இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் மாதம் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.

Recommended Video

Maruti Alto K10 Launched At Rs 3.99 Lakh In TAMIL | What’s New On The Hatchback? Dual-Jet VVT & AMT

இதில், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள முக்கியமான கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)

இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த ஜூலை மாதம்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி விலைகள் அறிவிக்கப்பட்டு, இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

எனவே டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரை வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்திலேயே தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் தற்போது டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவோ அல்லது டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரை புக்கிங் செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரின் உற்பத்தி பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுகிறது. சுஸுகி நிறுவனத்தின் க்ளோபல்-சி பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் என டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி 2 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara)

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள க்ராண்ட் விட்டாரா எஸ்யூவி காரை, மாருதி சுஸுகி நிறுவனம் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி ஆன்லைன் மூலமாகவோ அல்லது நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாகவோ மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா காரை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்பா, ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் என மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா கார் மொத்தம் 6 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஜெட்டா ப்ளஸ் மற்றும் ஆல்பா ப்ளஸ் ஆகிய 2 வேரியண்ட்களில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் வழங்கப்படும். அதே நேரத்தில் மற்ற 4 வேரியண்ட்களிலும், சுஸுகி நிறுவனத்தின் மைல்டு ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படும்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

வசதிகளை பொறுத்தவரையில், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் ஏசி, 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற பல்வேறு வசதிகள் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா காரில் இடம்பெறவுள்ளன.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா எஸ்யூவி காரும், 2 இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆகும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா ஆகிய 2 கார்களும், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400)

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400. நீண்ட கால எதிர்பார்ப்புகளுக்கு பின்பு ஒரு வழியாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் செப்டம்பர் 6ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புது கார்கள்! எல்லாமே சூப்பரா இருந்தா என்னப்பா பண்றது!

இது ஏற்கனவே விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஐசி இன்ஜின் காரின் நீளம் 3,995 மிமீ ஆக உள்ளது. ஆனால் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.2 மீட்டர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ரேஞ்ச் 400 அல்லது அதற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களாக இருக்கலாம். அதிகாரப்பூர்வமான தகவல்கள் நமக்கு வரும் செப்டம்பர் 6ம் தேதி கிடைக்கும்.

Most Read Articles

English summary
Upcoming cars in india in september 2022
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X