இதனாலதான் இன்னோவா ஹைகிராஸுக்கு எதிர்பார்ப்பு பலமா இருக்கோ! எக்ஸ்யூவி700-இல் இல்லாத அம்சங்கள் பல இதுல இருக்கு!

டொயோட்டா நிறுவனம் சீக்கிரமே இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கான முன் பதிவு பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவாவைக் காட்டிலும் பல மடங்கு அதிக சிறப்பு வசதிகள் நிறைந்த காராகவே இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பிற முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் பன்முக சிறப்பம்சங்களை இந்த காரில் டொயோட்டா வாரி வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இடம் பெறாத அம்சங்கள் பல இந்த புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி எக்ஸ்யூவி700 இல் இல்லாத 7 சிறப்பம்சங்கள் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸில் இடம் பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது. அவை பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹைகிராஸ்

ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம்:

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டார் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்க இருக்கின்றது. அதாவது, பெட்ரோலால் இயங்கும் மோட்டாருடன் சேர்த்து மின்சாரத்தால் இயங்கும் சிறிய எலெக்ட்ரிக் மோட்டாரும், இதற்கு மின்சார சக்தியை வழங்கிட சிறிய பேட்டரி பேக்கும் கொடுக்கப்படும். இந்த பேட்டரி பேக்கை தனியாக சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாகனத்தின்போதே அது தானாக சார்ஜாகிக் கொள்ளும். இந்த வசதியைத் தனது ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டிருப்பதை ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான சிறப்பம்சம் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓட்டோமேன் இருக்கைகள்:

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் இரண்டாவது வரிசை இருக்கையில் ஓட்டோமேன் ரக இருக்கைகள் வழங்கப்பட இருக்கின்றது. இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலின் உயர் நிலை தேர்விலேயே இந்த வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டோமேன் இருக்கைகள் இருக்கைகள் என்பது அதிகமாக சாய்ந்து கொள்ளுதல், கால்களுக்கு என ரெஸ்ட் பேட்டுகள் மற்றும் ஹெட் ரெஸ்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இத்தகைய வசதி கொண்ட ஓட்டோமேன் இருக்கையே இன்னோவா ஹைகிராஸின் உயர்நிலை தேர்வில் இடம் பெற இருக்கின்றது. அதிக லக்சூரியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த தேர்வு கட்டாயம் பிடிக்கும். ஆனால், இதுமாதிரியான ஓர் வசதியை மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 காரில் வழங்கவில்லை. தற்போதைய நிலவரப்படி நிறுவனம் இந்த காரை ஐந்து மற்றும் 7 இருக்கைகள் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

தனி ஏசி கன்ட்ரோல்:

இப்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் பின்னிருக்கையாளர்களை மையப்படுத்தி பல சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரிலும் இரண்டாவது வரிசை இருக்கையாளர்களை மையப்படுத்தி பன்முக சிறப்பு வசதிகள் வழங்கப்பட இருக்கின்றன. குறிப்பாக, இரண்டாவது வரிசை இருக்கையாளர்களுக்கு என தனி ஏசி வெண்டுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு?, எல்லா காருலையும்தான் இத தராங்களேனு நீங்க நினைக்கலாம், இந்த காரில் ஏசி கன்ட்ரோல் உடன் கூடிய தனி வெண்டுகளே வழங்கப்பட்டிருக்கும். இந்த வசதியை பிற கார்களில் பார்ப்பது மிக கடினம். மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இது இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.

பவர் பூட்:

டொயோட்டா ஹைகிராஸ் காரில் பவர் பூட் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஒரு பட்டனை அழுத்தினால் தானாக மின்சாரத்தால் திறக்கும் வசதிக் கொண்ட பூட்டே வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோல், அதனை மீண்டும் அடைத்துக் கொள்ளவும் தனி பொத்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமாதிரியன ஸ்பெஷல் வசதி மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 எஸ்யூவி காரில் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. மேனுவலாக திறத்தல் மற்றும் மூடுதல் வசதியே இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கை:

டொயோட்டா ஹைகிராஸ் காரின் முன் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் இரண்டு இருக்கைகளும் அதிக காற்றோட்டத்தை வழங்கும் வசதிக் கொண்டவை ஆகும். இதன் வாயிலாக முன்னிருக்கையாளர்கள் விரைவில் அசௌகரியமாக உணர்வது தவிர்க்கப்படும். குறிப்பாக, காற்றோட்டமான பயணத்தை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த அம்சத்தை ஏற்கனவே பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் விலைக் குறைவான கார் மாடல்களில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மஹிந்திரா நிறுவனம் அதன் எஸ்யூவி கார்களில் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கும் ஒன்றாக இருக்கின்றது.

ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்:

இரவு நேரங்களில் மிக சிறந்த பார்வை திறனை வழங்கும் விதமாக இந்த காரில் ஆட்டோ டிம்மிங் வசதிக் கொண்ட ரியர் வியூ மிர்ரர் (ஐஆர்விஎம்)-கள் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அம்சத்தை கார் உற்பத்தியாளர்கள் பலர் தங்களின் தயாரிப்புகளில் வழங்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், மஹிந்திரா நிறுவனம் இந்த அம்சத்தை வழங்கவில்லை. நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் மாடலான எக்ஸ்யூவி 700 காரில்கூட வழங்காதது கவலையளிக்கும் செயலாக இருக்கின்றது.

ரியர் சன்ஷேட்:

பயணிகளின் சொகுசுக்காக டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரில் பன்முக சிறப்பம்சங்களை வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், சன்ஷேட் வசதிக் கொண்ட ஜன்னல் கண்ணாடிகளே இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது கடுமையான வெயிலின்போது மேற்கொள்ளப்படும் பயணத்தைகூட அலாதியானதாக மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். இந்த அம்சம்கூட மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 காரில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross 7 features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X