ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் விற்பனை உயர்ந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி காருக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் காராக டைகுன் தற்போது உருவெடுத்துள்ளது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

கடந்த ஏப்ரல் மாதமும் இது உண்மையாகியுள்ளது. ஆம், கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் டைகுன் அளவிற்கு வேறு எந்த காரையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்யவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் 2,631 டைகுன் கார்களை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் அதிகம் விற்பனையான ஃபோக்ஸ்வேகன் கார்களின் பட்டியலில் டைகுன் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இது சிறப்பான விற்பனை எண்ணிக்கை என்பதுடன், விற்பனையில் சிறப்பான வளர்ச்சியையும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் 2,380 டைகுன் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 2,631 ஆக உயர்ந்துள்ளது. இது 10.55 சதவீத வளர்ச்சியாகும்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் விற்பனையில் இல்லை என்பதால், வருடாந்திர ஒப்பீட்டை செய்ய முடியாது. வரும் மாதங்களிலும் டைகுன் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்திய சந்தையில் இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கிடைக்கிறது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இதில், 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்குகிறது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இதுதவிர 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் வழங்கப்படுகிறது. இங்கேயும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர் பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் டீசல் இன்ஜின் தேர்வு இல்லை. ஃப்ரண்ட்-வீல்-டிரைவ் ஆப்ஷனுடன் மட்டுமே ஃபோக்ஸ்வேகன் டைகுன் கிடைக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை. இதில், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இதுதவிர வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 17 இன்ச் மெஷின் கட் அலாய் வீல்கள், மை ஃபோக்ஸ்வேகன் கனெக்ட் (கனெக்டட் கார் தொழில்நுட்பம்) போன்ற வசதிகளும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காரில் ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இதில், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, 6 ஏர்பேக்குகள் போன்றவை பாதுகாப்பு வசதிகளில் முக்கியமானவை. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஆரம்ப விலை 11.40 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.60 லட்ச ரூபாயாக உள்ளது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக், கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களுடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிட்டு வருகிறது. இதில், ஸ்கோடா குஷாக் காரும் இந்த செக்மெண்ட்டிற்கு புதுவரவுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்ற கார்களின் வருகையால், ஏற்கனவே இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ள கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா போன்ற கார்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியை சமாளிக்க ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு செக் வைத்த ஃபோக்ஸ்வேகன்... டைகுன் காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது!

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் க்ரெட்டா காரின் நைட் எடிசன் என்ற புதிய மாடலை ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும் ஹூண்டாய் நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்களின் வருகையால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிப்பதற்கு ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Volkswagen taigun sales increased by 10 55 per cent in april 2022
Story first published: Wednesday, May 18, 2022, 17:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X