விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்! உண்மையை கேட்டு உச்சு கொட்டும் மக்கள்!

இளைஞர் ஒருவர் அவரது ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள பிம்டபிள்யூ (BMW) சொகுசு காரை ஆற்றில் தள்ளிவிட்ட சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் விலையுயர்ந்த சொகுசு கார் மாடல்களில் எக்ஸ்6 (X6) மாடலும் ஒன்று. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஒரு கோடியே 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன் ரோடில் இதன் விலை ஒன்றரை கோடியை தாண்டும்.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

இது ஓர் சொகுசு அம்சங்கள் நிரப்பப்பட்ட எஸ்யூவி ரக காராகும். இக்காரை சிபியூ வாயிலாக பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. எனவேதான் இதன் விலை மிக மிக அதிகமானதாக இருக்கின்றது. இந்த கார் அதிக திறன் வாய்ந்த காரும்கூட. இக்காரில் 3.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

இந்த மோட்டார் வெறும் 5.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இக்காரில் பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், சிபிசி, டிஎஸ்சி, டிடிசி, எலெக்ட்ரிக் ஹேண்ட் பிரேக் என பன்முக அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

இத்தகைய விலையுயர்ந்த சூப்பரான சொகுசு காரையே பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவிரி ஆற்றில் தள்ளிவிட்டு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்ட கிராமவாசிகள் விபத்து அரங்கேறியிருப்பதாக கருதி அச்சமடைந்தனர்.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

தொடர்ந்து, கார் ஒன்று ஆற்றிற்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாக காவல்துறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த மீனவ மக்கள் சிலரின் உதவியுடன் காரை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினர்.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

முதலில் காரில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என ஆய்வு செய்தனர். நல்ல வேலையாக அக்காரில் யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரித்ததில் பெங்களூருவில் உள்ள மஹாலக்ஷ்மி லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஓர் செல்வந்தருக்கு சொந்தமான கார் அது என்பது தெரிய வந்தது.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

Source: times of india

அவரை விசாரித்ததில் போதியளவு தகவல் அவரிடத்தில் இருந்து கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரித்ததில், சமீபத்தில் சொகுசு கார் உரிமையாளரின் தாய் இறந்தது தெரியவந்தது. இந்த நிகழ்வு அவரை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியிருக்கின்றது.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

மேலும், தாயின் பிரிவு அவரை மிகுந்த மன உளைச்சலுடன் அலைய வைத்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் சொகுசு காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்டிருக்கின்றார். தாயை பிரிந்த விரக்தியில் அவரை இதனை செய்திருக்கலாம் என கூறப்படுகின்றது. ஆனால், இந்த நிகழ்வுகுறித்த இன்னும் தெளிவான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

விரக்தியில் கோடி ரூபா பிஎம்டபிள்யூ காரை காவிரி ஆற்றில் தள்ளிவிட்ட நபர்... உண்மை என்னனு தெரிஞ்சா நீங்களே கவலைப்படுவீங்க!

அதேவேலையில், யாரும் வழக்கு தொடராத காரணத்தினால் சொகுசு காரின் உரிமையாளர் மீது எந்த வழக்கு பதியப்படாமல் காவல்துறை விடுவித்திருப்பதாக கூறப்படுகின்றது. ஸ்ரீரங்கபட்னா பகுதியில் அரங்கேறிய இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கின்றது. செல்வந்தர், தாய் மீது இந்தளவு பாசம் வச்சிருந்திருக்காரே என பலரையும் புலம்ப செய்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Young man pulls bmw x6 luxury car into river
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X