ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் பல்வேறு சொகுசான மற்றும் பாதுகாப்பான கார்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் தற்போது வரை எந்தவொரு எலெக்ட்ரிக் காரையும் வால்வோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யவில்லை. எனினும் இந்த குறை நாளை (ஜூலை 26) நிவர்த்தி செய்யப்பட்டு விடும்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

ஆனால் இந்திய சந்தைக்கான தனது முதல் எலெக்ட்ரிக் காரை வால்வோ நிறுவனம் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இது வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) எலெக்ட்ரிக் கார் ஆகும். நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதால், இந்த எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது நமக்கு நாளை அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரானது, எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை வால்வோ நிறுவனம் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்வது மட்டும் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வந்தது. கோவிட்-19 பிரச்னைதான் இந்த தாமதத்திற்கு மிக முக்கியமான காரணம்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

ஒருவழியாக எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலைகள் நாளை அறிவிக்கப்படும் என வால்வோ நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே எக்ஸ்சி40 ஐசி இன்ஜின் காரை விற்பனை செய்து வருகிறது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஒரு கார் ஆகும்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனைதான், எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற பெயரில் வால்வோ நிறுவனம் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எப்படி நெக்ஸான் மற்றும் டிகோர் ஐசி இன்ஜனின் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனை செய்து வருகிறதோ, அதேபோல் வால்வோ நிறுவனமும் எக்ஸ்சி40 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை நாளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவுள்ளது. எனவே வால்வோ நிறுவனத்தால் இந்த காரின் விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்வதுடன் மட்டுமல்லாது, எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளையும் வால்வோ நிறுவனம் நாளையில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

ஆனால் டெலிவரி பணிகள் உடனடியாக தொடங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை. அனேகமாக நடப்பாண்டின் பண்டிகை காலத்தில்தான் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை வால்வோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) போன்ற பிரீமியம் எலெக்ட்ரிக் கார்களுக்கு வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளிக்கும்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், 78kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 418 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

மறுபக்கம் இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக 408 ஹெச்பி பவரையும், 660 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் 150 KW டிசி ஃபாஸ்ட் சார்ஜருக்கு சப்போர்ட் ஆகும். இந்த சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரி வெறும் 33 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும்.

ரொம்ப ஹேப்பி... இந்திய மக்கள் ரொம்ப நாளா வெயிட் பண்ணீட்டு இருக்கும் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

வசதிகளை பொறுத்தவரையில், 12.3 இன்ச் அளவில் டிரைவருக்கான முழு டிஜிட்டல் திரை, செங்குத்தான 9.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இதுதவிர வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், பனரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா போன்ற பல்வேறு வசதிகளையும் வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில் வழங்கியுள்ளது.

Most Read Articles
English summary
Volvo xc40 recharge electric suv to launch tomorrow in india all details here
Story first published: Monday, July 25, 2022, 19:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X