டாடா நிறுவனத்தின் ஆர்டரை தட்டி தூக்கிய தனியார் நிறுவனம்! அதானி பார்வை இங்கேயும் பட்டுருச்சா?

இந்தியாவில் அதானி குழுமத்தின் மைனிங் தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் டிரக்குகளை ஹைட்ரஜன் பவர்டு டிரக்குகளாக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக அசோக் லேலேண்ட் பல்லார்டு ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. மக்கள் பலர் இந்த மோகத்தில் எலெக்ட்ரிக் கார்கள், டூவீலர்களை வாங்கி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ரேஞ்ச் தான். ஒரு முறை சார்ஜ் செய்துவிட்டு நீண்ட தூரம் பயணிக்க முடியாது. போகும் வழியில் சார்ஜ் போட்டு விட்டுப் பயணிக்கலாம் என்றாலும் சார்ஜ் ஏற அதிக நேரம் ஆகும்.

டாடா நிறுவனத்தின் ஆர்டரை தட்டி தூக்கிய தனியார் நிறுவனம்! அதானி பார்வை இங்கேயும் பட்டுருச்சா?

பெட்ரோல்/ டீசல் வாகனங்கள் போலச் சுலபமாக இல்லை என்பது மிகப்பெரிய பிரச்சனையாகி வருகிறது. இதற்குத் தீர்வாக பேட்டரி ஸ்வாப்பிங் உள்ளிட்ட தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டாலும், அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பெரு நிறுவனங்கள் எல்லாம் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தொடர்ந்து ஹைட்ரஜன் பவர் ப்யூயல் செல் வாகனங்களைத் தான் அதிகம் விரும்புவார்கள் என நினைக்கத் துவங்கிவிட்டனர்.

இதை யார் விரும்பினார்களோ இல்லையோ இந்தியாவில் முக்கிய பணக்காரர்களின் ஒருவரான அதானி இந்த ரக வாகனத்தை விரும்பிவிட்டார். இதையடுத்து அவர் தனது மைனிங் தொழிலில் பயன்படுத்தப்படும் டிரக்குகளில் ஹைட்ரஜன் பவர்டு டிரக்குகளை களம் இறக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ஹைட்ரஜன் ப்யூயல் செல் எலெக்ட்ரிக் டிரக்குகளை வாங்க முடிவு செய்துவிட்டது.

இதற்காக அந்நிறுவனம் இந்தியாவில் அசோக்லேலேண்ட் நிறுவனத்திடமும், பல்லார்டு என்ற நிறுவனத்திடமும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. பல்லார்டு நிறுவனம் தான் ஹைட்ரஜன் பவரில் இயங்கும் இன்ஜின் மற்றும் ஹைட்ரஜன் செல்களை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமாகும். அந்த இன்ஜினை பயன்படுத்தி டிரக்கை அசோக்லேலேண்ட் நிறுவனம் உருவாக்கப்போகிறது.

இதற்காக அதானி குழுமம் 50 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தைச் செலவு செய்யவுள்ளது. இதன் மூலம் அதானி குழுமத்தின் மைமிங் தொழில் உள்ள சோர்ஸிங், டிரான்ஸ்போர்ட்டிங் ஆகிய பிரிவுகளில் உள்ள வாகனங்கள் எல்லாம் ஹைட்ரஜன் பவர் வாகனங்களாகப் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஆண்டிற்கு 3 டன் அளவிலான ஹைட்ரஜை ஃப்யூயலை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹைட்ரஜன் வாகன திட்டம் அதானி குழுமம் எதிர்பார்த்தது போல் வெற்றி பெற்றுவிட்டால் இதை மைனிங் மட்டுமட்டுமல்லாமல் அந்த குழுமம் நடத்தி வரும் துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட இந்த வாகனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என அதானி குழுமத்தின் இயக்குநர் வினய் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தற்போது மைனிங் தொழிலுக்காக தயாரிக்கப்போகும். டிரக் 55 டன் எடையைத் தாங்கும் அளவிற்குத் திறன் கொண்டதாகவும், 3 ஹைட்ரனஜன் டேங்க்களை கொண்ட டிரக்காக வடிவமைக்கப்படுகிறது. மேலும் இது முழு டேங்க் ஹைட்ரஜன் உடன் 200 கி.மீ வரை இயங்கும் திறன் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த வாகனத்திற்கு பல்லார்டு நிறுவனம் 120 கிலோ வாட் பிஇஎம் ஃப்யூயல் செல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. வழக்கமாக இப்படியா ஆர்டர்கள் எல்லாம் டாடா நிறுவனத்திற்குத் தான் கிடைக்கும். ஆனால் இந்த முறை அசோக்லேலேண்ட் நிறுவனம் இந்த ஆர்டரை தட்டி தூக்கியுள்ளது.

இந்த டிரக் இந்த 2023ம் ஆண்டே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிரக் வந்துவிட்டால் ஒட்டு மொத்த டிரக் உலகிலேயே மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய தூரம் பயணம் செய்யும் டிரக்குககள் எல்லாம் ஹைட்ரஜன் ஃப்யூயல் டிரக்குகளாக மாற வாய்ப்பு இருக்கிறது. தினமும் 150 கி.மீ உள் பயணம் செய்யும் வாகனங்களுக்கு ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் ஏற்றது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Adani Enterprises to deploy hydrogen powered trucks for transportation
Story first published: Thursday, January 19, 2023, 9:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X