காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!

டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் டெலிவரி பணிகளும் கூட தற்போது தொடங்கப்பட்டு விட்டன. இதற்கு அடுத்தபடியாக 2.4 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் உடன் அப்டேட் செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த புதிய மாடலின் விலை (Price) வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய மாடலின் விலைகளை டொயோட்டா நிறுவனம் அறிவித்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை டொயோட்டா நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது. விலைகள் அறிவிக்கப்பட்ட பின், வரும் ஏப்ரல் மாதம் டெலிவரி தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!

விலை எவ்வளவு இருக்கும்?

G, GX, VX மற்றும் ZX என மொத்தம் 4 வேரியண்ட்களில் இந்த புதிய மாடல் விற்பனை செய்யப்படும். இதில் GX வேரியண்ட்தான் முதலில் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து எஞ்சிய 3 வேரியண்ட்களின் டெலிவரி பணிகளும் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தொடங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ஆரம்ப விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 27 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.

எத்தனை பேர் போகலாம்?

2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் ZX வேரியண்ட், 7 சீட் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த காரின் எஞ்சிய 3 வேரியண்ட்களும், 7 சீட் மற்றும் 8 சீட் என 2 வகையான ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படவுள்ளது. 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட முன் பக்க க்ரில் அமைப்பு மற்றும் பனி விளக்கு க்ளஸ்ட்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் முன் பக்க பம்பரும் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!

2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு கிடைக்கும். அவை பின்வருமாறு:

  • ஒயிட் பேர்ல் க்ரிஸ்ட்டல்
  • சூப்பர் ஒயிட்
  • சில்வர்
  • ஆட்டிடியூட் பிளாக்
  • அவெண்ட் க்ரேடு ப்ரோன்ஸ்

அத்துடன் அப்டேட் செய்யப்பட்ட புதிய 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சொகுசு வசதிகளுக்கும், பாதுகாப்பு வசதிகளுக்கும் சற்றும் பஞ்சமில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இவ்ளோ வசதிகள் இருக்கா!

8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் ரியர் ஆட்டோ ஏசி, 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், இபிடி, ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் கண்ட்ரோல், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 3 பாயிண்ட் சீட்பெல்ட் ஆகியவை 2023 டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் வழங்கப்பட்டுள்ள முக்கியமான வசதிகள் ஆகும்.

டொயோட்டா இப்போ ரொம்ப பிஸி!

2023 இன்னோவா க்ரிஸ்ட்டா காரானது, நடப்பாண்டில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள மிகவும் முக்கியமான கார்களில் ஒன்றாகும். டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் கார் மட்டுமல்லாது, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி (Toyota Urban Cruiser Hyryder CNG) காரையும் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது. இதை தொடர்ந்து 2023 இன்னோவா க்ரிஸ்ட்டா கார் களத்தில் இறக்கப்படவுள்ளது.

குறைவான விலையில் ஒரு எம்பிவி கார்!

இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி ரக காரை தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவதால், கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். மாருதி சுஸுகி எர்டிகா காரின் டொயோட்டா வெர்ஷன், இன்னோவா க்ரிஸ்ட்டா காரை விட மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
2023 toyota innova crysta india launch delivery details
Story first published: Tuesday, January 31, 2023, 23:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X