இதுல ஒன்னு கைகளுக்கு வந்தாலும் வேற லெவல்ல சீன் போடலாம்.. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த டாப் எஸ்யூவி கார்!

2023 ஆட்டோ எக்ஸ்போ இனிதே அரங்கேறி முடிவுற்றிருக்கின்றது. பார்வையாளர்களுக்காக கடந்த 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கிய 2023 ஆட்டோ எக்ஸ்போ நேற்றுடன் நிறைவுற்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியைக் காண எப்போதும் இல்லாத அளவில் பார்வையாளர்கள் இம்முறை வந்திருக்கின்றனர்.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி 6.36 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை பல முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வருகையை பதிவு செய்யவில்லை என்றாலும், மக்கள் மத்தியில் ஆட்டோ எக்ஸ்போவிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கின்றது. இத்தகைய சூப்பரான நிகழ்ச்சியில் பங்கேற்ற மிக சிறந்த எஸ்யூவி கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

எஸ்யூவி

மாருதி சுஸுகி ஜிம்னி 5-டூர் (Maruti Jimny five-door)

இந்தியர்களின் நீண்ட காலமாக எதிர்பார்ப்பு என இந்த காரை கூறலாம். நிறுவனம் இந்த காரை இப்போது களமிறக்கிவிடும், அப்போது களமிறக்கிவிடும் என காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக ஜிம்னியை மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியது. அறிமுகம் செய்த கையோடு புக்கிங் பணிகளையும் நிறுவனம் தொடங்கியது. இது தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே ஆயிரக் கணக்கில் புக்கிங்கை மாருதி சுஸுகி ஜிம்னி பெற்றது. விலைகூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இந்த அளவு புக்கிங்கை ஜிம்னி குவித்திருப்பது இந்தியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த எஸ்யூவி காரை லாங் வீல் பேஸ் மற்றும் 5 டூர்கள் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. மேலும், இந்தியர்களுக்கு பிரியமான சிறப்பு வசதிகள் பலவற்றுடன் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. குறிப்பாக, அதிக நிற தேர்வுகள் மற்றும் சூப்பரான மைலேஜ் திறன் கொண்டதாக இருக்கும். கே15பி 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வுடனேயே ஜிம்னி விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்த பெட்ரோல் மோட்டாருடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வும் வழங்கப்பட இருக்கின்றது.

எஸ்யூவி

டாடா சைரா (Tata Sierra)

இந்த காரையும் இந்தியர்களின் பெரும் எதிர்பார்ப்பு என கூறலாம். இந்த கார் மடாலை டாடா மோட்டார்ஸ் சென்ற 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்திவிட்டது. இந்த நிலையிலேயே மீண்டும் ஒரு முறை 2023 ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த காரை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த முறையும் கான்செப்ட் மாடலாகவே சைரா காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்தமுறை போன்றில்லாமல் புதிய அம்சங்களுடன் அது காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், மின்சாரம் மற்றும் ஐசிஇ (பெட்ரோல் மற்றும் டீசல்) மோட்டார் தேர்வில் இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எம்ஜி ஹெக்டர் (MG Hector)

எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரையே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. இந்த காரை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக இந்த உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவைப் பயன்படுத்தி எம்ஜி அறிமுகப்படுத்தியது. கணிசமான தோற்ற மாற்றம் மற்றும் பன்முக பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட்டுகன் இக்காரை எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இதன் விலைகள் காட்சிப்படுத்தப்பட்ட அன்றைய தினமே அறிவிக்கப்பட்டுவிட்டன. புதியதாக அட்வானஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் போன்ற அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

எஸ்யூவி

டாடா கர்வ் கான்செப்ட் எஸ்யூவி (Tata Curvv Concept SUV)

டாடா மோட்டார்ஸ் இந்த உலக புகழ்பெற்ற ஆட்டோ எக்ஸ்போவை வெளியீடு செய்த அதன் மற்றொரு தயாரிப்பே கர்வ் ஆகும். இது ஓர் கான்செப்ட் மாடலாகும். விரைவில் இந்த காரையும் உற்பத்தி செய்ய நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது. மேலும், இதையும் நிறுவனம் மின்சாரம் மற்றும் பெட்ரோல் - டீசவ் மோட்டார் தேர்வில் விற்பனைக்கு வழங்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் உற்பத்தி பணிகள் 2024 ஆம் ஆண்டிற்குள் தொடங்கிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Fronx)

மாருதி சுஸுகி நிறுவனமான கார் மாடல்களில் ஒன்றே பலேனோ. இந்த காரை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் புதுமுகமே இந்த ஃப்ரான்க்ஸ். இக்காரை பலேனோவின் க்ராஸோவர் ரக வாகனமாகவே மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கின்றது. கூபே ரக காரை அதிகம் விரும்புவர்களைக் கவரும் பொருட்டு இதனை இந்த வடிவத்தில் உருவாக்கி இருக்கின்றது. மாருதி நிறுவனம் புதிய ஃப்ரான்க்ஸ் காரில் 100 பிஎஸ் திறனை வெளியேற்றக் கூடிய டர்போ பெட்ரோல் மோட்டார் தேர்வுடனேயே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கிவிட்டன. இதற்கும் தற்போது ஆயிரக் கணக்கில் புக்கிங்குகள் கிடைத்திருக்கின்றன.

டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV)

டாடா ஹாரியர் இவி யாரும் எதிர்பார்த்திராத கார் மாடல் ஆகும். இந்த காரை ஆட்டோ எக்ஸ்போ 2023இல் டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. நிறுவனம் வெகு விரைவில் அதன் அல்ட்ராஸ் இவி மற்றும் பஞ்ச் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இவற்றின் வரிசையிலேயே தற்போது டாடா ஹாரியரும் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவல் வெளியிடப்படவில்லை. இதேபோல் இதன் சிறப்புகள் பற்றிய விபரங்களும் அறிவிக்கப்படவில்லை. கூடிய விரைவில் இது பற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 (Toyota Land Cruiser 300)

அரசியல் வாதிகளின் பிரியமான கார் மாடல் என இதனை குறிப்பிடலாம். இந்த கார் களத்தில் இல்லாத காரணத்தினாலேயே ஃபார்ச்சூனர் காருக்கு அரசியல்வாதிகள் மாறி இருக்கின்றனர். ஆனால், இந்த நிலையை வெகு விரைவில் மாற்ற டொயோட்டா திட்டம் போட்டு இருக்கின்றது. நிறுவனம் கூடிய சீக்கிரத்திலேயே தனது எல்சி300 காரை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கார் மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2023இல் அது வெளியீடு செய்தது. முன்பு விற்பனையில் இருந்த எல்சி300ஐக் காட்டிலும் புதியது பல மடங்கு அதிக சிறப்புகள் மற்றும் சொகுசு வசதிகளைத் தாங்கியதாக தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலே பார்த்த கார் மாடல்கள் மட்டுமின்றி ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் இன்னும் பல எஸ்யூவி கார் மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்தவகையில், டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் சிஎன்ஜி கார் மாடலையும், லெக்சஸ் ஆர்எக்ஸ் எஸ்யூவி காரையும், கியா அதன் இவி9 எஸ்யூவி காரையும் காட்சிப்படுத்தியது. இந்த கார்களும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த மிக சிறந்த எஸ்யூவிக்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. பலரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய கார் மாடல்களாக இவை இருந்தன.

Most Read Articles
English summary
10 suv s showcased at auto expo 2023
Story first published: Thursday, January 19, 2023, 20:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X