டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

நடப்பு 2022 ஜனவரி மாதத்தில் ஹிலுக்ஸ் பிக்அப் ட்ரக்கை அறிமுகப்படுத்த டொயோட்டா அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த புதிய டொயோட்டா பிக்அப் ட்ரக்கிற்கான அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகள் தற்சமயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் நிலையில், டெலிவிரிகள் வருகிற மார்ச் மாதத்தில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

விற்பனையில் இந்த பிக்அப் ட்ரக் வாகனத்திற்கு இந்திய சந்தையில் இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் மட்டுமே போட்டியாக உள்ளது. இந்த இரு ஜப்பானிய பிக்அப் ட்ரக்குகளுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

பரிமாண அளவுகள்

டொயோட்டா ஹிலுக்ஸ் பிக்அப் ட்ரக்கின் பரிமாண அளவுகள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி ஹிலுக்ஸின் நீளம் 5325மிமீ, அகலம் 1855மிமீ மற்றும் உயரம் 1815மிமீ ஆகும். அதுவே இந்த வாகனத்தின் வீல்பேஸ் நீளம் 3085மிமீ மற்றும் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் 217மிமீ ஆகும்.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

இதன் உடன் ஒப்பிடுகையில், டி-மேக்ஸ் வி-க்ராஸ் 5295மிமீ-இல் நீளம் அதிகமானதாகவும், 1860மிமீ-இல் சற்று அகலம் அதிகமானதாகவும், 1840மிமீ-இல் உயரமானதாகவும் வடிவமைக்கப்படுகிறது. அதேபோல் 3095மிமீ மற்றும் 225மிமீ-இல் டி-மேக்ஸின் வீல்பேஸ் மற்றும் க்ரவுண்ட் க்ளியரென்ஸும் சற்று பெரியதாக உள்ளது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

வசதிகள் & அம்சங்கள்

ஹிலுக்ஸின் உட்புறத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு 7 காற்றுப்பைகள், ஹில் ஸ்டார்ட்-உதவி, மலைப்பாதைகளில் ஏறுவதற்கான கண்ட்ரோல், தானியங்கி லிமிடெட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக கேமிரா மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

அதுவே டி-மேக்ஸ் வாகனத்தில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், மலைப்பாதையில் ஏறுவதற்கான உதவி, 6 காற்றுப்பைகள், வாகனத்தின் பின்புறத்தை பார்க்க உதவியாக கேமிரா முதலியவற்றை இஸுஸு வழங்குகிறது. இவற்றுடன் தானியங்கி ஏசி, 6-வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் டி-மேக்ஸ் பெறுகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

மறுப்பக்கம் ஹிலுக்ஸில் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, மடக்கும் வசதிக்கொண்ட ஓட்டுனரின் இருக்கை, தட்டையான & டெலெஸ்கோபிக் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவற்றை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

என்ஜின் சிறப்பம்சங்கள்

விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டொயோட்டா ஹிலுக்ஸில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் என்கிற இரு விதமான தேர்வுகளிலும் ஹிலுக்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

மறுப்பக்கம் டி-மேக்ஸ் வி-கிராஸில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 163 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இதன் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பிக்அப் ட்ரக்கும் 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் அமைப்புகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

விலை

டொயோட்டா ஹிலுக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.25 லட்சங்களில் இருந்து ரூ.30 லட்சங்கள் வரையில் எதிர்பார்க்கிறோம். இந்த வகையில் பார்க்கும்போது இந்த புதிய டொயோட்டா வாகனம் அதன் போட்டி மாடலை காட்டிலும் விலைமிக்கதாக கொண்டுவரப்பட உள்ளது நமக்கு தெரிய வருகிறது. ஏனெனில் இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கை ரூ.19.06 லட்சங்கள் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாங்க முடிகிறது.

டொயோட்டா ஹிலுக்ஸ் vs இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ்!! எந்த பிக்அப் ட்ரக்கை தேர்வு செய்யலாம்?

இது இந்த பிக்அப் ட்ரக்கின் ஆரம்ப நிலை ஹை-லேண்டர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையாகும். இந்த ஒப்பீட்டின் மூலமாக இந்த புதிய டொயோட்டா பிக்அப் ட்ரக் சற்று பிரீமியம் தரத்திலான வாகனமாக ஆற்றல்மிக்க என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை அறிய முடிகிறது. அதுமட்டுமின்றி ஒரே ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களாக இருப்பினும், இஸுஸு நிறுவனத்தை காட்டிலும் டொயோட்டாவிற்கு இந்தியாவில் விற்பனை/ சேவை மையங்கள் அதிகமாகும்.

Most Read Articles
English summary
Isuzu V-Cross Vs Toyota Hilux.
Story first published: Sunday, January 16, 2022, 15:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X