ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கின் உட்புற கேபின் தொடர்பான டீசர் படத்தினை டொயோட்டா வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு தெரிய வந்துள்ள விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

டொயோட்டா நிறுவனம் விரைவில் இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக்கிற்கு போட்டியாக அதன் ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கினை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக ஹைலக்ஸை இந்தியாவில் விளம்பரப்படுத்தும் பணியில் ஏற்கனவே டொயோட்டா இறங்கிவிட்டது.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

இதன்படி, சமீபத்தில் இந்த பிக்அப் ட்ரக்கின் டீசர் படம் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது டொயோட்டா ஹைலக்ஸின் உட்புற கேபின் தொடர்பான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சந்தைக்கான ஹைலக்ஸின் உட்புற கேபினின் தோற்றம் வெளிகாட்டப்படுவது எங்களுக்கு தெரிந்தவரையில் இதுவே முதல்முறையாகும்.

இந்த டீசர் வீடியோவின் மூலம் பார்க்கும்போது, ஐரோப்பாவில் விற்பனையில் உள்ள ஹைலக்ஸிற்கு இணையான தோற்றத்திலான கேபினை இந்திய ஹைலக்ஸ் வெர்சனும் பெற்று வரவுள்ளதை அறிய முடிகிறது. அதேபோல், பிரபலமான டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் சில அம்சங்களை இந்த புதிய பிக்அப் ட்ரக்கின் கேபினிலும் காண முடிகிறது.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

ஹைலக்ஸின் உட்புற கேபினில் டேஸ்போர்டில் கிடைமட்டமாக ஏசி, ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 8-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி, தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மடக்கும் வசதி உடன் ஓட்டுனர் இருக்கை போன்றவற்றையும் இந்த பிக்அப் ட்ரக்கின் உட்புறத்தில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

ஹைலக்ஸில் பாதுகாப்பு அம்சங்களாக அதிக எண்ணிக்கையில் காற்றுப்பைகள், முன்பக்க & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஏறுமுகமான சாலைகளில் தடையின்றி ஏறுவதற்கான கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் முதலியவை கொடுக்கப்பட உள்ளன. ஹைலக்ஸை ஃபார்ச்சூனரின் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் உடன் டொயோட்டா அறிமுகப்படுத்த உள்ளது.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் ஆஃப்-ரோடு திறனிற்காக 4-சக்கர ட்ரைவ்ட்ரெயின் (4WD) அமைப்பும் இந்த டொயோட்டா பிக்அப் ட்ரக் வாகனத்தில் கொடுக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே கூறியதுதான், இந்தியாவில் இந்த பிக்அப் ட்ரக்கிற்கு இஸுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் மட்டுமே நேரடி போட்டியாக விளங்கவுள்ளது. ஹைலக்ஸினை இந்திய சந்தையில் வருகிற ஜனவரி 20ஆம் தேதி அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

இதனை தொடர்ந்து டெலிவிரிகள் 2022 மார்ச் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டொயோட்டா பிக்அப் ட்ரக்கிற்கான முன்பதிவுகள் தற்சமயம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகனம் ஜன.20இல் அறிமுகம் செய்யப்பட்ட பின் புக்கிங் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படும்.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்கின் பரிமாண அளவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹைலக்ஸின் நீளம் 5325மிமீ, அகலம் 1855மிமீ மற்றும் உயரம் 1815மிமீ ஆக இருக்கலாம். இந்த வாகனத்தின் வீல்பேஸினை 3085மிமீ நீளத்தில் எதிர்பார்க்கிறோம். அதேபோல் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற வாகனமாக கொண்டுவரப்படுவதால், இதன் க்ரவுண்ட் க்ளியரென்ஸும் நன்கு பெரியதாக எதிர்பார்க்கலாம்.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

இதன் உடன் ஒப்பிடுகையில் இஸுஸுவின் டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்அப் ட்ரக் எல்லா அளவுகளிலும் பெரியதாக உள்ளது. இதனால் இந்த இரு பிக்அப் ட்ரக்குகளை ஒன்றாக நிற்க வைத்து பார்த்தோமேயானால், இஸுஸுவின் பிக்அப் ட்ரக் அளவில் பெரியதாக இருக்கும். டி-மேக்ஸ் வி-கிராஸில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஐரோப்பிய தரத்திற்கு இணையான கேபின் உடன் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்அப் ட்ரக்!! புதிய டீசர் படம் வெளியீடு!

அதிகப்பட்சமாக 163 பிஎஸ் மற்றும் 360 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இந்த இஸுஸு பிக்அப் ட்ரக் வாகனத்தில் 2-சக்கர-ட்ரைவ் மற்றும் 4-சக்கர-ட்ரைவ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டி-மேக்ஸ் வி-கிராஸின் ஆரம்ப விலை ரூ.19.06 லட்சங்களாக உள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota teased the upcoming hilux interior image ahead of launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X