போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் செடான் ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus). இந்த சூழலில் 'மேட் இன் இந்தியா' விர்டுஸ் செடான் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Volkswagen India) நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இதன் மூலமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB-A0-IN பிளாட்பார்ம் கார்களின் பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மிட்-சைஸ் எஸ்யூவி காருடன் தற்போது ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரும் இணைந்துள்ளது.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கார் என்ற பெருமையை விர்டுஸ் செடான் பெற்றுள்ளது. இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் கார் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி ஆகும். இந்த 2 கார்களுமே MQB-A0-IN பிளாட்பார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளன.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இதற்கிடையே இந்தியாவில் இருந்து தற்போது முதற்கட்டமாக 3 ஆயிரம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார்கள் மெக்ஸிகோவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மும்பை துறைமுகத்தில் இருந்து இந்த கார்கள் மெக்ஸோவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சஹான் தொழிற்சாலையில்தான் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

'மேட் இன் இந்தியா' கார்கள் வெளிநாடுகளின் சாலைகளில் பயணிப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் நடப்பாண்டு ஜூன் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தற்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் காரில் ஏராளமான வசதிகளை வாரி வழங்கியுள்ளது. இதில், ஒருங்கிணைந்த பகல் நேர விளக்குகளுடன் கூடிய எல்இடி ஹெட்லேம்ப்கள், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இதுதவிர எலெக்ட்ரிக் சன்ரூஃப், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 6 ஏர்பேக்குகள் ஆகிய வசதிகளும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் வழங்கப்படுகின்றன. அதே சமயம் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இதில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் செடான் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 148 பிஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஸ்கோடா ஸ்லாவியா (Skoda Slavia), ஹோண்டா சிட்டி (Honda City), ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) ஆகிய கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் போட்டியிட்டு வருகிறது.

போட்றா வெடிய... இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்... நம்ம நாடுனாலே கெத்துதான்!

இதில், ஸ்கோடா ஸ்லாவியா காரும் இந்திய சந்தைக்கு புதுவரவு ஆகும். ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் விர்டுஸ் செடான் ஆகிய கார்களை களமிறக்கியிருப்பதை போல், ஸ்கோடா நிறுவனம் குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி (Skoda Kushaq) மற்றும் ஸ்லாவியா செடான் ஆகிய 2 புதிய கார்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen india begins virtus sedan exports
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X