டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்... வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது டைகுன் காரை ஏற்கனவே 5 விதமான கலர்களில் விற்பனை செய்து வரும் நிலையில் இன்று முதல் 6வது கலரையும் சேர்ந்துள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன். இந்நிறுவனம் தனது பிரதான காராக ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரை விற்பனை செய்துவருகிறது. இந்த கார் தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டை சேர்ந்ததது. இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

இந்த கார் ஏற்கனவே குர்குமா மஞ்சள், வைல்டு செர்ரி சிவப்பு, கேன்டி ஒயிட், ரிஃப்லெக்ஸ் சில்வர் மற்றும் கார்பன் ஸ்டீல் க்ரே ஆகிய 5 நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறத்தில் கூடுதலாக தற்போது நீல நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது செப் 8 அதாவது இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் "புதிய போல்டான கலர் அறிமுகம்..." என்ற வாசகத்துடன் பிரைட்டான நீல நிறத்தில் கார் டைகுன் காரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்த காரில் வேறு ஏதேனும் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்ற தகவலை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் கடந்தாண்டு தனது டைகுன் காருடன் காம்பேக்ட் எஸ்யூவி மார்கெட்டிற்குள் நுழைந்தது. இந்த மாதத்துடன் ஒரு ஆண்டு முடிவடையும் நிலையில் புதிய கலரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செக்மெண்டில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

இந்த ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் ரூ11.40 லட்சம் முதல் ரூ18.60 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. டான் வேரியன்டாக ஜிடி ப்ளஸ் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இவிஓ டிஎஸ்ஜி வேரியன்ட் இருக்கிறது. இந்த டைகுன் காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் MQB A0 IN என்ற ஃபிளாட்ஃபார்மில் தயாரிக்கிறது.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

இதே ஃபிளாட்ஃபார்மின் டெக்னிக்கல் குஷனில் தான் ஸ்கோடா குஷாக் காரும் தயாரிக்கப்படுகிறது. டைகுன் காரில் இரண்டு டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.0 லிட்டர் இன்ஜின் மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் இன்ஜின் டிஎஸ்ஜி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் பல தொழிற்நுட்ப அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த காரில் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 8 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியன உள்ளன.

டைகுன் காரில் அட்டகாசமான புதிய கலரை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் . . . வேறென்ன அப்டேட் எல்லாம் இருக்கு தெரியுமா . . .

இந்த காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இருக்கிறது. 6 ஸ்பீக்கர்களுடன் இந்த காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது போக சன்ரூஃப், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் மற்றும் வாய்ஸ் கமெண்ட் ரெகனேஷன் உள்ளிட்ட காரில் இருக்கிறது.

{document1}
English summary
Volkswagen taigun got bright blue color as a 6th new color
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X