கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

கார் ஏசியில் உள்ள ரீசர்குலேஷன் பட்டனை எப்படி எந்த நேரத்தில் எந்த சூழ்நிலைகளில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற விரிவான தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம் காணலாம் வாருங்கள்

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

இன்று வெளியாகும் கார்களில் ஏசி வசதியில்லாத கார்களை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு காருக்கு ஏசி என்பது ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது கார் தயாரிப்பு நிறுவனங்களும் பேசிக் வேரியன்டிலேயே ஏசியைகளை வழங்கத் துவங்கிவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் உள்ள காற்று மாசு, வெப்பம் ஆகிய விஷயங்களால் ஏசி இல்லாத கார் பயணத்தைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அது வளர்ந்துவிட்டது.

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

இந்நிலையில் ஏசி வைத்த காரில் பணித்தவர்கள் அனைவருக்கும் நீங்கள் மேலே உள்ள புகைப்படங்களில் பார்த்த பட்டனைப் பார்த்திருப்பீர்கள். இந்த பட்டனிற்குப் பெயர் ரீசர்குலேஷன் பட்டன். இந்த பட்டன் எதற்கு இருக்கிறது என்றே பலருக்குத் தெரியாது. இந்த பட்டனுக்கான அர்த்தம் என்ன? இந்த பட்டன் ஆன் செய்யப்பட்டிருந்தால் ஏசி எப்படி வேலை செய்யும் ஆஃப் செய்யப்பட்டால் ஏசி எப்படி வேலை செய்யும்? கார் பயணம் செல்லும் போது இதை ஆன் செய்திருந்தால் நல்லதா ஆஃப் செய்திருந்தால் நல்லதா என்பது குறித்துக் காணலாம் வாருங்கள்

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

பொதுவாக கார் ஏசி கண்ட்ரோல் பட்டன்களில் ஒன்றான இந்த பட்டன் காரின் ஏசி எந்த காற்றைக் குளிர்விக்க வேண்டும் என்பதை கண்ட்ரோல் செய்யும் பட்டன், பொதுவாக கார்களில் இரண்டு விதமாக காற்றை எடுத்துக் குளிர்விக்கும். ஒன்று காருக்கு வெளியே இருக்கும் காற்றை உள்ளே இழுத்து அதைக் குளிர்வித்து காருக்குள் அனுப்பும், மற்றொன்று காருக்குள்ளேயே இருக்கும் காற்றை மீண்டும் குளிர்வித்து காருக்குள்ளேயே அனுப்பும்

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

இப்படி இரண்டு ஆப்ஷன்கள் இருப்பதால் இதில் எது காருக்கு சிறந்தது? எந்த ஆப்ஷன் வைத்தால் காரில் பணிக்கும் போது நல்லது என்ற கேள்வி பலருக்கு இருக்கும். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த இரண்டு ஆப்ஷன்களை சரியான இடத்தில் சரியாகப் பயன்படுத்தினால் தான் காரில் சிறப்பான பயண அனுபவத்தைப் பெற முடியும். எந்த நேரத்தில் எதைப் பயன்படுத்த வேண்டும் எனப் பார்க்கும் முன் இந்த இரண்டு ஆப்ஷன்களிலும் உள்ள நன்மை தீமைகள் என்னென்ன எனப் பார்க்கலாம்

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

வெளியில் உள்ள காற்றை காருக்குள் இழுத்து அதைக் குளிர்வித்து காருக்குள் அனுப்பும் ஆப்ஷனில் வெளிப்புறத்தில் உள்ள தட்ப வெப்ப நிலை அதிகமாக இருந்தால் சூடான காற்றை உள்ளே இழுத்து அதைக் குளிர்வித்து அனுப்பும் அதனால் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டும். அதே நேரத்தில் வெளியில் உள்ள காற்றில் தூசு அதிகமாக இருந்தால் அந்த தூசிகளும் ஏசியின் மீது வந்து படியும் அபாயம் உள்ளது.

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

இந்த ஆப்ஷனை நாம் கார் அதிக நேரம் ஒரே இடத்தில் பூட்டப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தால் காருக்குள் இருக்கும் காற்று மாசு பட்டிருக்கும் அந்த காற்றை வெளியேற்ற வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுத்துக் குளிர்விக்கும் ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும் உள்ளேயே இருக்கும் காற்றைக் குளிர்வித்தால் அது உடல் நலத்திற்கு கேடாகக் கூட அமையலாம்.

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

அதே போல கார் அதிக நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தாலும் இந்த ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும். ஆனால்

சில நேரம் ஏசி வழியாக வெளியில் உள்ள காற்றில் இருக்கும் சிறிய அளவிலான தூசிகள் ஏசி வழியாக காருக்குள் வந்து சீட் மற்றும் பயணிகள் மீது படியும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

வெளியில் உள்ள காற்றைக் குளிர்விக்க ஏசி அதிகம் பயன்படுவதால் அந்த நேரத்தில் காரின் மைலேஜ் பாதிக்கப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இது அவசியமான நேரத்தில் மட்டும் இந்த ஆப்ஷனை பயன்படுத்துங்கள்

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

காருக்குள் இருக்கும் காற்றையே ஏசி குளிர்வித்து அனுப்பும் ஆப்ஷனை பயன்படுத்தும் போது ஏசிக் குறைவாகவே வேலை செய்யும். இது ஒரு விதத்தில் நல்லது என்றாலும் காருக்குள் நீண்ட நேரம் ஒரே காற்று மாறி மாறி சுற்றி வருவது உடல் நலத்திற்கு கேடு. நீண்ட நேரம் இதைச் சுவாசித்தால் உடல் நலக்குறைவு ஏற்படலாம்.

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

அதனால் நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது இந்த ஆப்ஷனை பயன்படுத்தலாம் ஆனால் அவ்வப்போது வெளியில் உள்ள காற்றை உள்ளே இழுக்கும் ஆப்ஷனை செய்து விட வேண்டும். சிறிது நேரத்தில் அதை மறக்காமல் ஆஃப் செய்துவிட வேண்டும். இப்படியாகச் செய்வதால் காரும் பாரமரிப்பு குறைவாக இருக்கும் உடல் நலத்திற்கும் கேடு இல்லாமல் இருக்கும்

கார் ஏசியில் உள்ள இந்த பட்டனை எப்பொழுதெல்லாம் பயன்படுத்த வேண்டும் தெரியுமா ?

அதே நேரத்தில் வெகு நேரம் காரை நிறுத்தி வைத்திருந்தாலே அல்லது வெளியில் காரை நிறத்தி வைத்திருந்தாலே வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அது தான் உடல் நலத்திற்கு நல்லது ஆனால் இந்த ஆப்ஷனை தேர்வு செய்யும் போது காற்று மாசு குறைவான பகுதியில் கார் இருப்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள்.

Most Read Articles
https://www.drivespark.com/photos/2022-volkswagen-virtus-images-2238/
English summary
What are the merits and demerits of ac Recirculation button
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X