இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு 4 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

புதிய கார் வாங்குவது என்பது மனதிற்கு மகிழ்ச்சியளிக்க கூடிய மிகவும் உற்சாகமான ஒரு விஷயம். நாம் விரும்பும் காரை முன்பதிவு செய்து விட்டு எப்போது டெலிவரி கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காரை புக்கிங் செய்யும் நாளுக்கும், டெலிவரி வழங்கப்படும் நாளுக்கும் இடைப்பட்ட நாட்களை காத்திருப்பு காலம் என்கின்றனர்.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

அதாவது ஆங்கிலத்தில் 'வெயிட்டிங் பிரீயட்'. உதாரணத்திற்கு ஒரு சில கார்களுக்கு 2 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கும். நீங்கள் முன்பதிவு செய்த பின், அடுத்த 2 மாதங்களில் கார் உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டு விடும். அதே நேரத்தில் இன்னும் ஒரு சில கார்களுக்கு 1 வருடம் வரை கூட காத்திருப்பு காலம் இருக்கும்.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

ஆனால் டொயோட்டா நிறுவனத்தின் ஒரு காருக்கு தற்போது 4 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி வருகிறது. ஆம், இது உண்மைதான். டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் காருக்குதான் (Toyota Land Cruiser) தற்போது 4 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவி கொண்டுள்ளது.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

ஏற்கனவே புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு 4 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அது புரளியாக இருக்கலாம் என கருதப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் காருக்கு 4 வருடங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக வெளியான செய்திகளை டொயோட்டா தற்போது உறுதி செய்துள்ளது.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

டொயோட்டா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விட்டதால், இந்த செய்தி உண்மை என்பது நமக்கு தெரியவந்துள்ளது. 300 சீரிஸ் லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி காருக்கான தற்போதைய தேவையை பூர்த்தி செய்வதற்கு தங்களுக்கு 4 வருடங்கள் வரை ஆகும் என டொயோட்டா ஜப்பான் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

எனினும் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு காரை வாங்குவதற்கு இவ்வளவு காலம் வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற கார்களுக்காக ஒரு சில வாடிக்கையாளர்கள் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அப்போதில் இருந்தே ஜப்பானில் இந்த காருக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜப்பான் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்த காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தால், அதாவது தேவை அதிகரித்தால், கார் நிறுவனங்களால் அந்த தேவையை பூர்த்தி செய்வது சிரமம்தான். தேவை அதிகரிக்க அதிகரிக்க அதற்கு ஏற்ப உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் காத்திருப்பு காலத்தை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு காரை விரைவாக டெலிவரி செய்ய முடியும்.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

ஆனால் உலகம் முழுவதும் தற்போது கார்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைதான் இதற்கு காரணம். புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருக்கு மிகவும் அதிகப்படியான காத்திருப்பு காலம் நிலவி வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

எனினும் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வருகின்ற காலத்தில் இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கலாம். 300 சீரிஸ் லேண்ட் க்ரூஸர் காரின் டிசைன் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏராளமான வசதிகளையும் டொயோட்டா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

இப்ப புக்கிங் செய்தால் 4 வருஷம் கழிச்சுதான் டெலிவரி... லேண்ட் க்ரூஸருக்காக எவ்ளோ நாள் வேணாலும் வெயிட் பண்ணலாம்

இந்த காரில் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 409 பிஹெச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 3.5 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் இன்ஜின் இதில் ஒன்றாகும். மற்றொன்று 3.3 லிட்டர் ட்வின்-டர்போ வி6 டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 304.5 பிஹெச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota japan confirms 4 year waiting period for new generation land cruiser details here
Story first published: Saturday, January 22, 2022, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X