வச்ச கண்ண வாங்க மாட்டாங்க... இந்த காரு ரோட்ல போனா எல்லாரோட கண்ணும் இது மேலதான் இருக்கும்... அலங்காரம் சூப்பர்!

டொயோட்டா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் காரை இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியீடு செய்தது. இந்தோனேசியாவில் அறிமுகமானதைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த காரை டொயோட்டா அறிமுகப்படுத்தியது. கடந்த 25ம் தேதி அன்றே நாட்டில் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் வெளியீட்டு நிகழ்வு அரங்கேறியது.

வெளியீட்டைத் தொடர்ந்து புக்கிங் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 50 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றது. இந்த காரை பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என இரு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இந்த புதிய ஹைகிராஸ் காரை தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் பலமடங்கு அதிக சிறப்புகள் கொண்ட வாகனமாக வடிவமைத்திருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா

எனவே, சிறப்பம்சங்கள் தொடங்கி தொழில்நுட்பம் வரை என அனைத்திலும் பெஸ்ட்டான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இதேபோல், வடிவமைப்பிலும் இந்த காரை மிக சூப்பரானதாகவே டொயோட்டா நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டாவில் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காகவே பன்முக சிறப்பு அலங்கார அம்சங்களை இந்த காரில் டொயோட்டா சேர்த்திருக்கின்றது. இது குறித்த தகவலை இந்த பதிவில் நாம் தற்போது பார்க்க இருக்கின்றோம்.

புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் முகப்பு பகுதி:

புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் முகப்பு பகுதியில் பன்முக சிறப்பு அலங்கார அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய க்ரில், புதிய தோற்றத்திலான ஹெட்லேம்ப், பம்பர், ஏர் இன்டேக் உள்ளிட்டவை ஹைகிராஸின் தனித்துவமான தோற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளன. இவையே இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, பழைய இன்னோவா க்ரிஸ்டாவிடம் இருந்து மாறுபட்ட தோற்றத்தை வழங்க இந்த அலங்காரப் பொருட்களே காரணமாக இருக்கின்றன. இவை மாறுபட்ட தோற்றத்திற்கு மட்டுமல்ல ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கும் உதவியாக இருக்கின்றன. தேன் கூடு ஸ்டைலிலான க்ரில், கட்டுமஸ்தான பம்பரே இந்த தோற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

டொயோட்டா இன்னோவா

எஸ்யூவி கார் போன்ற தோற்றம்:

டொயோட்டா இன்னோவா ஓர் எம்பிவி ரக காராகும். ஆனால், புதிதாக வெளியீட்டைப் பெற்றிருக்கும் இந்த இன்னோவா ஹைகிராஸ் எஸ்யூவி காரை போன்று காட்சியளிக்கின்றது. இதற்கு காரின் பக்கவாட்டு பகுதிய முக்கய காரணமாக இருக்கின்றது. இங்கு எஸ்யூவி காரை போல் பிரதிபலிக்கக் கூடிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. அதிகப்படியான லைன்கள், பெரிய ஆர்ச்சுகள் கொண்ட 18 அங்குல அலாய் வீல்கள், பாடி கிளாடிங், சரிவான ரூஃப்லைன்கள் உள்ளிட்டவை இந்த காரில் இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி, இந்த காருக்கு சற்று உயரமான வீல் பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவும் புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் எஸ்யூவி பிம்பத்திற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. 2,850 மிமீ வீல் பேஸிலேயே இந்த வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்று ஏராளமான அம்சங்கள் காரை எஸ்யூவி-ஆக பிரதிபலிக்கும் விதமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமின்றி, இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் அகலமானாதகவும், நீளமானதாகவும் புதிய இன்னோவா ஹைகிராஸ் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

எல்இடி லைட்டுகள்:

டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துமே எல்இடி லைட்டுகள் ஆகும். மெல்லிய இழை போன்ற லைட் அமைப்பு ஹெட்லைட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. அது தொடங்கி ஹெட்லேம்ப் வரையில் அனைத்துமு எல்இடி தரத்திலானவை ஆகும். இதேபோல், இன்டிகேட்டர்கள், பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஸ்டாப் மற்றும் இன்டிகேட் லைட்டுகள் உள்ளிட்டவையும் எல்இடி தரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அம்சங்களும் காரின் மிகுந்த கவர்ச்சியான தோற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன.

காரின் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பங்கள்:

360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ரியர் மற்றும் முன் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, அடாஸ் அம்சத்திற்காகன சென்சார்கள் மற்றும் ரேடார்களும் இந்த காரின் வெளிப்புறத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இவை அதீத பாதுகாப்பான பயணங்களுக்கு உதவியாக இருக்கும். இவற்றுடன், கூடுதல் பிளஸ்ஸாக காரின் வெளிப்புறத்தில் ஆங்காங்கே கருப்பு நிற தீம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீமை காரின் பம்பர், கிரில், ஷோல்டர் லைன்கள் ஆகியவற்றில் நம்மால் காண முடிகின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross exterior highlights
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X