உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் ஒன்று வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

இந்திய சந்தைக்கு 2022ம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட அனைத்து வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் உடனடியாக விற்று தீர்ந்துள்ளன. வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் இந்திய சந்தைக்கு நடப்பு 2022ம் ஆண்டிற்காக 150 எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை ஒதுக்கீடு செய்தது. இந்த புதிய காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 2 மணி நேரத்திற்கு உள்ளாக 150 கார்களும் விற்று தீர்ந்து விட்டன.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் இதுதான். இதற்கு முன்பாக ஐசி இன்ஜின் கார்களை மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், முதல் முறையாக எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில், இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வால்வோ நிறுவனம் நேற்றுதான் (ஜூலை 26) விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

2022ம் ஆண்டிற்கு இந்திய சந்தைக்காக ஒதுக்கப்பட்ட அனைத்து வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் விற்று தீர்ந்து விட்ட நிலையில், வால்வோ நிறுவனம் தொடர்ந்து, இந்த காருக்கு முன்பதிவுகளை ஏற்று கொண்டுதான் உள்ளது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, டெலிவரி பணிகள் வரும் அக்டோபர் மாதம்தான் தொடங்கப்படவுள்ளது.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

அக்டோபர் மாதம் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டாலும், தற்போது முன்பதிவு செய்யப்பட்டுள்ள 150 எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களையும் நடப்பாண்டு டிசம்பர் மாதத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து விட வேண்டும் என வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிறகு, மேற்கொண்டு முன்பதிவு செய்பவர்களுக்கு எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

அதாவது வரும் 2023ம் ஆண்டில் கார்கள் டெலிவரி செய்யப்படும். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிகப்பெரிய பெருமை ஒன்றை தன்வசப்படுத்தியுள்ளது. இதுதான் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார் ஆகும். கர்நாடக மாநிலம் பெங்களூர் நகருக்கு அருகே உள்ள ஒசகோட்டையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில்தான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் அசெம்பிள் செய்யப்படவுள்ளன.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 78kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் அதிகபட்சமாக 408 பிஹெச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 418 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

150kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த பேட்டரியை வெறும் 28 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை ரீசார்ஜ் செய்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்காக வாடிக்கையாளர்கள் மிக நீண்ட காலமாக காத்திருந்தனர்.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

ஆம், இப்போது விற்பனைக்கு வந்து விடும், அப்போது விற்பனைக்கு வந்து விடும் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஒரு வழியாக தற்போதுதான் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஒரு வழியாக விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

இதுகுறித்து வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், ''வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காருக்காக எங்கள் வாடிக்கையாளர்களின் மிக நீண்ட கால காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்து விட்டது. வெறும் 2 மணி நேரங்களில் முன்பதிவுகளை வாரி வழங்கியிருப்பது, வாடிக்கையாளர்கள் வால்வோ இந்தியா கார்ஸ் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது'' என்றார்.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் 55.90 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபாய் என்ற முன்பதிவு தொகையுடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கு வால்வோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (ஜூலை 27) முன்பதிவுகள் தொடங்கப்பட்டன.

உண்மையா நம்ப முடியல... வெறும் 2 மணி நேரத்தில் விற்று தீர்ந்த எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் நடந்த அதிசயம்!

முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 2 மணி நேரத்திற்கு உள்ளாக இந்தியாவிற்கு நடப்பு 2022ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 150 வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்திய சந்தையில், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் மிக முக்கியமான போட்டியாளராக இருக்கும்.

Most Read Articles
English summary
Volvo xc40 recharge electric suv sold out in india for 2022 check details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X