8 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! களத்தில் இறங்கியது புது இன்னோவா! உல்லாச கப்பல்லாம் தோத்து போயிரும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் இன்னோவா ஹைக்ராஸ் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளையும் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை புக்கிங் (Booking) செய்து கொள்ளலாம். G மற்றும் GX என 2 பெட்ரோல் (Petrol) வெர்ஷன்களிலும், VX, ZX மற்றும் ZX (O) என 3 பெட்ரோல் ஹைப்ரிட் (Petrol Hybrid) வெர்ஷன்களிலும் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற வெர்ஷனை தேர்வு செய்து கொள்ள முடியும்.

8 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! களத்தில் இறங்கியது புது இன்னோவா! உல்லாச கப்பல்லாம் தோத்து போயிரும்!

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின், ஹைப்ரிட் அல்லாத வெர்ஷன்களில், அதாவது பெட்ரோல் வெர்ஷன்களில், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 174 பிஎஸ் பவரை உருவாக்கும். அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல் ஹைப்ரிட் வெர்ஷன்களில், முழு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைந்த பவர் அவுட்புட் 186 பிஎஸ் ஆகும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், CVT மற்றும் E-CVT கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது. புதிய இன்னோவா ஹைக்ராஸ் கார் ஒரு லிட்டருக்கு 21.1 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என 2 மாடல்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் கிடைக்கும்.

உருவத்தில் மிகவும் பெரிய இந்த கார் இவ்வளவு அதிகமான மைலேஜை வழங்குவது சிறப்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் நீளம் 4.75 மீட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1.85 மீட்டர்கள் ஆகவும், உயரம் 1.79 மீட்டர்களாகவும் உள்ளது. மறுபக்கம் இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2.85 மீட்டர்களாக இருக்கிறது. எனவே 21.1 கிலோ மீட்டர் மைலேஜ் என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம்தான்.

அத்துடன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் செயல்திறனிலும் அசத்துகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 9.5 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளும் (Features) அமர்க்களமாக இருக்கின்றன. வசதிகளை பொறுத்தவரையில், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் அடாஸ் தொழில்நுட்ப வசதி வழங்கப்பட்டுள்ள முதல் டொயோட்டா கார் இதுதான். இதன் மூலம் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு (Safety) கிடைக்கும். அத்துடன் 6 ஏர் பேக்குகள், அனைத்து பயணிகளுக்கும் த்ரி-பாயிண்ட் சீட் பெல்ட்கள், ஏபிஎஸ், இபிடி ஆகிய வசதிகளையும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் பெற்றுள்ளது. மேலும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பனரோமிக் சன்ரூஃப், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், மல்டி ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், ஏசி-க்கு டிஜிட்டல் கண்ட்ரோல்கள், புதிய ஸ்டியரிங் வீல், எம்ஐடி உடன் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியண்ட் லைட்டிங் ஆகிய வசதிகளும் டொயோட்டா இன்னோவ ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன.

மூச்சு முட்டுகிறதா? சற்று இளைப்பாறி கொள்ளுங்கள். ஏனெனில் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் இன்னும் முடியவில்லை. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகள் மற்றும் மேற்கூரையில் ஏசி வெண்ட்கள் என டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் இன்னும் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலை (Price) இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இந்த கார் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் வெகு விரைவிலேயே டொயோட்டா நிறுவனம் இந்த காரின் விலைகளை அறிவித்து, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அனேகமாக வரும் ஜனவரி மாதம் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விலைகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின் உடனடியாக டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடிய விரைவிலேயே டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரை, நாம் இந்திய சாலைகளில் பார்க்கலாம். டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் வருகையால், ஏற்கனவே விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரின் விற்பனை நிறுத்தப்படாது. இந்த 2 கார்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும். இந்த தகவலும் வாடிக்கையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota innova hycross unveiled in india features mileage bookings delivery details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X