ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்... என்னது அது?

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் 2 புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்தாண்டு இந்தியாவில் டைகுன் என்ற எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே மார்கெட்டில்உள்ள ஹூண்டாய் க்ரெட்டா, ஸ்கோடா குஷாக், கியா செல்டோஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த காரும் களம் இறங்கியது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

இந்த கார் களமிறங்கிய கேட்டகிரியில் பல கார்கள் மக்கள் மனதைப் பிடித்திருந்தாலும் ஃபோக்ஸ்வேகன் என்பதால் மக்கள் இந்த கார் மீது பார்வையைத் திருப்பினர். இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கத் துவங்கினர். இந்த கார் மெல்ல மெல்ல மக்களைக் கவர்ந்து வந்தது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

இந்நிலையில் இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிதாக 2 அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஐடியல் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி அந்நிறுவனம் தயாரிக்கும் இந்த கார்கள் எல்லாம் இந்த அம்சங்களுடன்தான் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

புதிதாக மாற்றப்பட்டுள்ள இந்த அம்சத்தால் காரின் விலை சற்று அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட இந்த காரின் விலை மே 2ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தற்போதைய விலையிலிருந்து அனைத்து வேரியண்ட்களுக்கும் 4 சதவீதம் அதிகரித்து அதிகபட்சமாக ரூ45,700 வரை உயர்ந்துள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

இந்த கார் MQB A0 IN என்ற பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில்தான் ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஆகிய வாகனங்களும் தயாரிக்கப்படுகிறது. அதனால் இந்த கார் போல்ட், பாக்ஸி பிரிமியம் லுக்கை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

இந்த காரில் ஃபோக்ஸ்வேகனின் தனித்துவமான ஹெட்லைட் வரையிலுமான முன்பக்க கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கிரில் மற்றும் பம்பர் பகுதியில் தேவையான அளவு க்ரோம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

இந்த காரின் பம்பர் பகுதி மஸ்குலர் பிரிமியம் லுக்கில் ஃபாக் லைட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார்களில் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் இவ்வளவு அம்சங்கள் இருந்தாலும் அந்த காரின் அழகே அதன் பின்புறத்தில்தான் அமைந்துள்ளது. இதன் பின்புறமும் மஸ்குலர் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

பின்புறத்தில் இரண்டு தனித்தனி எல்இடி லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த லைட்களை இணைக்கும்படியாக எல்இடி பார் லைட் பின்பக்க கதவில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் நடுவில் ஃபோக்ஸ்வேகனின் லோகோவையும் பொருத்தியுள்ளனர். அதே போல பின் பக்க பம்பரின் கீழ்ப் பகுதியில் க்ரோம் பட்டை டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது காருக்கு பிரிமியம் லுக்கை கொடுக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

காரின் உட்புறத்தைப் பொறுத்தவரை முழுவதுமான டிஜிட்டல் கிளஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் செய்யும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், வென்டிலேட்ட் சீட்ஸ், உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் இப்படி 2 விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள்

இந்த கார் பெட்ரோல் இன்ஜின் உடன் மட்டுமே விற்பனையாகி வருகிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இதில் 1.0 லிட்டர் இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆகிய 2 ஆப்ஷன்களும், 1.5 லிட்டர் இன்ஜினில் மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது DSG கியர் பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்களும் உள்ளன.

Most Read Articles
English summary
Volkswagen taigun got two new features and price hiked know full details
Story first published: Tuesday, May 3, 2022, 23:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X