காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

கார்களில் இருக்கைகளுக்கு மேல் வழங்கப்படும் ஹெட்ரெஸ்ட்கள் எனப்படும் தலையணைகளை எப்போதும் காரில் இருந்து நீக்கவே கூடாது. அது ஏன் என்பதற்கான காரணங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

சில வாரங்களுக்கு முன்னர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் இறந்தது நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, காரில் பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போதும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க வேண்டும் என்கிற யோசனையில் அரசாங்கத்தை தள்ளியுள்ளது.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

இதன்படி, சமீபத்தில் கூட டெல்லியில் காரில் பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததற்காக கிட்டத்தட்ட 17 வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அபராதம் விதித்ததை பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள். இத்தகைய நடவடிக்கைகள் குறித்து மத்திய சாலை & போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பின் இருக்கை சீட்-பெல்ட் அணிவதை எச்சரிக்கும் அலாரம் (அ) பீப் சத்தங்கள் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

இத்தகைய அலாரம்கள் தற்போதும் மாடர்ன் கார்களில் கட்டாய பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது. ஆனால் முன் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் மட்டுமே எச்சரிக்க கூடியதாக இது வடிவமைக்கப்படுகிறது. அதேநேரம் ஓட்டுனர்கள் மத்தியில், இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்டை நீக்குவது என்கிற எண்ணம் எழ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, முன் இருக்கை ஹெட்ரெஸ்ட்களை சிலர் நீக்கவும் ஆரம்பித்து விட்டனர்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

ஆனால் இதன் பின்னால் இருக்கும் அபாயத்தை அவர்கள் அறிவது இல்லை. ஏனெனில் ஹெட்ரெஸ்ட் பயணிகளுக்கு கூடுதல் சவுகரியத்தை வழங்குவது மட்டுமின்றி, மோதல் சமயங்களின்போது பாதுகாப்பு அம்சமாகவும் விளங்குகிறது. அதாவது மோதலின்போது பயணிகளின் தலை பின்னோக்கி அழுத்தப்படுவதை தடுக்கும் பொருளாக ஹெட்ரெஸ்ட்கள் விளங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

இதன் காரணமாகவே தற்போதைய மாடர்ன் கார்கள் எதையும் ஹெட்ரெஸ்ட்கள் இல்லாமல் பார்க்க முடிவதில்லை. அதிலிலும் குறிப்பாக, முன் இருக்கையில் ஹெட்ரெஸ்ட்கள் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து கார்களிலும் நிச்சயமாக வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஹெட்ரெஸ்ட் இல்லையென்றால் இருக்கையின் உயரம் குறைவதால், தாழ்வாக அமர்ந்து காரை இயக்குவது போன்ற உணர்வு ஏற்படுவதாக சில ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

இவ்வாறு பயணத்தின் போது தலையை வைத்து கொள்வதற்கு சவுகரியத்தை வழங்குவது மட்டுமின்றி, பல்வேறு நன்மைகளை வழங்கும் ஹெட்ரெஸ்ட்களை பற்றிய வதந்திகளும் கடந்த பல வருடங்களாகவே இணையத்தில் உலா வருகின்றன. குறிப்பாக, மோதல்களின் போது ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கும் விதமாக வேண்டுமென்றே ஹெட்ரெஸ்ட்கள் வடிவமைக்கப்படுவதாக பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

ஆனால் இது உண்மையில்லை. ஹெட்ரெஸ்ட்களினால் உடையும் அளவிற்கு ஜன்னல் கண்ணாடிகள் இப்போதைய காலத்தில் உருவாக்கப்படுவதில்லை. க்ளீனிங் செய்யும்போதும், அட்ஜெஸ்ட்மெண்ட்களுக்கும் அல்லது புதிய இருக்கை கவர்களை மாட்டும்போதும் மட்டுமே ஹெட்ரெஸ்ட்களை கழற்ற வேண்டும். ஆனால் அந்த சமயங்களிலும் மீண்டும் ஹெட்ரெஸ்ட்களை பொருத்தியாக வேண்டும்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

ஹெட்ரெஸ்ட்களின் அவசியம் குறித்து ஆஸ்திரேலியன் புதிய கார் மதிப்பீட்டு பிரோகிராம் (ANCAP) அமைப்பு தெரிக்கையில், ஹெட்ரெஸ்ட்கள் மோதலின்போது தலை பின்னோக்கி தள்ளுபடுவதை தடுக்கும். அதேபோல் பின்னால் இருந்து ஏற்படும் மோதலின் போது பயணிகளின் தலைகள் முன்னோக்கி அழுத்தப்படுவதையும் தவிர்க்கும் விதமாக வடிவமைக்கப்படுகின்றன.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

அதேபோல், முன் இருக்கைகளில் ஹெட்ரெஸ்ட் இருந்தால் மட்டுமே உங்களால் விபத்தின் போது விரியும் ஏர் பேக்கின் பயனை முழுவதுமாக பெற முடியும். இல்லையென்றால், ஏர்பேக் வழங்கப்படுவதே வீண் என்பதுபோல் ஆகிவிடும். இன்னும் சில பேருக்கு அட்ஜெஸ்ட் செய்து பயன்படுத்தும் போதும் ஹெட்ரெஸ்ட் அசவுகரியமாக விளங்கலாம்.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

அதாவது ஹெட்ரெஸ்ட் இல்லையென்றால் இன்னும் எளிமையாக இருக்கும் என அத்தகையவர்கள் கூறுவர். இதற்கு காரணம், தயாரிப்பு நிறுவனங்கள் ஹெட்ரெஸ்ட்களை பயணிகளின் சவுகரியத்திற்காக மட்டுமின்றி, மோதலின்போது பயணியின் தலை மற்றும் கழுத்து பகுதிகளை பாதுகாக்கவும் ஏற்றதாக வடிவமைக்கின்றன.

காரின் இருக்கைகளில் இருந்து இதை மட்டும் கழற்றிவிடாதீர்கள்... இவ்ளோ மேட்டரு இருக்கா!! பலருக்கு தெரிவதில்லை...

இதனாலேயே பெரும்பாலும் இருக்கையில் இருந்து ஹெட்ரெஸ்ட் ஆனது தனித்து தெரிவதுபோல் பொருத்தப்படுகிறது. அதாவது இருக்கைக்கும், ஹெட்ரெஸ்ட்டிற்கு இடைடே சிறிய இடைவெளியாவது இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்படும் ஹெட்ரெஸ்ட்களை காரில் இருந்து கழற்ற எண்ணாதீர்கள்.

Most Read Articles
English summary
Why should never emove car seat headrests car tips
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X