கோவையில் இப்படி ஒரு கார் ஷோரூமா! ஒட்டுமொத்த தமிழ்நாடே இதுக்காக பெருமைப்படணும்! எல்லாரும் படையெடுக்க போறாங்க!

ஆண்களுக்கு சரி நிகராக அனைத்து துறைகளிலும் தற்போது பெண்கள் சாதிக்க தொடங்கியுள்ளனர். கார் மற்றும் பைக்குகளை ஓட்டுவது முதல் விண்வெளி துறை வரை பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை ஒரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாக நாம் பார்க்கலாம்.

பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக, பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தற்போது பெண்கள் மட்டுமே பணியாற்ற கூடிய ஷோரூம்களை தொடர்ச்சியாக திறந்து வருகின்றன. இந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் ஒரு கார் ஷோரூமை சமீபத்தில் தொடங்கியுள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த வித்தியாசமான கார் ஷோரூம் தமிழ்நாட்டில் (Tamil Nadu) அமைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

கோவையில் இப்படி ஒரு கார் ஷோரூமா! ஒட்டுமொத்த தமிழ்நாடே இதுக்காக பெருமைப்படணும்! எல்லாரும் படையெடுக்க போறாங்க!

தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான கோவையில்தான் (Coimbatore) இந்த பெண்கள் கார் ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா பகுதியில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது. இது ரமணி கார்ஸ் (Ramani Cars) என்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரின் ஷோரூம் ஆகும். இந்த கார் ஷோரூமில் தற்போது 35க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவைகள், கஸ்டமர் கேர் சேவைகள், ஷோரூம் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு என அனைத்து பணிகளையும் இந்த பெண்களே மேற்கொள்கின்றனர். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு வழங்கும் பணிகளும் கூட பெண்களால்தான் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இந்த ஷோரூம் கோவை மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுக்க அனைத்து பகுதி மக்களின் கவனத்தையும் தற்போது கவர்ந்துள்ளது.

பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு தற்போது பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே பெண்களை மையமாக கொண்ட இத்தகைய வித்தியாசமான கார் ஷோரூம்கள், பெண் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான சூழலை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் மட்டும் இந்த வித்தியாசமான முயற்சியை கையில் எடுக்கவில்லை.

கூடவே இன்னும் பல்வேறு நிறுவனங்களும் பெண்கள் மட்டுமே பணியாற்ற கூடிய கார் ஷோரூம்களை திறக்கும் நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கூட ஐதராபாத் நகரில், முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் கார் ஷோரூம் ஒன்றை வெகு சமீபத்தில் திறந்திருந்தது என்பது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். இதுதவிர அம்ரிஸ்டர் நகரிலும் கூட முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்றும் கார் ஷோரூம் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திறந்துள்ளது.

முன்னணி நிறுவனங்களின் இதுபோன்ற நடவடிக்கைகளால் வரும் காலங்களில் இந்தியாவில் கார் விற்பனை பிரிவில் நிறைய பெண்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கோவையில் பெண்கள் மட்டுமே பணியாற்ற கூடிய கார் ஷோரூமை திறந்துள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் தற்போது புதிய யுக்திகளுடன் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் விற்பனை தற்போது சிறப்பான நிலையில் உள்ளது.

எஸ்யூவி (SUV) மற்றும் செடான் (Sedan) செக்மெண்ட்களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்கியுள்ள டைகுன் (Volkswagen Taigun) மற்றும் விர்டுஸ் (Volkswagen Virtus) ஆகிய இரண்டு கார்கள் தற்போது இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளன. இதன் மூலம் கிடைத்துள்ள உற்சாகத்தால் வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு பிரீமியமான கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

Most Read Articles

English summary
Volkswagen opens all women run car showroom in tamil nadu
Story first published: Tuesday, November 29, 2022, 17:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X