் டயரின் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பையும் கூடுதல் ஆக்ஸஸரீயாகவே ஹிலுக்ஸ் பெற்றுள்ளது.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

இந்த ஆக்ஸஸரீயில் டயர் காற்று அழுத்தியும் அடங்குகிறது. இது டயரில் காற்றின் அழுத்தம் குறைந்தால் காற்றை நிரப்ப பயன்படும்.

ஹிலுக்ஸ் பிக்அப் ட்ரக்கின் விலையை போன்று, இந்த ஆக்ஸஸரீகளுக்கான விலைகளையும் தற்போதைக்கு டொயோட்டா வெளியிடவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், இந்த ஆக்ஸஸரீகள் உங்களது ஹிலுக்ஸை கூடுதலாக முரட்டுத்தனமானதாக காட்டும்.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

இந்திய சந்தையில் விற்பனையில் இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கின் போட்டியினை எதிர்கொள்ளவுள்ள ஹிலுக்ஸினை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில் ஏற்கனவே டொயோட்டா இறங்கிவிட்டது. இதன்படி வெளியிடப்பட்ட டீசர்கள் ஏற்கனவே நமது செய்திதளத்தில் பார்த்திருந்தோம். இந்த வகையில் வெளியிடப்பட்டிருந்த டீசர் ஒன்றின் மூலமாக இந்த பிக்அப் ட்ரக்கின் உட்புற கேபினின் தோற்றத்தை காண முடிந்திருந்தது.

டொயோட்டா ஹிலுக்ஸிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! இவற்றுடன் வாங்கினால் ட்ரக் இன்னும் செம்மையா இருக்கும்!

இதன் கேபின் கிட்டத்தட்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை போன்றே இருந்தது. உட்புற கேபினின் அம்சங்கள் மட்டுமின்றி, ஃபார்ச்சூனரின் 2.8 லிட்டர் டீசல் என்ஜினை தான் ஹிலக்ஸ் பெற்றுள்ளது. அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் ஃபார்ச்சூனரில் வழங்கப்படுகின்றன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Here Are The Genuine Accessories That You Can Buy With The Toyota Hilux.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X