லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. காத்திருந்தது வீண் போகல..

டொயோட்டா நிறுவனம் அதன் புதுமுக கார் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) -இன் விலையை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

டொயோட்டா நிறுவனம் அதன் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) காரின் விலை விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி என்னென்ன வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கும் என்கிற தகவலையும் அது வெளியிட்டுள்ளது. டொயோட்டா - மாருதி சுஸுகி இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட இருக்கும் வாகனமே இந்த அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும்.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

இந்த காரை உருவாக்கிய அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே மாருதி சுஸுகி நிறுவனத்திற்கான கிராண்ட் விட்டாரா காரும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆம், இரு நிறுவனங்களின் கூட்டணியில் அடிப்படையில் டொயோட்டாவிற்காக அர்பன் க்ரூஸர் ஹைரைடரும், மாருதி சுஸுகிக்காக கிராண்ட் விட்டாராவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

கிராண்ட் விட்டாரா காரின் விலைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இதோ அவற்றின் விலை விபரங்கள்:

வேரியண்ட் மோனோ டோன் டூயல் டோன்
Sigma Smart Hybrid MT ₹10,45,000 -
Delta Smart Hybrid MT ₹11,90,000 -
Delta Smart Hybrid AT ₹13,40,000 -
Zeta Smart Hybrid MT ₹13,89,000 -
Zeta Smart Hybrid AT ₹15,39,000 -
Zeta+ Intelligent Electric Hybrid eCVT ₹17,99,000 ₹18,15,000
Alpha Smart Hybrid MT ₹15,39,000 ₹15,55,000
Alpha Smart Hybrid AT ₹16,89,000 ₹17,05,000
Alpha Smart Hybrid ALLGRIP SELECT MT ₹16,89,000 ₹17,05,000
Alpha+ Intelligent Electric Hybrid eCVT ₹19,49,000 ₹19,65,000
லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

கிராண்ட் விட்டாரா காரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு சில தினங்களே ஆகின்றநிலையில் இப்போது டொயோட்டா நிறுவனம் அதன் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விலைகளை அதிரடியாக வெளியிட்டுள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விலை விபரங்கள் இதோ:

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைட்
வேரியண்ட் பெயர் விலை
G AT 2WD NEO DRIVE ₹15,54,000
S AT 2WD NEO DRIVE ₹13,48,000
V MT AWD NEO DRIVE ₹17,19,000
V MT 2WD NEO DRIVE ₹15,89,000
G MT 2WD NEO DRIVE ₹14,34,000
S MT 2WD NEO DRIVE ₹12,28,000
E MT 2WD NEO DRIVE ₹10,48,000
V eDrive 2WD HYBRID ₹18,99,000
G eDrive 2WD HYBRID ₹17,49,000
S eDrive 2WD HYBRID ₹15,11,000
V AT 2WD NEO DRIVE ₹17,09,000
லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

விலை விபரத்துடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ட்ரிம்கள் மற்றும் 11 விதமான வேரியண்டுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. இ, எஸ், ஜி, வி ஆகிய நான்கு ட்ரிம்களிலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

ஒரே தளத்தில் வைத்து தயாரிக்கப்பட்டிருந்தாலும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவைக் காட்டிலும் சற்று அதிக விலைக் கொண்டதாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காட்சியளிக்கின்றது. 3 ஆயிரம் தொடங்கி ரூ. 50 ஆயிரம் வரையில் கூடுதல் விலையைக் இக்கார் கொண்டிருக்கின்றது. இதற்கு கூடுதல் பிரீமியம் அம்சங்களை இக்காரில் டொயோட்டா சேர்த்திருப்பதே காரணம் என கூறப்படுகின்றது.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

ஆனால் எஞ்ஜின் விஷயத்தில் இரு கார்களும் ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா ஆகிய இரு கார்களும் இருவிதமான ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும். மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் ஆகியவை அவை ஆகும்.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

இதன் மைல்டு ஹைபிரிட் தேர்வில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர், மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரையும், 117 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் மைலேஜ் திறன் லிட்டருக்கு 21.1 கிமீ என கூறப்படுகின்றது.

லிட்டருக்கு 28கிமீ மைலேஜ் தரும் காரின் விலை விபரம் வெளியீடு!.. எதிர்பார்த்ததை போலவே சூப்பரான விலையில் வந்திருக்கு!

இதைவிட பல மடங்கு அதிக மைலேஜ் தரக் கூடியதே ஸ்ட்ராங் ஹைபிரிட் வெர்ஷன் எஞ்ஜின். அது லிட்டர் ஒன்றிற்கு 27.97 கிமீ வரை மைலேஜ் தரும் என அராய் அமைப்பு கூறியுள்ளது. 1.5 லிட்டர், 3 சிலிண்டர், அட்கின்சன் சைக்கிள் மோட்டாரே ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 79 பிஎச்பி பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டார் ஒன்றும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மோட்டார்களும் இணைந்து 114.5 பிஎச்பி பவரையும், 263 என்எம் டார்க் வரை வெளியேற்றும்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota revealed most awaited urban cruiser hyryder car prices
Story first published: Wednesday, September 28, 2022, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X