தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? முழு விபரம்!

தமிழகத்தில் எத்தனை சதவீதம் மக்கள் கார் மற்றும் பைக்குளை பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய சர்வே விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

வாகனங்கள் மக்களின் அத்தியாவசி தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது. எனவேதான், இவற்றின் வளர்ச்சி மக்கள் தொகைக்கு இணையானதாக காட்சியளிக்கின்றது. ஓர் நபரிடம் சொந்த வீடு இருக்கின்றதோ, இல்லையோ நிச்சயம் குறைந்தபட்சம் ஓர் இருசக்கர வாகனம் இருந்துவிடுகின்றது. இவை தவிர்க்க முடியாத தேவைகளாக மாறியிருப்பதனால், அதிக பராமரிப்பு செலவு வழங்கும் என தெரிந்தும் மக்கள் அதிகளவில் வாகனங்களை வாங்கி வருகின்றனர்.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

இந்த நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை சதவீதம் மக்கள் கார், இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நேஷனல் ஃபேமிலி ஹெல்த் நடத்திய சர்வேவின் வாயிலாகவே இந்த சுவாரஷ்யமான தகவல்கள் தெரிய வந்துள்ளன.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

தமிழகத்தில் எத்தனை சதவீதம் பேர் கார்களை பயன்படுத்துகின்றனர்?

சுவாரஷ்யமாக தமிழகம் இந்த விஷயத்தில் பல மடங்கு பின் தங்கியிருப்பதாக நேஷனல் ஃபேமிலி ஹெல்த் வெளியிட்டிருக்கும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வசிக்கும் 6.5 சதவீத மக்களே கார்களை பயன்படுத்துவதாக சர்வே தகவல் தெரிவித்துள்ளது. அதேவேலையில், கோவாவில் 45.2 சதவீதம் மக்கள் கார்களை பயன்படுத்துவதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல் தெரிவிக்கின்றது.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

இதற்கு அடுத்தபடியாக கேரளா மாநிலம் இருக்கின்றது. இந்த மாநிலத்தில் 24.2 சதவீதம் மக்கள் கார்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, காரை அதிகம் பயன்படுத்தும் மாநிலவாசிகளாக நாகாலாந்து, ஜம்மு மற்றும் கஷ்மீர் மக்கள் உள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் 23.7 சதவீதம் மக்கள் கார்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நாகாலாந்தில் 21.3 சதவீதம் மக்கள் கார்களை பயன்படுத்துவர்களாக உள்ளனர். இதுகுறித்த முழு விபர வரைபடத்தைக் கீழே பார்க்கலாம்.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

தமிழகத்தில் எத்தனை சதவீதம் பேர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர்?

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோரே அதிகம். இதை உறுதிப்படுத்தும் வகையில் 63.9 சதவீதம் பேர் தமிழகத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவதாக தற்போது வெளியாகியிருக்கும் புள்ளி விபரங்கள் தகவல் தெரிவிக்கின்றது. அதேவேலையில், அதிகபட்சமாக 86.7 சதவீதம் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களை மக்களாகக் கொண்டிருக்கின்றது, கோவா.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் அதிகம் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் இருக்கின்றனர். அந்த மாநிலத்தில் 75.6 சதவீதம் மக்கள் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாகவே ராஜஸ்தான் மற்றும் தமிழகம் இருக்கின்றது. ராஜஸ்தானில் 66.4 சதவீதம் மக்கள் டூ-வீலர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதன் முழு விபர வரைபடத்தைக் கீழே நீங்கள் பார்க்கலாம்.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

மிதிவண்டி பயன்பாட்டாளர்கள் அதிகம் உள்ள மாநிலம்

சைக்கிளை அதிகம் பயன்படுத்தோவரைக் கொண்ட மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கின்றது. இந்த மாநிலத்தில் 78.9 சதவீதம் பேர் மிதிவண்டியின் உரிமையாளர்களாக உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரபிரேதசம் 75.6 சதவீதம் சைக்கிள் பயன்பாட்டாளர்களைக் கொண்டிருக்கின்றது. இதேபோல் ஒடிசாவில் 72.5 சதவீதம் சைக்கிளை பயன்படுத்துவோர் உள்ளனர். தமிழகத்தில் 43.3 சதவீதம் பேர் மட்டுமே மிதிவண்டியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதுகுறித்த தெளிவான தகவலை வழங்கும் வரைபடம் இதோ...

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

100 குடும்பங்களில் 10 குடும்பங்கள் சொந்தமாக கார் வைத்திருக்கும் எனில் அதற்கு 10 சதவீதம் என்றும், இதே பத்து குடும்பங்கள் 20 கார்களை வைத்திருந்தாலும் அதே பத்து சதவீதம் என்கிற அடிப்படை வீதத்திலேயே மேலே பார்த்த புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

இந்த தகவலின் வாயிலாக இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம் டூ வீலர்கள் (பைக், ஸ்கூட்டர்) மற்றும் கார்களை பயன்படுத்துவோர் உள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. இந்தியா இன் பிக்சல்ஸ் (India in pixels) தளம் வெளியிட்டிருக்கும் தகவலின் வாயிலாகவே இந்த அனைத்து புள்ளி விபரங்களும் தற்போது தெரிய வந்திருக்கின்றது.

தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? இதோ முழு விபரம்!

இந்திய அளவில் எத்தனை சதவீத குடும்பங்கள் கார் வைத்திருக்கின்றன?

ஒட்டுமொத்த இந்திய அளவில் பார்த்தோமேயானால் 7.5 சதவீத குடும்பங்கள் காரையும், 49.7 சதவீதம் குடும்பம் இருசக்கர வாகனங்களையும் மற்றும் 50.4 சதவீதம் குடும்பங்கள் மிதிவண்டியையும் வைத்திருக்கின்றன. சைக்கிளை தவிர மற்ற அனைத்தும் வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. காரை பயன்டுத்துவோர்களின் எண்ணிக்கை 1.5 சதவீதமும், இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது. சைக்கிளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 சதவீதம் வரை குறைந்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Which india states have highest percentage of car bike ownership
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X