திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

கார் மோதியதில் டிராக்டர் ஒன்று இரண்டாக பிளந்த சம்பவம் திருப்பதியில் அரங்கேறியிருக்கின்றது. இந்த விபத்து நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

சொகுசு கார் மோதியதில் டிராக்டர் ஒன்று இரண்டாக பிளந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த ஆச்சரியமளிக்கும் அதிர்ச்சியான விபத்து சம்பவம் ஆந்திர மாநிலம், திருப்பதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக, தன்னைவிட பெரிய உருவம் கொண்ட வாகனங்களுடன் சிறிய வாகனங்கள் மோதும்போது அந்த சிறிய வாகனங்களே பெருத்த சேதத்தைச் சந்திக்கும்.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

ஆனால், அத்தகைய ஓர் பாதிப்பை சொகுசு கார் சந்தித்ததாக தெரியவில்லை. அதேவேலையில், பெரிய உருவம் கொண்ட டிராக்டரோ மிக மோசமாக உருக்குலைந்திருக்கின்றது. துள்ளியமாக கூற வேண்டுமானால் இரண்டாக வெட்டப்பட்ட ரொட்டி துண்டை போல் விபத்தால் டிராக்டர் உருக்குலைந்திருக்கின்றது. இது கண்டிருக்கும் சேதத்துடன் ஒப்பிடுகையில் காரின் சேதம் பன்மடங்கு குறைவே.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

காரைவிட பல மடங்கு பெரிய உருவம் மற்றும் உறுதியான கட்டமைப்பைக் கொண்டிருந்தும் மிக மோசமாக அது சேதமுற்றிருக்கின்றது. ஆகையால், இந்த விபத்து சம்பவம் பெருத்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. டிராக்டர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படக் கூடிய வாகனம் என்பதால் அவை எப்போதும் மிக ஸ்ட்ராங்கானதாக உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு, நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

இந்த நினைப்பையே தற்போது திருப்பதியில் அரங்கேறியிருக்கும் விபத்து சம்பவம் கேள்வி குறியாக்கியுள்ளது. அதேவேலையில், விபத்தைச் சந்தித்திருக்கும் கார் அதிக பாதுகாப்பானது மற்றும் உறுதியான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது மிக தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. இந்த சொகுசு கார் பிரபல மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

இவ்விபத்திற்கு போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஆம், இந்த விபத்து சம்பவத்தில் இருவர் மீதும் தவறு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. திருப்பதியில் இருந்து சந்திரகரி பைபாஸ் வழியாக வந்த அந்த சொகுசு கார் மிக அதி-வேகத்தில் வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருக்கின்றனர்.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

இதேபோல், டிராக்டரும் மணலை ஏற்றிக் கொண்டு தவறான பாதையில் வந்திருக்கின்றது. இதை இருவரும் சற்றும் எதிர்பார்த்திராத காரணத்தினால் விபத்து அரங்கேறியிருக்கின்றது. குறிப்பாக அதிக வேகத்தில் வந்ததால் பென்ஸ் கார் ஓட்டுநரால் அவ்வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகின்றது. இதன் விளைவாகவே கடும் விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

இந்த விபத்தில் காரில் வந்தவர்கள் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. அதேவேலையில், டிராக்டர் ஓட்டுநர் கடுமையான காயங்கள் காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த விபத்தில் இருந்து தப்பித்திருக்கின்றனர்.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

விபத்துகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும், சம்பவம்குறித்து வழக்கு பதிந்து தற்போது தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று அதிக வேகத்தால் இந்தியாவில் விபத்து அரங்கேறுவது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இதனால் விபத்துகள் அரங்கேறியிருக்கின்றன.

திருப்பதியில் அரங்கேறிய விசித்திர விபத்து நிகழ்வு.. கார் மோதியதில் இரண்டாக பிளந்த டிராக்டர்!

இருப்பினும், விதிகளை மீறுபவர்கள் தொடர்ச்சியாக அதை செய்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, அதிக வேகம், தவறான பாதையில் பயணம், மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட காரணங்களால் நாள்தோறும் விபத்துகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், ஓர் விபத்தினால் டிராக்டர் இரண்டாக பிளப்பது இதுவே முதல் முறை ஆகும். ஆகையால், மக்கள் அனைவரும் இந்த விபத்தை ஆச்சரியத்துடன் பார்த்த வண்ணம் அந்த பகுதியைக் கடந்தனர்.

குறிப்பு: கடைசி இரு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tractor breaks into two pieces after collision with mercedes benz car near tirupati
Story first published: Tuesday, September 27, 2022, 19:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X