ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

இந்தியாவிற்கான முதல் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) மிட் சைஸ் எஸ்யூவி காரை வெளியீடு செய்தது டொயோட்டா (Toyota) நிறுவனம். இக்கார்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவின் சி-எஸ்யூவி கார் பிரிவில் கால் தடம் பதிக்க இருப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நிறுவனம் அதன் புதுமுக காரை இந்திய சந்தையில் வெளீடு செய்துள்ளது. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder) எனும் காரையே அது வெளியீடு செய்துள்ளது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

இந்த காரில் மிக முக்கியமான அம்சமாக ஹைபிரிட் தொழில்நுட்பத்தை டொயோட்டா வழங்கியிருக்கின்றது. இதுமட்டுமின்றி இன்னும் பன்முக அதி-நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காராகவே அர்பன் க்ரூஸர் ஹைரடர் காரை டொயோட்டா உருவாக்கியிருக்கின்றது. இக்காரை இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

இதனை முன்னிட்டு தற்போது புக்கிங் பணிகள் தொடங்கியுள்ளன. ரூ. 25 ஆயிரம் முன்-தொகையில் காருக்கான புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன. மைல்டு ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் என இருவிதமான பவர்டிரெயின் தேர்வுகளில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைபிரிட் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், ஆல் வீல் டிரைவ் தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

டொயோட்டா நிறுவனம் இக்காரை மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் உருவாக்கியிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்தியர்கள் மத்தியில் இக்காருக்கு எதிர்பார்ப்பு பன்மடங்கு நீடித்துக் காணப்பட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே புதுமுக காரை நிறுவனம் இந்திய சந்தையில் வெளியீடு செய்திருக்கின்றது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

வெளிப்புற தோற்றம்:

அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் இதுவரை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிடாத ஓர் ஸ்டைலில் உருவாக்கியிருக்கின்றது. அதேநேரத்தில், வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சில முன்னணி கார் மாடல்களின் டிசைனை இக்காரில் மிக லேசாகப் பயன்படுத்தியிருக்கின்றது. இருப்பினும், புதிய ஸ்டைலில் மிகவும் கவர்ச்சியான காராக அர்பன் க்ரூஸர் ஹைரடர் காட்சியளிக்கின்றது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

இக்காரில், டபுள் லேயரிலான பகல் நேரத்தில் ஒளிரக் கூடிய லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த லைட் பியான நிறத்திலான க்ரிஸ்டர் அக்ரையலிக் க்ரில்லுடன் இணைந்தவாறு காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், குரோம் ஸ்டிரப் ஒன்று க்ரில்லிற்கு அடிப்பகுதியில் காரின் கார்னர் வரை நீண்டு காணப்படுகின்றது. இது அர்பன் க்ரூஸர் ஹைரைடருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தை வழங்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

இவற்றுடன் சேர்த்து காருக்கு இன்னும் பல மடங்கு கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக பெரிய முழு எல்இடி ஹெட்லேம்ப், மெல்லிய 'சி' வடிவிலான டெயில் லைட், இரட்டை 'சி' வடிவிலான பார்க்கிங் லேம்ப் மற்றும் பின் பக்கத்திலும் குரோம் ஸ்ட்ரிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குரோம் ஸ்ட்ரிப்புகள் காரின் மையப் பகுதியில் இரு டெயில் லைட்டுகளையும் இணைக்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இங்கேயே டொயோட்டா 'லோகோ' நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

காரின் உட்பக்கம்:

டொயோட்டா நிறுவனம் இந்த காரின் உட்பக்கத்தில் தொழில்நுட்ப அம்சங்களை வாரி வழங்கியிருக்கின்றது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலினோ, கிளான்ஸா மற்றும் புதிய பிரெஸ்ஸா உள்ளிட்ட கார் மாடல்களைப் போல் இந்த வாகனமும் மிக சூப்பரான பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களைப் பெற்றிருக்கின்றது.

ஆவ்சம்... இந்தியாவில் வெளியீட்டை பெற்றது டொயோட்டா ஹைரைடர்... ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சத்துடன் வந்திருக்கு!

ட்யூவல் டோன் நிறத்தால் காரின் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. டேஷ்போர்டு, இருக்கை உள்ளிட்டவை லெதரால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பிட்ட சில இடங்களை ஹைலைட் செய்து காட்டும் விதமாக குரோம் மற்றும் சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

பிரவுன்-பிளாக் நிறத்தினாலயே இக்காரை டொயோட்டா அலங்கரித்திருக்கின்றது. இவ்வாறு இரு நிறத்தால் காரின் உட்பக்கத்தை அலங்கரிப்பது லேட்டஸ்ட் டிரெண்டாக மாறியிருக்கின்றது. அண்மையில் விற்பனைக்கு வந்த ஜீப் மெரிடியன் கார்கூட இவ்வாறு இரு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மட்டுமல்ல இன்னும் பல கார்கள் உட்பக்கத்தில் ட்யூவல் டோன் அலங்கரிப்புடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

அதேநேரத்தில் டொயோட்டா நிறுவனம் ஸ்ட்ராங்கான ஹைபிரிட் வெர்ஷனையே ட்யூவல் டோன் இன்டீரியரில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மைல்டு ஹைபிரிட் வெர்ஷன் முழு கருப்பு நிறத்தை மட்டுமே கொண்டதாகக் கிடைக்கும். அதேநேரத்தில், பிற சிறப்பம்சங்கள் விஷயங்களில் இரு வெர்ஷன்களும் ஒரே மாதிரியானதாக இருக்கும்.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

சிறப்பு தொழில்நுட்ப வசதிகள்:

பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜர், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஹெட்ஸ்-அப் திரை, கார் இணைப்பு தொழில்நுட்பம், சிரி மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்ட் ஆகிய சூப்பரான சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை இப்புதுமுக காரில் டொயோட்டா வழங்கியிருக்கின்றது.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் எஞ்ஜின் விபரம்:

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரே இந்தியாவில் விற்பனைக்கு முதல் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட மிட் சைஸ் எஸ்யூவி வாகனமாகும். இக்காரில் நிறுவனம் அதன் இ-டிரைவ் நான்காம் தலைமுறை ஹைபிரிட் டெக்னாலஜியையே பயன்படுத்தியிருக்கின்றது. உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் யாரிஸ் ஹேட்ச்பேக் காரிலும் இதே டெக்னாலஜியையே அது பன்படுத்துகின்றது.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

இந்த அம்சத்தையே 1.5லிட்டர் டிஎன்ஜிஏ அட்கின்சன் சைக்கிள் எஞ்ஜினுடன் சேர்த்து வழங்கியிருக்கின்றது டொயோட்டா. இந்த மோட்டார் அதிகபட்சமாக 92 எச்பி மற்றும் 122 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த எஞ்ஜினுடன் சேர்த்து ஹைபிரிட் அம்சமாக 79 எச்பி மற்றும் 141 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

இந்த மோட்டாருக்கான மின்சார திறனை வழங்குவதற்காக ஹைரைடர் காரில் 177.6 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜாகும் எனில் 25 கிமீ வரை பயணிக்க உதவும். இந்த அம்சம் குறித்து கூறியிருக்கும் டொயோட்டா, 60 இல் 40 சதவீதம் பயணத்தை மேற்கொள்ள இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் உதவும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

ஆகையால், இந்த அம்சத்தின் வாயிலாக பன்மடங்கு எரிபொருள் சிக்கனத்தைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு லிட்டருக்கு 24-25 கிமீ வரை மைலேஜ் தரும். டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரடர் காரை நியோ டிரைவ் எஞ்ஜினுடன் வழங்க இருக்கின்றது.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

இது மாருதி சுஸுகியின் 1.5 லிட்டர் கே15சி மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வெர்ஷனாகும். இதில் இன்டெக்ரேடட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் அம்சமும் இடம் பெற்றிருக்கும். இந்த மோட்டாரே புதுமுக ப்ரெஸ்ஸா, எக்ஸ்எல்6 மற்றும் எர்டிகா ஆகிய கார் மாடல்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 103 எச்பி மற்றும் 137 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்தியாவிற்காக ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் உருவாகியிருக்கும் டொயோட்டா ஹைரைடர் வெளியீட்டை பெற்றது....

பாதுகாப்பு அம்சம்:

டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரில் பாதுகாப்பு அம்சங்களையும் வாரி வழங்கியிருக்கின்றது. 6 ஏர் பேக்குகள், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், இஎஸ்பி, ஹில் ஹோல்டு அசிஸ்ட், அனைத்து பயணிகளுக்குமான 3 பாயிண்ட் சீட் பெல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota unveiled midsize suv urban cruiser hyryder with strong hybrid tech
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X