புது டொயோட்டா இன்னோவா காரை காப்பியடிக்க ரெடியான மாருதி... இந்த கார் ஜனவரி மாசம் அறிமுகமாக போகுதா!

இந்திய சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார் வெகு சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு விட்டன. ஆனால் விலை எவ்வளவு? என்பது வரும் ஜனவரி மாதம்தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரின் அடிப்படையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனமும் புதிய எம்பிவி கார் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது (டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது). இது பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) டீலர்ஷிப்கள் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் வெர்ஷனில் ஒரு சில டிசைன் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புது டொயோட்டா இன்னோவா காரை காப்பியடிக்க ரெடியான மாருதி... இந்த கார் ஜனவரி மாசம் அறிமுகமாக போகுதா!

இதன்படி க்ரில், பம்பர் மற்றும் ஹெட்லேம்ப்கள் ஆகியவை, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காருடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை போலவே, மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி காரும், மோனோகாக் சேஸிஸ் அடிப்படையில்தான் கட்டமைக்கப்படவுள்ளது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எம்பிவி காரிலும், ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம்தான் வழங்கப்படவுள்ளது. உட்புறத்தை பொறுத்தவரையில், இந்த 2 கார்களிலும் லே அவுட் மற்றும் வசதிகள் ஒன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்டீரியரில் வித்தியாசமான கலர் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் இந்த காரின் டாப் வேரியண்ட்களில், அடாப்டிவ் க்ருஸ் கண்ட்ரோல், லேன் கீப் அஸிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹைபீம் போன்ற வசதிகளுடன், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance System) வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அடாஸ் தொழில்நுட்ப வசதியுடன் கிடைக்கும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை இது பெறலாம்.

அடாஸ் தவிர, 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகளை மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி கார் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செயல்திறனை பொறுத்தவரையில், இந்த காரில் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதில், 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 172 பிஹெச்பி பவரை உருவாக்க கூடியது. இதுதவிர டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனையும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் பெற்றிருக்கலாம். இதில், பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜினின் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 184 பிஹெச்பி-ஆக இருக்கலாம்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவிற்கான மைலேஜைதான், மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி காரும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி கார் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகலாம். இந்த புதிய எம்பிவி கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் காட்சிக்கு வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து அதற்கு அடுத்த ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புதிய எம்பிவி காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Toyota innova hycross based maruti suzuki mpv india launch details
Story first published: Saturday, November 26, 2022, 22:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X