மஹிந்திரா கார்களை பதம் பார்க்க போகும் புதிய டொயோட்டா இன்னோவா! இந்த திடீர் ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல!

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், மஹிந்திரா நிறுவனத்தின் 2 கார்களை பதம் பார்க்க போவதாக கூறப்படுகிறது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஜெனிக்ஸ் (Toyota Innova Zenix) காரை இந்தோனேஷியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்தான் இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளது.

மஹிந்திரா கார்களை பதம் பார்க்க போகும் புதிய டொயோட்டா இன்னோவா! இந்த திடீர் ட்விஸ்ட்டை யாருமே எதிர்பாக்கல!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரானது, ஹைப்ரிட் எம்பிவி (Hybrid MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எஸ்யூவி (SUV) மற்றும் எம்பிவி கார்களின் டிசைன் அம்சங்களை கலந்து கட்டி, டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரை உருவாக்கியுள்ளது. அத்துடன் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்ட்ரெயினும் (Strong Hybrid Powertrain) வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை வாங்குவதற்கு பலர் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில், இந்த கார் வரும் நவம்பர் 25ம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதை தொடர்ந்து வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா இன்னோவா ஜெனிக்ஸ் கார், பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை விட, புதிய இன்னோவா ஹைக்ராஸ் கார் உருவத்தில் பெரியதாக இருக்கும். எனவே பயணிகளுக்கு முன்பை காட்டிலும் தாரளமான இடவசதி கிடைக்கும். இதனால் பயணம் சொகுசாக அமையும்.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் முன் பகுதியில் புதிதாக பெரிய க்ரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லைட்கள், முரட்டுத்தனமான முன் பக்க பம்பர் மற்றும் புதிய டிசைனுடன் காட்சியளிக்கும் 18 இன்ச் வீல்கள் ஆகியவையும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. எளிமையாக சொல்வதென்றால், சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், புதிய இன்னோவா ஹைக்ராஸ் காரை டொயோட்டா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இன்டீரியரை பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, புதிய ஸ்டியரிங் வீல், பெரிய பனரோமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் என ஏராளமான வசதிகளை டொயோட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியுள்ளது. இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் மிகவும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷனையும் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டிருப்பது, புதிய 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் காரின் பாதுகாப்பு விஷயத்திலும் குறை வைக்கவில்லை. அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்ற வசதிகள் வழங்கப்பட்டிருப்பதை இதற்கு உதாரணமாக கூற முடியும்.

புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், மஹிந்திரா (Mahindra) நிறுவனத்திற்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) ஆகிய 2 கார்களின் டெலிவரிக்காக ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்து கொண்டுள்ளனர். இந்த 2 கார்களுக்கும் இந்திய சந்தையில் மஹிந்திரா நிறுவனமே எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

அதிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காருக்கெல்லாம் முன்பதிவு தொடங்கப்பட்ட 30 நிமிடங்களிலேயே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. அதேபோல் எக்ஸ்யூவி700 காருக்கும் முன்பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. இவர்களுக்கெல்லாம் உடனடியாக கார்களை உற்பத்தி செய்து, டெலிவரி கொடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய 2 கார்களுக்கும் காத்திருப்பு காலம் மிகவும் அதிகமாக உள்ளது.

தற்போதைய நிலையில் எக்ஸ்யூவி700 காருக்கு வேரியண்ட்களை பொறுத்து 17 மாதங்கள் வரையிலும், ஸ்கார்பியோ என் காருக்கு வேரியண்ட்களை பொறுத்து 24 மாதங்கள் வரையிலும் காத்திருப்பு காலம் உள்ளது. அதாவது முன்பதிவு செய்த பின்னர், டெலிவரி பெறுவதற்கு கிட்டத்தட்ட 2 வருடங்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும். இந்த சூழலில்தான் டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைக்ராஸ் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய 2 கார்களின் டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பலர், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த கார்களுக்கு காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளதாலும், இன்னோவா ஹைக்ராஸ் அனைத்து விதங்களிலும் ஏற்றதாக உள்ளதாலும், ஏராளமான வாடிக்கையாளர்கள் மஹிந்திராவில் இருந்து டொயோட்டா ஷோரூம் பக்கம் வரலாம். இது நடக்கும்பட்சத்தில் எக்ஸ்யூவி700, ஸ்கார்பியோ என் கார்களின் காத்திருப்பு காலம் குறையலாம்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross likely to reduce mahindra xuv700 scorpio n waiting period
Story first published: Wednesday, November 23, 2022, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X