எஸ்யூவி கார்கள் விற்பனை கொடி கட்டி பறக்குது... கிடுகிடு வளர்ச்சிக்கு உண்மையான காரணம் என்னனு தெரியுமா?

கடந்த செப்டம்பர் மாத கார்கள் விற்பனை நிலவரங்களில் ஒரே ஆண்டில் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்துள்ளது.இது எப்படி சாத்தியம்? இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? காணலாம் வாருங்கள்

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

ஆக்டோபர் மாதம் துவங்கிவட்ட நிலையில் கடந்த செப்டம்பர் மாத விற்பனை அறிக்கையை அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் வெளியிட்டுவிட்டன. அந்த வகையில் ஒவ்வொரு செக்மெண்டிலும் அதிகமாக கார்களை விற்பனை செய்யும் விபரங்களும் வெளியாகியுள்ளன. இதில் பெரும்பாலும் பெரும் வளர்ச்சியைக் காண முடிகிறது. இதற்கு என்ன காரணம்? எப்படி ஒரே ஆண்டிற்கு நூற்றுக்கணக்கான சதவீத வளர்ச்சி எப்படி சாத்தியம்? இதை எல்லாம் தெரிந்து கொள்ளத் துவங்கும் முன்பு கார்களின் விற்பனை நிலவரத்தை முதலில் தெரிந்து கொள்வோம்.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

கடந்த செப்டம்பர் மாதம் அதிகமாக விற்பனையாகி டாப் 10 எஸ்யூவி கார்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கார் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் தான். கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 15,445 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 724 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது அப்பொழுது வெறும் 1874 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது டாடா நெக்ஸான் கார் தான். இந்த கார் அதன் பாதுகாப்பு அம்சங்களுக்காகப் பெயர் பெற்ற கார் இந்த கார் அறிமுகமானது முதல் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த கார் மொத்தம் 14,518 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்தாண்டு செப்டம்பர் மாத விற்பனையான 9211 கார்கள் என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 57.6 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

அடுத்த இடத்தில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா. இந்நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் கார் இது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 12866 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்தாண்டு செப் மாத விற்பனையை ஒப்பிடும் போது 57 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். அதாவது கடந்தாண்டு செப்., மாதம் வெறும் 8193 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

4வது இடத்தில் இருப்பது சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிரபலமான கார். டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான் இது. மொத்தம் 12,251 கார்கள் மொத்தம் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இந்த கார் விற்பனைக்கே வரவில்லை என்பதால் கடந்தாண்டு விற்பனையோடு ஒப்பீடு செய்ய இயலாது. இந்த காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கத் துவங்கிவிட்டனர்.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

5வது இடத்தில் இருக்கும் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார். இந்த கார் சமீபத்தில் தான் அப்டேட் செய்யப்பட்டது என்பதால் இந்த காருக்கான புக்கிங் குவிய துவங்கியுள்ளது. இந்த கார் கடந்த செப் மாதம் மட்டும் மொத்தம் 11,033 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்., மாதம் வெறம் 7924 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 39.2 சதவீத வளர்ச்சியாகும்.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

6வது இடத்தில் கியா நிறுவனத்தின் செல்டாஸ் கார் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 11,000 செல்டாஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 9583 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஆக மொத்தம் 15 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டாப் 10 பட்டியலிலேயே குறைவான விற்பனை வளர்ச்சி பெற்ற கார் இது தான்.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

7வது இடத்தில் இருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 9536 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 2588 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இது 268 சதவீத வளர்ச்சியாகும். ஸ்கார்பியோ காரின் இந்த வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் சமீபத்தில் அந்நிறுவனம் ஸ்கார்பியோ என் காரை அறிமுகப்படுத்தியது. அதற்கான புக்கிங் குவிந்ததும் முக்கியமான காரணம்.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

பட்டியலில் 8வது இடத்தில் கியா சோனட் கார் இருக்கிறது. டாப் 10 பட்டியலில் வரும் 2வது கியா கார் இது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 9291 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு வெறும் 4454 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் 109 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

பட்டியலில் கடைசி 2 இடங்களில் முறையே மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் எக்ஸ்யூவி 700 ஆகிய கார்கள் இருக்கின்றன. எஸ்யூவி 300 கார் மொத்தம் 6080 கார்கள் விற்பனையாகியுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை மொத்தம் 6063 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு செப்., மாதம் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் மொத்தம் 3693 கார்களும், எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை மொத்தம் 1370 வாகனங்களும் விற்பனையாகி வருகிறது.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

இந்த பட்டியலைப் பார்த்தால் அனைத்து நிறுவனங்களின் கார்களும் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்திருக்கும் குறிப்பாக பிரெஸ்ஸா கார் எல்லாம் 700 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் கடந்தாண்டு நிலவிய செமி கண்டெக்டர் சிப் தட்டுப்பாடு. இந்த காலகட்டத்தில் சிப் தட்டுப்பாடு காராக கார்களின் உற்பத்தியே பாதிக்கப்பட்டிருந்தன. அதனால் விற்பனையும் மந்தமாகிக் கிடந்தது. தற்போது நிலைமை சற்று சரியாகியுள்ளது. சிப்களும் கிடைக்கத் துவங்கிவிட்டன.

ஒரே வருசத்துல இவ்வளவு வளர்ச்சிக்கு என்ன காரணம் . . . முழு விபரங்கள் இதோ . . .

மீண்டும் உற்பத்தி பழைய நிலைக்கு வந்த நிலையில் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இது தான். இவ்வளவு அதிகமான வளர்ச்சிக்கு முக்கியமான காரணம். இந்த செய்தி குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles

English summary
Why are September car sales record high when comparing same period 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X